1. {மக்களினங்களுக்கு ஒளி இஸ்ரயேல்} [PS] [QS][SS] தீவு நாட்டினரே, எனக்குச்[SE][SS] செவிகொடுங்கள்;[SE][SS] தொலைவாழ் மக்களினங்களே,[SE][SS] கவனியுங்கள்;[SE][SS] கருப்பையில் இருக்கும்போதே[SE][SS] ஆண்டவர் என்னை அழைத்தார்;[SE][SS] என் தாய் வயிற்றில் உருவாகும் போதே[SE][SS] என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். [* எரே 1:5. ] [SE][QE]
2. [QS][SS] என் வாயைக்[SE][SS] கூரான வாள்போன்று ஆக்கினார்;[SE][SS] தம் கையின் நிழலால்[SE][SS] என்னைப் பாதுகாத்தார்;[SE][SS] என்னைப் பளபளக்கும்[SE][SS] அம்பு ஆக்கினார்;[SE][SS] தம் அம்பறாத் துணியில்[SE][SS] என்னை மறைத்துக் கொண்டார். [* எபி 4:12; திவெ 1:16. ] [SE][QE]
3. [QS][SS] அவர் என்னிடம், ‘நீயே என் ஊழியன்,[SE][SS] இஸ்ரயேலே! உன் வழியாய்[SE][SS] நான் மாட்சியுறுவேன்’ என்றார்.[SE][QE]
4. [QS][SS] நானோ, ‘வீணாக நான் உழைத்தேன்:[SE][SS] வெறுமையாகவும் பயனின்றியும்[SE][SS] என் ஆற்றலைச் செலவழித்தேன்:[SE][SS] ஆயினும் எனக்குரிய நீதி[SE][SS] ஆண்டவரிடம் உள்ளது;[SE][SS] என் பணிக்கான பரிசு[SE][SS] என் கடவுளிடம் இருக்கின்றது’ என்றேன்.[SE][QE]
5. [QS][SS] யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும்,[SE][SS] சிதறுண்ட இஸ்ரயேலை[SE][SS] ஒன்று திரட்டவும்[SE][SS] கருப்பையிலிருந்தே ஆண்டவர்[SE][SS] என்னைத் தம் ஊழியனாக[SE][SS] உருவாக்கினார்;[SE][SS] ஆண்டவர் பார்வையில்[SE][SS] நான் மதிப்புப்பெற்றவன்;[SE][SS] என் கடவுளே என் ஆற்றல்;[SE][SS] அவர் இப்பொழுது உரைக்கிறார்:[SE][QE]
6. [QS][SS] அவர் கூறுவது:[SE][SS] யாக்கோபின் குலங்களை[SE][SS] நிலைநிறுத்துவதற்கும்[SE][SS] இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத்[SE][SS] திருப்பிக் கொணர்வதற்கும்[SE][SS] நீ என் ஊழியனாக இருப்பது[SE][SS] எளிதன்றோ?[SE][SS] உலகம் முழுவதும்[SE][SS] என் மீட்பை அடைவதற்கு[SE][SS] நான் உன்னைப் பிற இனத்தாருக்கு[SE][SS] ஒளியாகவும் ஏற்படுத்துவேன். [* எசா 42:6; லூக் 2:32; திப 13:47; 26:23. ] [SE][QE]
7. [QS][SS] மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும்[SE][SS] நாடுகளிடையே[SE][SS] வெறுத்தொதுக்கப்பட்டவரும்[SE][SS] ஆட்சியாளர்களின்[SE][SS] பணியாளருமானவருக்கு[SE][SS] இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான[SE][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “உண்மையுள்ள[SE][SS] ஆண்டவரை முன்னிட்டும்[SE][SS] உம்மைத் தேர்ந்துகொண்ட[SE][SS] இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும்[SE][SS] அரசர்கள் உம்மைக் கண்டு[SE][SS] எழுந்து நிற்பர்;[SE][SS] தலைவர்கள் உம்முன்[SE][SS] தலை வணங்குவர்.”[SE][PE][QE]
