1. {பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] மகள் பாபிலோனே, கன்னிப்[SE][SS] பெண்ணே![SE][SS] நீ இறங்கி வந்து புழுதியில் உட்கார்;[SE][SS] மகள் கல்தேயா! அரியணையில் அன்று,[SE][SS] தரையினில் அமர்ந்திடு;[SE][SS] ‘மெல்லியலாள்’, ‘இனியவள்’ என்று[SE][SS] இனி நீ அழைக்கப்படாய். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
2. [QS][SS] எந்திரக் கற்களைப் பிடித்து மாவரை;[SE][SS] உன் முக்காடுதனை அகற்றிவிடு;[SE][SS] உன் மேலாடையைக் களைந்துவிட்டு,[SE][SS] உன் கால்தெரிய ஆறுகளைக் கடப்பாய். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
3. [QS][SS] உன் பிறந்தமேனி திறக்கப்படும்;[SE][SS] உன் மானக்கேடு வெளிப்படும்;[SE][SS] நான் பழி வாங்குவேன்;[SE][SS] எந்த ஆளையும் விட்டுவையேன். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
4. [QS][SS] எங்கள் மீட்பரின் பெயர்[SE][SS] ‘படைகளின் ஆண்டவர்’;[SE][SS] அவரே ‘இஸ்ரயேலின் தூயவர்’. [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
5. [QS][SS] மகள் கல்தேயா![SE][SS] இருளுக்குள் புகுந்து[SE][SS] மௌனமாய் உட்கார்;[SE][SS] இனி நீ ‘அரசுகளின் தலைவி’ என[SE][SS] அழைக்கப்படமாட்டாய். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
6. [QS][SS] நான் என் மக்கள் மீது[SE][SS] சினமுற்றிருந்தேன்;[SE][SS] என் உரிமைச் சொத்தைக்[SE][SS] களங்கப்படுத்தினேன்;[SE][SS] அவர்களை உன் கையில் ஒப்படைத்தேன்;[SE][SS] நீயோ அவர்களுக்குக்[SE][SS] கருணை காட்டவில்லை;[SE][SS] முதியோராய் இருந்தோர் மீதும்[SE][SS] மிகப் பளுவான நுகத்தைப் பூட்டினாய். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
7. [QS][SS] ‘என்றும் தலைவி நானே, என்றாய் நீ;[SE][SS] இவற்றை நீ உன் சிந்தையில்[SE][SS] கொள்ளவில்லை;[SE][SS] பின் விளைவுபற்றி[SE][SS] எண்ணிப் பார்க்கவுமில்லை. [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
8. [QS][SS] இன்ப நாட்டம் கொண்டவளே,[SE][SS] போலிப் பாதுகாப்புடன் வாழ்பவளே,[SE][SS] ‘எனக்கு நிகர் நானே,[SE][SS] வேறு எவருமில்லை;[SE][SS] நான் கைம்பெண் ஆகமாட்டேன்;[SE][SS] பிள்ளை இழந்து தவிக்கமாட்டேன்’ என்று[SE][SS] தனக்குள் சொல்லிக் கொள்பவளே,[SE][SS] இப்பொழுது இதைக் கேள்: [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ; திவெ 18:7-8.[QE]. ] [SE][QE]
9. [QS][SS] இவை இரண்டும் திடீரென[SE][SS] ஒரே நாளில் உனக்கு நேரிடும்;[SE][SS] பில்லி சூனியங்கள் பலவற்றை[SE][SS] நீ கையாண்டாலும்,[SE][SS] ஆற்றல்மிகு மந்திரங்களை உச்சரித்தாலும்,[SE][SS] பிள்ளை இழப்பும் கைம்மையும்[SE][SS] முழுவடிவில் உன் மேல் வந்தே தீரும். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ; திவெ 18:7-8.[QE]. ] [SE][QE]
10. [QS][SS] உன் தீச்செயலில்[SE][SS] நீ நம்பிக்கை வைத்தாய்;[SE][SS] ‘என்னைக் காண்பார்[SE][SS] யாருமில்லை’ என்றாய்.[SE][SS] உன் ஞானமும் உன் அறிவுத்திறனும்[SE][SS] உன்னை நெறிபிறழச் செய்தன;[SE][SS] ‘எனக்கு நிகர் நானே,[SE][SS] வேறு எவருமில்லை’ என்று[SE][SS] உன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டாய். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
11. [QS][SS] தீமை உன்மேல் திண்ணமாய் வரும்;[SE][SS] அது தோன்றும் திக்கை நீ அறியாய்;[SE][SS] அழிவு உன்மேல் விழும்;[SE][SS] அதற்கு கழுவாய் தேட[SE][SS] உன்னால் இயலாது;[SE][SS] நீ அறியாத பேரழிவு[SE][SS] திடீரென உன்மேல் வரும். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
12. [QS][SS] இளமை முதல் நீ முயன்று பயின்ற[SE][SS] உன் மந்திரங்களோடும்[SE][SS] பில்லி சூனியங்களோடும் வந்து நில்;[SE][SS] ஒருவேளை உன்னால்[SE][SS] சிறிது வெற்றி பெற முடியும்;[SE][SS] ஒருவேளை உன் எதிரியை[SE][SS] அச்சுறுத்த முடியும். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
13. [QS][SS] திட்டங்கள் தீட்டியே நீ சோர்வுற்றாய்;[SE][SS] வான்வெளியைக் கணிப்போரும்,[SE][SS] விண்மீன்களை ஆய்வோரும்[SE][SS] நிகழவிருப்பதை அமாவாசைகளில்[SE][SS] உனக்கு முன்னுரைப்போரும்,[SE][SS] வந்துநின்று உன்னை விடுவிக்கட்டும். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
14. [QS][SS] இதோ, அவர்கள் பதர் போன்றவர்கள்,[SE][SS] நெருப்பு அவர்களைப் பொசுக்கி விடும்;[SE][SS] தீப்பிழம்பினின்று தம் உயிரைக்[SE][SS] காத்துக்கொள்ள மாட்டார்கள்;[SE][SS] அது குளிர்காயப் பயன்படும்[SE][SS] தணல் அன்று;[SE][SS] எதிரே உட்காரத் தக்க கனலும் அன்று. [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][QE]
15. [QS][SS] நீ முயன்று பயின்றவையும்[SE][SS] இவ்வாறே அழிவுறும்;[SE][SS] உன் இளமை முதல்[SE][SS] நீ தொடர்பு கொண்ட வணிகருக்கும்[BR] இதுவே நேரும்;[SE][SS] ஒவ்வொருவரும் தம் போக்கிலே[SE][SS] அலைந்து திரிவார்;[SE][SS] உன்னை விடுவிக்க எவரும் இரார். [* எசா 13:1-14:23; எரே 50:1; 51:64. ] [SE][PE]