தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. {சைரசின் நியமனம்} [PS] [QS][SS] சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு[SE][SS] செய்துள்ளார்; பிற இனத்தாரை[SE][SS] அவர்முன் அடிபணியச் செய்வார்.[SE][SS] அரசர்களை அவர்முன்[SE][SS] ஆற்றல் இழக்கச் செய்வார்;[SE][SS] கோட்டை வாயில்களை அவர்முன்[SE][SS] பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்;[SE][SS] அவரது வலக்கையை உறுதியாகப்[SE][SS] பற்றிப் பிடித்துள்ளார்;[SE][SS] அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][QE]
2. [QS][SS] நான் உனக்கு முன்னே சென்று[SE][SS] குன்றுகளைச் சமப்படுத்துவேன்;[SE][SS] செப்புக் கதவுகளை உடைத்து,[SE][SS] இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.[SE][QE]
3. [QS][SS] இருளில் மறைத்துவைத்த[SE][SS] கருவூலங்களையும்[SE][SS] மறைவிடங்களில் ஒளித்துவைத்த[SE][SS] புதையல்களையும்[SE][SS] உனக்கு நான் தருவேன்;[SE][SS] பெயர் சொல்லி உன்னை அழைத்த[SE][SS] இஸ்ரயேலின் கடவுளாகிய[SE][SS] ஆண்டவர் நானே என்பதை[SE][SS] நீ அறியும்படி இதைச் செய்வேன்.[SE][QE]
4. [QS][SS] என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும்[SE][SS] நான் தேர்ந்துகொண்ட[SE][SS] இஸ்ரயேல் பொருட்டும்[SE][SS] பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்;[SE][SS] நீ என்னை அறியாதிருந்தும்[SE][SS] உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.[SE][QE]
5. [QS][SS] நானே ஆண்டவர்;[SE][SS] வேறு எவருமில்லை;[SE][SS] என்னையன்றி வேறு கடவுள் இல்லை;[SE][SS] நீ என்னை அறியாதிருந்தும்[SE][SS] உனக்கு வலிமை அளித்தேன்.[SE][QE]
6. [QS][SS] கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி[SE][SS] மறையும் திசை வரை[SE][SS] என்னையன்றி[SE][SS] வேறு எவரும் இல்லை என்று[SE][SS] மக்கள் அறியும்படி[SE][SS] இதைச் செய்கிறேன்;[SE][SS] நானே ஆண்டவர்;[SE][SS] வேறு எவரும் இல்லை.[SE][QE]
7. [QS][SS] நான் ஒளியை உண்டாக்குகிறேன்;[SE][SS] இருளைப் படைக்கிறேன்;[SE][SS] நல் வாழ்வை அமைப்பவன் நான்;[SE][SS] தீமையைப் படைப்பவனும் நானே;[SE][SS] இவை அனைத்தையும் செய்யும்[SE][SS] ஆண்டவர் நானே.[SE][QE]
8. [QS][SS] வானங்கள், பனிமழையென[SE][SS] வெற்றியை அனுப்பட்டும்;[SE][SS] மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்;[SE][SS] மண்ணுலகம் வாய்திறந்து[SE][SS] விடுதலைக்கனி வழங்கட்டும்,[SE][SS] அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்;[SE][SS] இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே.[SE][QE]
9. [QS][SS] தன்னை உருவாக்கியவரை[SE][SS] எதிர்த்து வழக்காடுபவனுக்கு[SE][SS] ஐயோ கேடு![SE][SS] பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே![SE][SS] களிமண் குயவனிடம்,[SE][SS] ‘நீ என்னைக் கொண்டு[SE][SS] என்ன செய்கிறாய்’ என்றும்[SE][SS] அவன் வனைந்தது அவனிடம்,[SE][SS] ‘உனக்குக் கைத்திறனே இல்லை’[SE][SS] என்றும் கூறுவதுண்டோ? [* உரோ 9:20. ] [SE][PE][QE]
10. {படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவர்} [PS] [QS][SS] தந்தையிடம், ‘நீர் ஏன் என்னை[SE][SS] இப்படிப் பிறப்பித்தீர்’ என்றும்,[SE][SS] தாயிடம், ‘நீ ஏன் என்னை[SE][SS] இப்படிப் பெற்றெடுத்தாய்’ என்றும்[SE][SS] வினவுபவனுக்கு ஐயோ கேடு![SE][QE]
