தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. மகள் பாபிலோனே, கன்னிப் பெண்ணே! நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்; மகள் கல்தேயா! அரியணையில் அன்று, தரையினில் அமர்ந்திடு; "மெல்லியலாள் ", "இனியவள்" என்று இனி நீ அழைக்கப்படாய்.
2. எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை; உன் முக்காடுதனை அகற்றிவிடு; உன் மேலாடையைக் களைத்துவிட்டு, உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய்.
3. உன் பிறந்தமேனி திறக்கப்படும்; உன் மானக்கேடு வெளிப்படும்; நான் பழி வாங்குவேன்; எந்த ஆளையும் விட்டுவையேன்.
4. எங்கள் மீட்பரின் பெயர் "படைகளின் ஆண்டவர் "; அவரே "இஸ்ரயேலின் தூயவர் ".
5. மகள் கல்தேயா! இருளுக்குள் புகுந்து மௌனமாய் உட்கார்; இனி நீ "அரசுகளின் தலைவி" என அழைக்கப்படமாட்டாய்.
6. நான் என் மக்கள் மீது சினமுற்றிருந்தேன்; என் உரிமைச் சொத்தைக் களங்கப்படுத்தினேன்; அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்; நீயோ அவர்களுக்குக் கருணை காட்டவில்லை; முதியோராய் இருந்தோர் மீதும் மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய்.
7. "என்றும் தலைவி நானே, என்றாய் நீ; இவற்றை நீ உன் சிந்தையில் கொள்ளவில்லை; பின் விளைவுபற்றி எண்ணிப் பார்க்கவுமில்லை.
8. இன்ப நாட்டம் கொண்டவளே, போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே, "எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை; நான் கைம்பெண் ஆகமாட்டேன்; பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்" என்று தனக்குள் சொல்லிக் கொள்பவளே, இப்பொழுது இதைக் கேள்;
9. இவை இரண்டும் திடீரென ஒரே நாளில் உனக்கு நேரிடும்; பில்லி சூனியங்கள் பலவற்றை நீ கையாண்டாலும், ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும், பிள்ளை இழப்பும் கைம்மையும் முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும்.
10. உன் தீச்செயலில் நீ நம்பிக்கை வைத்தாய்; "என்னைக் காண்பார் யாருமில்லை" என்றாய். உன் ஞானமும் உன் அறிவுத்திறனும் என்னை நெறிபிறழச் செய்தன; "எனக்கு நிகர் நானே, வேறு எவருமில்லை" என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய்.
11. தீமை உன்மேல் திண்ணமாய் வரும்; அது தோன்றும் திக்கை நீ அறியாய்; அழிவு உன்மேல் விழும்; அதற்கு கழுவாய் தேட உன்னால் இயலாது; நீ அறியாத பேரழிவு திடீரென உன்மேல் வரும்.
12. இளமை முதல் நீ முயன்று பயின்ற உன் மந்திரங்களோடும் பில்லி சூனியங்களோடும் வந்து நில்; ஒருவேளை உன்னால் சிறிது வெற்றி பெற முடியும்; ஒருவேளை உன் எதிரியை அச்சுறுத்த முடியும்.
13. திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்; வான்வெளியைக் கணிப்போரும், விண்மீன்களை ஆய்வோரும் நிகழவிருப்பதை அமாவாசைகளில் உனக்கு முன்னுரைப்போரும், வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும்.
14. இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள், நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்; தீப்பிழம்பினின்று தம் உயிரைக் காத்துக்கொள்ள மாட்டார்கள்; அது குளிர்காயப் பயன்படும் தணல் அன்று; எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று.
15. நீ முயன்று பயின்;;றவையும் இவ்வாறே அழிவுறும்; உன் இளமை முதல் நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும் இதுவே நேரும்; ஒவ்வொருவரும் தம் போக்கிலே அலைந்து திரிவார்; உன்னை விடுவிக்க எவரும் இரார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 47 of Total Chapters 66
ஏசாயா 47:30

×

Alert

×

tamil Letters Keypad References