1. [PS] [QS][SS] பேல் கூனிக் குறுகுகின்றது;[SE][SS] நெபோ குப்புற வீழ்கின்றது;[SE][SS] அவற்றின் சிலைகள்[SE][SS] காட்டு விலங்குகள் மீதும்[SE][SS] கால்நடைகள் மீதும்[SE][SS] சுமத்தப்படுகின்றன;[SE][SS] நீங்கள் பவனி எடுத்தவை பாரம் ஆயின;[SE][SS] களைத்துப்போன விலங்குகளுக்குச்[SE][SS] சுமையாயின.[SE][QE]
2. [QS][SS] அவை ஒருங்கே குப்புற வீழ்கின்றன;[SE][SS] கூனிக் குறுகுகின்றன;[SE][SS] தங்களைச் சுமந்தவர்களை[SE][SS] அவற்றால் விடுவிக்க இயலவில்லை;[SE][SS] அவையும் நாடுகடத்தலுக்கு உள்ளாயின.[SE][QE]
3. [QS][SS] யாக்கோபு வீட்டாரே,[SE][SS] இஸ்ரயேல் குடும்பத்தாருள்[SE][SS] எஞ்சியிருக்கும் அனைத்து மக்களே,[SE][SS] செவிகொடுங்கள்;[SE][SS] உதரத்திலிருந்தே உங்களைத்[SE][SS] தாங்குபவர் நான்,[SE][SS] கருவிலிருந்தே உங்களைச்[SE][SS] சுமப்பவர் நான்.[SE][QE]
4. [QS][SS] உங்கள் முதுமைவரைக்கும்[SE][SS] நான் அப்படியே இருப்பேன்;[SE][SS] நரை வயதுவரைக்கும்[SE][SS] நான் உங்களைச் சுமப்பேன்;[SE][SS] உங்களை உருவாக்கிய நானே[SE][SS] உங்களைத் தாங்குவேன்;[SE][SS] நானே உங்களைச் சுமப்பேன்;[SE][SS] நானே விடுவிப்பேன்.[SE][QE]
5. [QS][SS] யாருக்கு என்னை நிகராக்குவீர்கள்?[SE][SS] யாருக்கு என்னை இணையாக்குவீர்கள்?[SE][SS] யாருக்கு நிகராக[SE][SS] என்னை ஒப்பிடுவீர்கள்?[SE][QE]
6. [QS][SS] மக்கள் தம் பையைத் திறந்து[SE][SS] பொன்னைக் கொட்டுகிறார்கள்;[SE][SS] தராசில் வெள்ளியை[SE][SS] நிறுத்துப் பார்க்கிறார்கள்;[SE][SS] பொற்கொல்லனைக் கூலிக்கு[SE][SS] அமர்த்துகிறார்கள்;[SE][SS] அவன் அதைத் தெய்வமாகச் செய்கிறான்;[SE][SS] பின் அதன்முன் வீழ்ந்து[SE][SS] வழிபடுகிறார்கள்.[SE][QE]
7. [QS][SS] அதைத் தூக்கித்[SE][SS] தோள்மேல் சுமந்து போகின்றனர்;[SE][SS] அதற்குரிய இடத்தில்[SE][SS] அதை நிலைநிறுத்தி வைக்கின்றனர்;[SE][SS] அது அங்கேயே நிற்கிறது;[SE][SS] தன் இடத்திலிருந்து அது பெயராது;[SE][SS] எவன் அதனிடம் கூக்குரல் எழுப்பினாலும்[SE][SS] அது மறுமொழி தராது;[SE][SS] அவன் துயரத்திலிருந்து[SE][SS] அவனை விடுவிப்பதுமில்லை.[SE][QE]
8. [QS][SS] கலகம் செய்வோரே,[SE][SS] இதை நினைவில் கொள்ளுங்கள்;[SE][SS] கவனத்தில் வையுங்கள்.[SE][QE]
9. [QS][SS] தொன்றுதொட்டு நிகழ்ந்தவற்றை[SE][SS] நினைத்துப் பாருங்கள்;[SE][SS] நானே இறைவன்;[SE][SS] என்னையன்றி வேறு கடவுள் இல்லை;[SE][SS] என்னைப் போன்று வேறு எவரும் இல்லை. [* உரோ 9:20. ] [SE][QE]
10. [QS][SS] பின் நிகழவிருப்பதைத்[SE][SS] தொடக்கத்திலே நான் அறிவித்தேன்;[SE][SS] இனி நடப்பனவற்றை[SE][SS] பண்டைக் காலத்திலேயே[SE][SS] முன்னுரைத்தேன்;[SE][SS] “என் திட்டம் நிலைத்திருக்கும்;[SE][SS] என் விருப்பத்தை நிறைவேற்றுவேன்”[SE][SS] என்றுரைத்தேன்.[SE][QE]
11. [QS][SS] இரைமேல் பாயும் பறவையைக்[SE][SS] கிழக்கிலிருந்து அழைக்கிறேன்;[SE][SS] என் திட்டத்தைச் செயல்படுத்தும்[SE][SS] ஒருவனைத்[SE][SS] தொலைநாட்டிலிருந்து வரவழைக்கிறேன்;[SE][SS] சொல்லியவன் நான்;[SE][SS] நானே அதை நிறைவேற்றுவேன்;[SE][SS] திட்டமிட்டவன் நான்;[SE][SS] நானே அதைச் செயல்படுத்துவேன்.[SE][QE]
12. [QS][SS] கடின மனத்தோரே,[SE][SS] வெற்றிக்கு வெகு தொலைவில்[SE][SS] இருப்போரே,[SE][SS] செவி கொடுங்கள்.[SE][QE]
13. [QS][SS] என் வெற்றியை[SE][SS] அருகில் வரவழைத்துள்ளேன்;[SE][SS] அது தொலையில் இல்லை,[SE][SS] என் விடுதலை காலம் தாழ்த்தாது;[SE][SS] சீயோனுக்கு நான்[SE][SS] விடுதலை வழங்குகின்றேன்;[SE][SS] இஸ்ரயேலில் என் மாட்சி[SE][SS] நிலைக்கச் செய்வேன்.[SE][PE][QE]