11. [QS][SS] இஸ்ரயேலின் தூயவரும்[SE][SS] அவனை உருவாக்கியவருமான[SE][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “நிகழவிருப்பன குறித்தும்[SE][SS] என் மக்களைப்பற்றியும்[SE][SS] என்னிடம் கேள்வி கேட்பீர்களா?[SE][SS] என் கைவினை பற்றி[SE][SS] எனக்கே கட்டளையிடுவீர்களா?[SE][QE]
12. [QS][SS] நான் உலகை உருவாக்கி[SE][SS] அதன்மேல் மனிதரைப் படைத்தேன்;[SE][SS] என் கைகளே வானத்தை விரித்தன;[SE][SS] அதன் படைத்திரளுக்கு[SE][SS] ஆணையிட்டதும் நானே.[SE][QE]
13. [QS][SS] வெற்றிபெறுமாறு[SE][SS] நான் சைரசை எழுப்பினேன்;[SE][SS] அவன் செல்லும் அனைத்து[SE][SS] வழிகளையும் சீர்படுத்தினேன்;[SE][SS] அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்;[SE][SS] நாடு கடத்தப்பட்ட என் மக்களை[SE][SS] ஈட்டுப்பொருளோ[SE][SS] அன்பளிப்போ பெறாது[SE][SS] திருப்பி அனுப்புவான்” என்கிறார்[SE][SS] படைகளின் ஆண்டவர்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “எகிப்தியர் தம் செல்வத்தோடும்,[SE][SS] எத்தியோப்பியர்[SE][SS] தம் வணிகப் பொருளோடும்[SE][SS] நெடிது வளர்ந்த செபாவியரும்[SE][SS] உனக்கு உடைமையாவர்.[SE][SS] அவர்கள் விலங்கிடப்பட்டு,[SE][SS] உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்;[SE][SS] உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து,[SE][SS] ‘இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்;[SE][SS] வேறெங்கும் இல்லை;[SE][SS] வேறு கடவுளும் இல்லை’ என்பார்கள்.[SE][QE]
15. [QS][SS] மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே,[SE][SS] உண்மையிலேயே நீர்[SE][SS] ‘தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன்’.[SE][QE]
16. [QS][SS] சிலைகளைச் செய்வோர் அனைவரும்[SE][SS] ஒருங்கே வெட்கி நாணினர்;[SE][SS] அவர்கள் குழம்பித் தவித்தனர்.[SE][QE]
17. [QS][SS] ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து[SE][SS] இஸ்ரயேலை விடுவித்தருளினார்;[SE][SS] என்றென்றும் நீங்கள்[SE][SS] வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்;[SE][SS] அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள்.”[SE][QE]
18. [QS][SS] ஏனெனில் விண்ணுலகைப் படைத்த[SE][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] அவரே கடவுள்;[SE][SS] மண்ணுலகைப் படைத்து[SE][SS] உருவாக்கியவர் அவரே;[SE][SS] அதை நிலைநிறுத்துபவரும் அவரே;[SE][SS] வெறுமையாய் இருக்குமாறு படைக்காது,[SE][SS] மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார்.[SE][SS] நானே ஆண்டவர்,[SE][SS] என்னையன்றி வேறு எவரும் இல்லை.[SE][QE]
19. [QS][SS] நான் மறைவிலும்[SE][SS] மண்ணுலகின் இருண்ட பகுதியிலும்[SE][SS] பேசியதில்லை;[SE][SS] ‘வெற்றிடத்தில்[SE][SS] என்னைத் தேடுங்கள்’ என்று[SE][SS] நான் யாக்கோபின் வழிமரபிடம்[SE][SS] சொல்லவில்லை;[SE][SS] ஆண்டவராகிய நான்[SE][SS] உண்மையே பேசுகிறேன்;[SE][SS] நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்;[SE][PE][QE]
20. {உலகத்திற்கும் பாபிலோனின் சிலைகளுக்கும் ஆண்டவர்} [PS] [QS][SS] மக்களினங்களுள்[SE][SS] தப்பிப் பிழைத்தோரே![SE][SS] ஒன்று திரண்டு வாருங்கள்;[SE][SS] ஒருங்கே கூடுங்கள்;[SE][SS] மரத்தால் செய்த தங்கள் சிலையைச்[SE][SS] சுமந்து செல்வோருக்கும்,[SE][SS] விடுதலை வழங்காத தெய்வத்திடம்[SE][SS] தொடர்ந்து மன்றாடுவோருக்கும்[SE][SS] அறிவே இல்லை.[SE][QE]