8. {எருசலேம் மீட்கப்படுதல்} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] தகுந்த வேளையில்[SE][SS] நான் உமக்குப் பதிலளித்தேன்;[SE][SS] விடுதலை நாளில்[SE][SS] உமக்குத் துணையாய் இருந்தேன்;[SE][SS] நாட்டை மீண்டும் நிலைநாட்டவும்[SE][SS] பாழடைந்து கிடக்கும்[SE][SS] உரிமைச் சொத்துகளை[SE][SS] உடைமையாக்கவும்[SE][SS] நான் உம்மைப் பாதுகாத்து[SE][SS] மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக[SE][SS] ஏற்படுத்தினேன். [* 2 கொரி 6:2. ] [SE][QE]
9. [QS][SS] சிறைப்பட்டோரிடம்,[SE][SS] ‘புறப்படுங்கள்’ என்றும்[SE][SS] இருளில் இருப்போரிடம்[SE][SS] ‘வெளிப்படுங்கள்’ என்றும் சொல்வீர்கள்.[SE][SS] பாதையில் அவர்களுக்கு[SE][SS] மேய்ச்சல் கிடைக்கும்;[SE][SS] வறண்ட குன்றுகள் அனைத்திலும்[SE][SS] பசும் புல்வெளிகளைக் காண்பர்.[SE][QE]
10. [QS][SS] அவர்கள் பசியடையார்; தாகமுறார்;[SE][SS] வெப்பக் காற்றோ, வெயிலோ[SE][SS] அவர்களை வாட்டுவதில்லை.[SE][SS] ஏனெனில்,[SE][SS] அவர்கள்மேல் கருணை காட்டுபவர்[SE][SS] அவர்களை நடத்திச் செல்வார்;[SE][SS] அவர் அவர்களை[SE][SS] நீரூற்றுகள் அருகே வழிநடத்துவார். [* திவெ 7:16-17.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] என் மலைகள் அனைத்தையும்[SE][SS] வழியாக அமைப்பேன்;[SE][SS] என் நெடுஞ்சாலைகள் உயர்த்தப்படும்.[SE][QE]
12. [QS][SS] இதோ, இவர்கள்[SE][SS] தொலையிலிருந்து வருவார்கள்;[SE][SS] சிலர் வடக்கிலிருந்தும்[SE][SS] சிலர் மேற்கிலிருந்தும்[SE][SS] சிலர் சீனிம் நாட்டிலிருந்தும்[SE][SS] வருவார்கள்.[SE][QE]
13. [QS][SS] வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்;[SE][SS] மண்ணுலகே, களிகூரு;[SE][SS] மலைகளே, அக்களித்து[SE][SS] ஆர்ப்பரியுங்கள்;[SE][SS] ஆண்டவர் தம் மக்களுக்கு[SE][SS] ஆறுதல் அளித்துள்ளார்;[SE][SS] சிறுமையுற்ற தம் மக்கள்மீது[SE][SS] இரக்கம் காட்டியுள்ளார்.[SE][QE]
14. [QS][SS] சீயோனோ, ‘ஆண்டவர்[SE][SS] என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்;[SE][SS] என் தலைவர் என்னை[SE][SS] மறந்து விட்டார்’ என்கிறாள்.[SE][QE]
15. [QS][SS] பால்குடிக்கும் தன் மகவைத்[SE][SS] தாய் மறப்பாளோ?[SE][SS] கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது[SE][SS] இரக்கம் காட்டாதிருப்பாளோ?[SE][SS] இவர்கள் மறந்திடினும்,[SE][SS] நான் உன்னை மறக்கவே மாட்டேன்.[SE][QE]
16. [QS][SS] இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை[SE][SS] நான் பொறித்து வைத்துள்ளேன்.[SE][SS] உன் சுவர்கள் எப்பொழுதும்[SE][SS] என் கண்முன் நிற்கின்றன.[SE][QE]
17. [QS][SS] உன் பிள்ளைகள் விரைந்து வருவர்;[SE][SS] உன்னை அழித்துப் பாழாக்கியோரும்[SE][SS] உன்னை விட்டுப் போய்விடுவர்.[SE][QE]
18. [QS][SS] உன் கண்களை உயர்த்திச்[SE][SS] சுற்றிலும் பார்;[SE][SS] அவர்கள் அனைவரும் உன்னிடம்[SE][SS] ஒருங்கே வருகின்றனர்;[SE][SS] என் உயிர்மேல் ஆணை![SE][SS] நீ அவர்கள் அனைவரையும்[SE][SS] அணிகலன்போல் அணிந்துகொள்வாய்;[SE][SS] மணப்பெண் அணிவதுபோல்[SE][SS] அணிந்துகொள்வாய், என்கிறார்[SE][SS] ஆண்டவர்.[SE][QE]
