1. {ஆண்டவர் வருங்காலத்தின் தலைவர்} [PS] [QS][SS] யாக்கோபின் வீட்டாரே! இதற்குச்[SE][SS] செவிகொடுங்கள்;[SE][SS] நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால்[SE][SS] அழைக்கப்படுகிறீர்கள்;[SE][SS] யூதாவெனும் ஊற்றினின்று[SE][SS] தோன்றியுள்ளீர்கள்;[SE][SS] ஆண்டவரின் பெயரால்[SE][SS] ஆணையிடுகின்றீர்கள்;[SE][SS] இஸ்ரயேலின் கடவுளைப்[SE][SS] புகழ்கின்றீர்கள்.[SE][SS] ஆயினும், உண்மையுடனும்[SE][SS] நேர்மையுடனும்[SE][SS] இவற்றைச் செய்வதில்லை.[SE][QE]
2. [QS][SS] ‘திரு நகரினர்’ என்று உங்களைப் பற்றிச்[SE][SS] சொல்லிக்கொள்கின்றீர்கள்;[SE][SS] இஸ்ரயேலின் கடவுளையே[SE][SS] சார்ந்து நிற்கின்றீர்கள்;[SE][SS] ‘படைகளின் ஆண்டவர்’ என்பது[SE][SS] அவர்தம் பெயராம்![SE][QE]
3. [QS][SS] பண்டைய நிகழ்ச்சிகளை[SE][SS] முன்கூட்டியே அறிவித்தேன்;[SE][SS] என் வாய் மொழிந்தவற்றை[SE][SS] அவர்கள் கேட்கச் செய்தேன்;[SE][SS] திடீரெனச் செயல்பட்டேன்;[SE][SS] யாவும் நிகழ்ந்தன.[SE][QE]
4. [QS][SS] நீ பிடிவாத குணமுடையவன்;[SE][SS] உன் கழுத்து இரும்புத் தசைநார்;[SE][SS] உன் நெற்றி வெண்கலம்;[SE][SS] இதை நான் அறிவேன்.[SE][QE]
5. [QS][SS] எனவே அவற்றை முன்கூட்டியே[SE][SS] உனக்கு அறிவித்தேன்;[SE][SS] அவை நிகழ்வதற்குமுன்[SE][SS] உனக்குத் தெரியப்படுத்தினேன்;[SE][SS] ‘என் சிலை அவற்றைச் செய்தது;[SE][SS] நான் வார்த்த வடிவமும்[SE][SS] செதுக்கிய உருவமும்[SE][SS] அவற்றைக் கட்டளையிட்டன’ என்று[SE][SS] நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.[SE][QE]
6. [QS][SS] முன்பு நீ கேட்டாய்; இப்போது[SE][SS] அவை அனைத்தையும் காண்கின்றாய்;[SE][SS] அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ?[SE][SS] இதுமுதல் புதியனவற்றையும்[SE][SS] நீ அறியாத மறைபொருள்களையும்[SE][SS] உனக்கு வெளிப்படுத்துவேன்.[SE][QE]
7. [QS][SS] பண்டைக்காலத்தில் அல்ல,[SE][SS] அவை இப்பொழுதுதான்[SE][SS] உருவாக்கப்பட்டன;[SE][SS] இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை;[SE][SS] அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை;[SE][SS] ‘அவைபற்றி எனக்குத் தெரியும்’ என[SE][SS] நீ கூறவும் முடியாது.[SE][QE]
8. [QS][SS] உண்மையிலே நீ[SE][SS] கேள்விப்படவுமில்லை; அறியவும் இல்லை;[SE][SS] முன்பிருந்தே உன் செவிகள்[SE][SS] திறந்திருக்கவில்லை;[SE][SS] ஏனெனில், நீ ‘ஏமாற்றுப் பேர்வழி,[SE][SS] கருப்பையிலிருந்தே கலகக்காரன்’[SE][SS] என்று பெயர்பெற்றவன்;[SE][SS] இதை நான் உறுதியாய் அறிவேன்.[SE][QE]
9. [QS][SS] என் பெயரின் பொருட்டு[SE][SS] என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்;[SE][SS] என் புகழை முன்னிட்டு[SE][SS] உன்னை வெட்டி வீழ்த்தாமல்,[SE][SS] உனக்காக அதைக்[SE][SS] கட்டுப்படுத்துகின்றேன்.[SE][QE]
10. [QS][SS] நான் உன்னைப் புடமிட்டேன்;[SE][SS] ஆனால், வெள்ளியைப் போலல்ல;[SE][SS] துன்பம் எனும் உலை வழியாய்[SE][SS] உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.[SE][QE]
11. [QS][SS] என்பொருட்டே, என்னை முன்னிட்டே[SE][SS] அதைச் செய்கின்றேன்;[SE][SS] என் பெயரை[SE][SS] எங்ஙனம் களங்கப்படுத்தலாம்?[SE][SS] என் மாட்சியை நான்[SE][SS] எவருக்கும் விட்டுக்கொடேன்.[SE][QE]