21. [QS][SS] அறிவியுங்கள்; உங்கள் வழக்கை[SE][SS] எடுத்துரையுங்கள்;[SE][SS] ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்;[SE][SS] தொடக்கத்திலிருந்து[SE][SS] இதை வெளிப்படுத்தியவர் யார்?[SE][SS] முதன் முதலில்[SE][SS] இதை அறிவித்தவர் யார்?[SE][SS] ஆண்டவராகிய நான் அல்லவா?[SE][SS] என்னையன்றிக் கடவுள்[SE][SS] வேறு எவரும் இல்லை;[SE][SS] நீதியுள்ளவரும்[SE][SS] மீட்பு அளிப்பவருமான இறைவன்[SE][SS] என்னையன்றி வேறு எவரும் இல்லை.[SE][QE]
22. [QS][SS] மண்ணுலகின் அனைத்து[SE][SS] எல்லை நாட்டோரே![SE][SS] என்னிடம் திரும்பி வாருங்கள்;[SE][SS] விடுதலை பெறுங்கள்;[SE][SS] ஏனெனில் நானே இறைவன்;[SE][SS] என்னையன்றி வேறு எவருமில்லை.[SE][QE]
23. [QS][SS] நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்;[SE][SS] என் வாயினின்று நீதிநிறை வாக்கு[SE][SS] புறப்பட்டுச் சென்றது;[SE][SS] அது வீணாகத் திரும்பி வராது;[SE][SS] முழங்கால் அனைத்தும்[SE][SS] எனக்குமுன் மண்டியிடும்;[SE][SS] நா அனைத்தும்[SE][SS] என்மேல் ஆணையிடும். [* உரோ 14:11; பிலி 2:10-11.[QE]. ] [SE][QE]
24. [QS][SS] ‘ஆண்டவரில் மட்டும் எனக்கு[SE][SS] நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று[SE][SS] ஒவ்வொருவனும் சொல்லி[SE][SS] அவரிடம் வருவான்;[SE][SS] அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர்[SE][SS] அனைவரும் வெட்கக்கேடு அடைவர்.[SE][QE]
25. [QS][SS] இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும்[SE][SS] ஆண்டவரால்[SE][SS] ஏற்புடையோராகப் பெற்று[SE][SS] அவரைப் போற்றுவர்.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 45 / 66
சைரசின் நியமனம் 1 சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே: 2 நான் உனக்கு முன்னே சென்று குன்றுகளைச் சமப்படுத்துவேன்; செப்புக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன். 3 இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்; பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே என்பதை நீ அறியும்படி இதைச் செய்வேன். 4 என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். 5 நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். 6 கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை. 7 நான் ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல் வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே. 8 வானங்கள், பனிமழையென வெற்றியை அனுப்பட்டும்; மேகங்கள் மாரியென அதைப் பொழியட்டும்; மண்ணுலகம் வாய்திறந்து விடுதலைக்கனி வழங்கட்டும், அதனுடன் நீதி துளிர்க்கச் செய்யட்டும்; இவற்றைச் செய்பவர் ஆண்டவராகிய நானே. 9 தன்னை உருவாக்கியவரை எதிர்த்து வழக்காடுபவனுக்கு ஐயோ கேடு! பானை ஓடுகளில் அவனும் ஓர் ஓடே! களிமண் குயவனிடம், ‘நீ என்னைக் கொண்டு என்ன செய்கிறாய்’ என்றும் அவன் வனைந்தது அவனிடம், ‘உனக்குக் கைத்திறனே இல்லை’ என்றும் கூறுவதுண்டோ? * உரோ 9: 20. படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவர் 10 தந்தையிடம், ‘நீர் ஏன் என்னை இப்படிப் பிறப்பித்தீர்’ என்றும், தாயிடம், ‘நீ ஏன் என்னை இப்படிப் பெற்றெடுத்தாய்’ என்றும் வினவுபவனுக்கு ஐயோ கேடு! 