தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. [PS] [QS][SS] பேல் கூனிக் குறுகுகின்றது;[SE][SS] நெபோ குப்புற வீழ்கின்றது;[SE][SS] அவற்றின் சிலைகள்[SE][SS] காட்டு விலங்குகள் மீதும்[SE][SS] கால்நடைகள் மீதும்[SE][SS] சுமத்தப்படுகின்றன;[SE][SS] நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின;[SE][SS] களைத்துப்போன விலங்குகளுக்குச்[SE][SS] சுமையாயின.[SE][QE]
2. [QS][SS] அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன;[SE][SS] கூனிக் குறுகுகின்றன;[SE][SS] தங்களைச் சுமந்தவர்களை[SE][SS] அவற்றால் விடுவிக்க இயலவில்லை;[SE][SS] அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.[SE][QE]
3. [QS][SS] யாக்கோபு வீட்டாரே,[SE][SS] இஸ்ரயேல் குடும்பத்தாருள்[SE][SS] எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே,[SE][SS] செவிகொடுங்கள்;[SE][SS] உதரத்திலிருந்தே உங்களைத்[SE][SS] தாங்குபவர் நான்,[SE][SS] கருவிலிருந்தே உங்களைச்[SE][SS] சுமப்பவர் நான்.[SE][QE]
4. [QS][SS] உங்கள் முதுமைவரைக்கும்[SE][SS] நான் அப்படியே இருப்பேன்;[SE][SS] நரை வயதுவரைக்கும்[SE][SS] நான் உங்களைச் சுமப்பேன்;[SE][SS] உங்களை உருவாக்கிய நானே[SE][SS] உங்களைத் தாங்குவேன்;[SE][SS] நானே உங்களைச் சுமப்பேன்;[SE][SS] நானே விடுவிப்பேன்.[SE][QE]
5. [QS][SS] யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்?[SE][SS] யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்?[SE][SS] யாருக்கு நிகராக[SE][SS] என்னை ஒப்பிடுவீர்கள்?[SE][QE]
6. [QS][SS] மக்கள் தம் பையைத் திறந்து[SE][SS] பொன்னைக் கொட்டுகிறார்கள்;[SE][SS] தராசில் வெள்ளியை[SE][SS] நிறுத்துப் பார்க்கிறார்கள்;[SE][SS] பொற்கொல்லனைக் கூலிக்கு[SE][SS] அமர்த்துகிறார்கள்;[SE][SS] அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்;[SE][SS] பின் அதன்முன் வீழ்ந்து[SE][SS] வழிபடுகிறார்கள்.[SE][QE]
7. [QS][SS] அதைத் தூக்கித்[SE][SS] தோள்மேல் சுமந்து போகின்றனர்;[SE][SS] அதற்குரிய இடத்தில்[SE][SS] அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்;[SE][SS] அது அங்கேயே நிற்கிறது;[SE][SS] தன் இடத்திலிருந்து அது பெயராது;[SE][SS] எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும்[SE][SS] அது மறுமொழி தராது;[SE][SS] அவன் துயரத்திலிருந்து[SE][SS] அவனை விடுவிப்பதுமில்லை.[SE][QE]
8. [QS][SS] கலகம் செய்வோரே,[SE][SS] இதை நினைவில் கொள்ளுங்கள்;[SE][SS] கவனத்தில் வையுங்கள்.[SE][QE]
9. [QS][SS] தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை[SE][SS] நினைத்துப் பாருங்கள்;[SE][SS] நானே இறைவன்;[SE][SS] என்னையன்றி வேறு கடவுள் இல்லை;[SE][SS] என்னைப் போன்று வேறு எவரும் இல்லை.[SE][QE]
10. [QS][SS] பின் நிகழவிருப்பதைத்[SE][SS] தொடக்கத்திலே நான் அறிவித்தேன்;[SE][SS] இனி நடப்பனவற்றை[SE][SS] பண்டைக் காலத்திலேயே[SE][SS] முன்னுரைத்தேன்;[SE][SS] “என் திட்டம் நிலைத்திருக்கும்;[SE][SS] என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்”[SE][SS] என்றுரைத்தேன். [* உரோ 9:20 ] [SE][QE]
11. [QS][SS] இரைமேல் பாயும் பறவையைக்[SE][SS] கிழக்கிலிருந்து அழைக்கிறேன்;[SE][SS] என் திட்டத்தைச் செயல்படுத்தும்[SE][SS] ஒருவனைத்[SE][SS] தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்;[SE][SS] சொல்லியவன் நான்;[SE][SS] நானே அதை நிறைவேற்றுவேன்;[SE][SS] திட்டமிட்டவன் நான்;[SE][SS] நானே அதைச் செயல்படுத்துவேன்.[SE][QE]