19. [QS][SS] பாழடைந்து, அழிந்து, மண் மேடாய்ப் போன[SE][SS] உன் நாட்டின் பகுதிகள்[SE][SS] இப்பொழுது மக்கள் குடியிருப்பதற்கு[SE][SS] மிகவும் குறுகியதாயிருக்கும்;[SE][SS] முன்பு உன்னை விழுங்கியவர்[SE][SS] உன்னைவிட்டு[SE][SS] வெகு தொலைவுக்குச் செல்வர்.[SE][QE]
20. [QS][SS] உன் துக்க காலத்தில் பிறந்த[SE][SS] உன் பிள்ளைகள் உன் செவிகளில்[SE][SS] ‘இந்த இடம் எங்களுக்கு மிகவும்[SE][SS] நெருக்கடியாய் இருக்கிறது;[SE][SS] நாங்கள் குடியிருக்கப்[SE][SS] போதிய இடம் தாரும்’ என்பர்.[SE][QE]
21. [QS][SS] அப்போது நீ, ‘இவர்களை[SE][SS] எனக்கெனப் பெற்றெடுத்தவர் யார்?[SE][SS] நான் பிரிவுத் துயரால் வாடினேன்![SE][SS] மலடியாய் இருந்தேன்![SE][SS] நாடு கடத்தப்பட்டுத் துரத்தப்பட்டேன்![SE][SS] அப்படியிருக்க[SE][SS] இவர்களை ஆளாக்கிவிட்டவர் யார்?[SE][SS] நான் தன்னந்தனியளாய்[SE][SS] விடப்பட்டிருக்க,[SE][SS] எங்கிருந்து, இவர்கள் வந்தார்கள்?’[SE][SS] என்று உன் உள்ளத்தில்[SE][SS] சொல்லிக் கொள்வாய்.[SE][QE]
22. [QS][SS] என் தலைவராகிய ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே:[SE][SS] வேற்றினத்தாருக்கு நேராக[SE][SS] என் கையை உயர்த்துவேன்;[SE][SS] மக்களினங்களை நோக்கி[SE][SS] என் அடையாளக் கொடியை ஏற்றுவேன்;[SE][SS] அவர்கள் உன் புதல்வரை[SE][SS] மார்பில் ஏந்திக் கொண்டுவருவர்;[SE][SS] உன் புதல்வியரைத் தம்[SE][SS] தோள்மேல் வைத்துத் தூக்கி வருவர்.[SE][QE]
23. [QS][SS] அரசர்கள் உன் வளர்ப்புத் தந்தையர் ஆவர்;[SE][SS] அவர்கள் அரசியர்[SE][SS] உங்கள் செவிலித்தாயர் ஆவர்;[SE][SS] முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து[SE][SS] அவர்கள் உன்னை வணங்குவர்;[SE][SS] உன் காலடிப் புழுதியை நக்குவர்;[SE][SS] நானே ஆண்டவர் என்பதையும்,[SE][SS] எனக்காகக் காத்திருப்போர்[SE][SS] வெட்கமடையார் என்பதையும்[SE][SS] அப்பொழுது நீ அறிந்து கொள்வாய்.[SE][QE]
24. [QS][SS] வலியோனின் கையினின்று,[SE][SS] கொள்ளைப் பொருளைப் பறிக்கக் கூடுமா?[SE][SS] வெற்றி வீரனிடமிருந்து,[SE][SS] சிறைப்பட்டோர் தப்ப இயலுமா?[SE][QE]
25. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] சிறைப்பட்டோர் வலியோனிடம் இருந்து[SE][SS] விடுவிக்கப்படுவர்; கொள்ளைப்பொருள்[SE][SS] கொடியவன் கையினின்று மீட்கப்படும்;[SE][SS] உன்னை எதிர்த்துப் போராடுபவருடன்[SE][SS] நானும் போராடுவேன்;[SE][SS] உன் பிள்ளைகளை விடுவிப்பேன்.[SE][QE]
26. [QS][SS] உன்னை ஒடுக்குவோர்[SE][SS] தங்கள் சதையை உண்ணச்செய்வேன்;[SE][SS] அவ்வாறு தங்கள் இரத்தத்தை[SE][SS] இனிய இரசம்போல் குடித்து வெறிப்பர்;[SE][SS] அப்பொழுது மானிடர் யாவரும்,[SE][SS] நானே ஆண்டவர், உன் விடுதலையாளர்,[SE][SS] உன் மீட்பர், யாக்கோபின் வல்லவர்’[SE][SS] என்று அறிந்து கொள்வர்.[SE][PE]