11 இஸ்ரயேலின் தூயவரும் அவனை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: “நிகழவிருப்பன குறித்தும் என் மக்களைப்பற்றியும் என்னிடம் கேள்வி கேட்பீர்களா? என் கைவினை பற்றி எனக்கே கட்டளையிடுவீர்களா? 12 நான் உலகை உருவாக்கி அதன்மேல் மனிதரைப் படைத்தேன்; என் கைகளே வானத்தை விரித்தன; அதன் படைத்திரளுக்கு ஆணையிட்டதும் நானே. 13 வெற்றிபெறுமாறு நான் சைரசை எழுப்பினேன்; அவன் செல்லும் அனைத்து வழிகளையும் சீர்படுத்தினேன்; அவன் என் நகரைக் கட்டியெழுப்புவான்; நாடு கடத்தப்பட்ட என் மக்களை ஈட்டுப்பொருளோ அன்பளிப்போ பெறாது திருப்பி அனுப்புவான்” என்கிறார் படைகளின் ஆண்டவர். 14 ஆண்டவர் கூறுவது இதுவே: “எகிப்தியர் தம் செல்வத்தோடும், எத்தியோப்பியர் தம் வணிகப் பொருளோடும் நெடிது வளர்ந்த செபாவியரும் உனக்கு உடைமையாவர். அவர்கள் விலங்கிடப்பட்டு, உனக்குப் பின்வந்து உன்னைப் பணிவர்; உன்னிடம் தன் மன்றாட்டைச் சமர்ப்பித்து, ‘இறைவன் உம்மிடம்தான் இருக்கிறார்; வேறெங்கும் இல்லை; வேறு கடவுளும் இல்லை’ என்பார்கள். 15 மீட்பரான இஸ்ரயேலின் கடவுளே, உண்மையிலேயே நீர் ‘தம்மை மறைத்துக்கொள்ளும் இறைவன்’. 16 சிலைகளைச் செய்வோர் அனைவரும் ஒருங்கே வெட்கி நாணினர்; அவர்கள் குழம்பித் தவித்தனர். 17 ஆண்டவர் என்றுமுள மீட்பை அளித்து இஸ்ரயேலை விடுவித்தருளினார்; என்றென்றும் நீங்கள் வெட்கக்கேடு அடையமாட்டீர்கள்; அவமதிப்புக்கும் உள்ளாக மாட்டீர்கள்.” 18 ஏனெனில் விண்ணுலகைப் படைத்த ஆண்டவர் கூறுவது இதுவே: அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே; வெறுமையாய் இருக்குமாறு படைக்காது, மக்கள் வாழுமாறு அதை உருவாக்கினார். நானே ஆண்டவர், என்னையன்றி வேறு எவரும் இல்லை. 19 நான் மறைவிலும் மண்ணுலகின் இருண்ட பகுதியிலும் பேசியதில்லை; ‘வெற்றிடத்தில் என்னைத் தேடுங்கள்’ என்று நான் யாக்கோபின் வழிமரபிடம் சொல்லவில்லை; ஆண்டவராகிய நான் உண்மையே பேசுகிறேன்; நேர்மையானவற்றை அறிவிக்கிறேன்; உலகத்திற்கும் பாபிலோனின் சிலைகளுக்கும் ஆண்டவர் 20 மக்களினங்களுள் தப்பிப் பிழைத்தோரே! ஒன்று திரண்டு வாருங்கள்; ஒருங்கே கூடுங்கள்; மரத்தால் செய்த தங்கள் சிலையைச் சுமந்து செல்வோருக்கும், விடுதலை வழங்காத தெய்வத்திடம் தொடர்ந்து மன்றாடுவோருக்கும் அறிவே இல்லை. 21 அறிவியுங்கள்; உங்கள் வழக்கை எடுத்துரையுங்கள்; ஒன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள்; தொடக்கத்திலிருந்து இதை வெளிப்படுத்தியவர் யார்? முதன் முதலில் இதை அறிவித்தவர் யார்? ஆண்டவராகிய நான் அல்லவா? என்னையன்றிக் கடவுள் வேறு எவரும் இல்லை; நீதியுள்ளவரும் மீட்பு அளிப்பவருமான இறைவன் என்னையன்றி வேறு எவரும் இல்லை. 22 மண்ணுலகின் அனைத்து எல்லை நாட்டோரே! என்னிடம் திரும்பி வாருங்கள்; விடுதலை பெறுங்கள்; ஏனெனில் நானே இறைவன்; என்னையன்றி வேறு எவருமில்லை. 23 நான் என்மேல் ஆணையிட்டுள்ளேன்; என் வாயினின்று நீதிநிறை வாக்கு புறப்பட்டுச் சென்றது; அது வீணாகத் திரும்பி வராது; முழங்கால் அனைத்தும் எனக்குமுன் மண்டியிடும்; நா அனைத்தும் என்மேல் ஆணையிடும். [* உரோ 14:11; பிலி 2:10-11.. ] 24 ‘ஆண்டவரில் மட்டும் எனக்கு நீதியும் ஆற்றலும் உண்டு’ என்று ஒவ்வொருவனும் சொல்லி அவரிடம் வருவான்; அவருக்கு எதிராகச் சீறி எழுந்தவர் அனைவரும் வெட்கக்கேடு அடைவர். 25 இஸ்ரயேலின் வழி மரபினர் அனைவரும் ஆண்டவரால் ஏற்புடையோராகப் பெற்று அவரைப் போற்றுவர்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 45 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References