12. [QS][SS] கடின மனத்தோரே,[SE][SS] வெற்றிக்கு வெகு தொலைவில்[SE][SS] இருப்போரே,[SE][SS] செவி கொடுங்கள்.[SE][QE]
13. [QS][SS] என் வெற்றியை[SE][SS] அருகில் வரவழைத்துள்ளேன்;[SE][SS] அது தொலையில் இல்லை,[SE][SS] என் விடுதலை காலம் தாழ்த்தாது;[SE][SS] சீயோனுக்கு நான்[SE][SS] விடுதலை வழங்குகின்றேன்;[SE][SS] இஸ்ரயேலில் என் மாட்சி[SE][SS] நிலைக்கச் செய்வேன்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 46 / 66
ஏசாயா 46:36
1 பேல் கூனிக் குறுகுகின்றது; நெபோ குப்புற வீழ்கின்றது; அவற்றின் சிலைகள் காட்டு விலங்குகள் மீதும் கால்நடைகள் மீதும் சுமத்தப்படுகின்றன; நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின; களைத்துப்போன விலங்குகளுக்குச் சுமையாயின. 2 அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன; கூனிக் குறுகுகின்றன; தங்களைச் சுமந்தவர்களை அவற்றால் விடுவிக்க இயலவில்லை; அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின. 3 யாக்கோபு வீட்டாரே, இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே, செவிகொடுங்கள்; உதரத்திலிருந்தே உங்களைத் தாங்குபவர் நான், கருவிலிருந்தே உங்களைச் சுமப்பவர் நான். 4 உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்; நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்; உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்; நானே உங்களைச் சுமப்பேன்; நானே விடுவிப்பேன். 5 யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்? யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்? யாருக்கு நிகராக என்னை ஒப்பிடுவீர்கள்? 6 மக்கள் தம் பையைத் திறந்து பொன்னைக் கொட்டுகிறார்கள்; தராசில் வெள்ளியை நிறுத்துப் பார்க்கிறார்கள்; பொற்கொல்லனைக் கூலிக்கு அமர்த்துகிறார்கள்; அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்; பின் அதன்முன் வீழ்ந்து வழிபடுகிறார்கள். 7 அதைத் தூக்கித் தோள்மேல் சுமந்து போகின்றனர்; அதற்குரிய இடத்தில் அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்; அது அங்கேயே நிற்கிறது; தன் இடத்திலிருந்து அது பெயராது; எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும் அது மறுமொழி தராது; அவன் துயரத்திலிருந்து அவனை விடுவிப்பதுமில்லை. 8 கலகம் செய்வோரே, இதை நினைவில் கொள்ளுங்கள்; கவனத்தில் வையுங்கள். 9 தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை நினைத்துப் பாருங்கள்; நானே இறைவன்; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; என்னைப் போன்று வேறு எவரும் இல்லை. 10 பின் நிகழவிருப்பதைத் தொடக்கத்திலே நான் அறிவித்தேன்; இனி நடப்பனவற்றை பண்டைக் காலத்திலேயே முன்னுரைத்தேன்; “என் திட்டம் நிலைத்திருக்கும்; என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்” என்றுரைத்தேன். * உரோ 9:20 11 இரைமேல் பாயும் பறவையைக் கிழக்கிலிருந்து அழைக்கிறேன்; என் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒருவனைத் தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்; சொல்லியவன் நான்; நானே அதை நிறைவேற்றுவேன்; திட்டமிட்டவன் நான்; நானே அதைச் செயல்படுத்துவேன். 12 கடின மனத்தோரே, வெற்றிக்கு வெகு தொலைவில் இருப்போரே, செவி கொடுங்கள். 13 என் வெற்றியை அருகில் வரவழைத்துள்ளேன்; அது தொலையில் இல்லை, என் விடுதலை காலம் தாழ்த்தாது; சீயோனுக்கு நான் விடுதலை வழங்குகின்றேன்; இஸ்ரயேலில் என் மாட்சி நிலைக்கச் செய்வேன்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 46 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References