12. [QS][SS] நான் அழைத்திருக்கும் யாக்கோபே,[SE][SS] இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு;[SE][SS] நானே அவர்; தொடக்கமும் நானே;[SE][SS] முடிவும் நானே.[SE][QE]
13. [QS][SS] என் கையே மண்ணுலகிற்கு[SE][SS] அடித்தளமிட்டது;[SE][SS] என் வலக்கை[SE][SS] விண்ணுலகை விரித்து வைத்தது.[SE][SS] நான் அழைக்கும்போது[SE][SS] அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன. [* எசா 44:6; திவெ 1:17; 22:13 ] [SE][QE]
14. [QS][SS] நீங்கள் அனைவரும்[SE][SS] கூடிவந்து கேளுங்கள்;[SE][SS] அவர்களுள் இவற்றை[SE][SS] அறிவித்தவர் யார்?[SE][SS] ஆண்டவரின் அன்புக்குரியவன்,[SE][SS] பாபிலோனில் அவர் விரும்பியதைச்[SE][SS] செய்வான்; அவன் புயம்[SE][SS] கல்தேயருக்கு எதிராக எழும்.[SE][QE]
15. [QS][SS] நான், நானேதான்[SE][SS] அதைக் கூறினேன்;[SE][SS] நான் அவனை அழைத்தேன்;[SE][SS] நானே அவனைக்கொண்டு வந்தேன்,[SE][SS] அவன் தன்வழியில்[SE][SS] வெற்றி காண்பான்.[SE][QE]
16. [QS][SS] என் அருகில் வந்து[SE][SS] இதைக் கேளுங்கள்;[SE][SS] தொடக்கமுதல் நான்[SE][SS] மறைவாகப் பேசியதில்லை;[SE][SS] அது நிகழ்ந்த காலம் முதல்,[SE][SS] நான் அங்கே இருக்கின்றேன்.[SE][SS] இப்பொழுது[SE][SS] என் தலைவராகிய ஆண்டவர்[SE][SS] என்னையும் அவர்தம் ஆவியையும்[SE][SS] அனுப்பியுள்ளார்.[SE][PE][QE]
17. {தம் மக்களைப் பற்றிய ஆண்டவரின் திட்டம்} [PS] [QS][SS] இஸ்ரயேலின் தூயவரும்[SE][SS] உன் மீட்பருமான ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே:[SE][SS] உன் கடவுளாகிய ஆண்டவர் நானே![SE][SS] பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும்[SE][SS] செல்லவேண்டிய வழியில்[SE][SS] உன்னை நடத்துபவரும் நானே![SE][QE]
18. [QS][SS] என் கட்டளைக்குச்[SE][SS] செவிசாய்த்திருப்பாயானால்,[SE][SS] உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும்,[SE][SS] உன் வெற்றி கடல் அலை போலும்,[SE][SS] பாய்ந்து வந்திருக்கும்.[SE][QE]
19. [QS][SS] உன் வழிமரபினர் மணல் அளவாயும்,[SE][SS] உன் வழித்தோன்றல்கள்[SE][SS] கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்;[SE][SS] அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்;[SE][SS] அவர்கள் பெயர் என் திருமுன்னின்று[SE][SS] அழிக்கப்பட்டிராது.[SE][QE]
20. [QS][SS] பாபிலோனிலிருந்து[SE][SS] புறப்பட்டுச் செல்லுங்கள்;[SE][SS] கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்;[SE][SS] ஆரவாரக் குரலெழுப்பி[SE][SS] இதை முழங்கி அறிவியுங்கள்;[SE][SS] உலகின் எல்லைவரை[SE][SS] இதை அறியச் செய்யுங்கள்;[SE][SS] ‘தம் ஊழியன் யாக்கோபை[SE][SS] ஆண்டவர் மீட்டுவிட்டார்’ என்று[SE][SS] சொல்லுங்கள்.[SE][QE]
21. [QS][SS] அவர் அவர்களைப் பாலைநிலங்களில்[SE][SS] நடத்திச் சென்றபோது[SE][SS] அவர்கள் தாகமடையவில்லை;[SE][SS] பாறையிலிருந்து அவர்களுக்கு[SE][SS] நீர் சுரக்கச் செய்தார்;[SE][SS] பாறையைப் பிளந்தார்,[SE][SS] நீர் பாய்ந்து வந்தது. [* திவெ 18:4 ] [SE][QE]
22. [QS][SS] ‘தீயோர்க்கு அமைதி இல்லை’[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][PE]