1. {இஸ்ரயேலுக்கு ஆண்டவரின் உறுதிமொழி} [PS] [QS][SS] தீவுகளே, என் திருமுன்னே[SE][SS] மௌனமாயிருங்கள்;[SE][SS] மக்களினங்கள் தம் ஆற்றலைப்[SE][SS] புதுப்பிப்பார்களாக![SE][SS] அருகில் வந்து பேசுவார்களாக![SE][SS] நீதித்தீர்ப்புக்காக[SE][SS] நாம் ஒருங்கே கூடிவருவோமாக![SE][QE]
2. [QS][SS] சென்றவிடமெல்லாம் சிறப்புறும்[SE][SS] நேர்மையாளனைக்[SE][SS] கிழக்கிலிருந்து எழும்பச் செய்தவர் யார்?[SE][SS] மக்களினங்களை[SE][SS] அவனிடம் கையளித்து[SE][SS] அரசர்களை[SE][SS] அவனுக்குக் கீழ்ப்படுத்தியவர் யார்?[SE][SS] அவன் வாள் அவர்களைப்[SE][SS] புழுதியாக்குகிறது;[SE][SS] அவன் வில் அவர்களைப்[SE][SS] பதர்போல் பறக்கச் செய்கிறது.[SE][QE]
3. [QS][SS] அவன் அவர்களைத்[SE][SS] துரத்திச் செல்கின்றான்;[SE][SS] எதிர்ப்பு எதுவுமின்றி[SE][SS] முன்னேறுகின்றான்;[SE][SS] பாதை வழியே[SE][SS] காலடி படாது செல்கின்றான்.[SE][QE]
4. [QS][SS] இவற்றைச்செய்து முடித்தவர் யார்?[SE][SS] தொடக்கத்திலிருந்தே[SE][SS] தலைமுறைகளை அழைத்தவரன்றோ![SE][SS] ஆண்டவராகிய நானே முதலானவர்![SE][SS] முடிவானவற்றுடன்[SE][SS] இருக்கப் போவதும் நானே![SE][QE]
5. [QS][SS] தீவு நாட்டினர்[SE][SS] அதைப் பார்த்து அஞ்சினர்;[SE][SS] உலகின் எல்லைகளில் வாழ்வோர்[SE][SS] நடுநடுங்கினர்; எனவே[SE][SS] அவர்கள் ஒருங்கே கூடி வந்தனர்.[SE][QE]
6. [QS][SS] ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு[SE][SS] உதவி செய்கின்றார்;[SE][SS] தம் அடுத்தவரிடம்,[SE][SS] ‘திடன்கொள்’ என்கின்றார்.[SE][QE]
7. [QS][SS] கைவினைஞர் பொற்கொல்லருக்கு[SE][SS] ஊக்கமூட்டுகின்றார்;[SE][SS] சுத்தியலால் தட்டுபவர்[SE][SS] சம்மட்டியால் அடிப்பவரிடம்,[SE][SS] பற்றவைப்பதுபற்றி, ‘நன்று’[SE][SS] என்று சொல்லி[SE][SS] உற்சாகப்படுத்துகின்றார்;[SE][SS] அசையாதபடி ஆணிகளால்[SE][SS] அதை இறுக்குகின்றார்.[SE][QE]
8. [QS][SS] நீயோ, இஸ்ரயேலே! என் அடியவனே![SE][SS] நான் தெரிந்தெடுத்த யாக்கோபே![SE][SS] என் அன்பன் ஆபிரகாமின் வழிமரபே! [* 2 குறி 20:7; யாக் 2:23.[QE]. ] [SE][QE]
9. [QS][SS] உலகின் எல்லைகளினின்று[SE][SS] உன்னை அழைத்து வந்தேன்;[SE][SS] தொலைநாடுகளினின்று[SE][SS] உன்னை அழைத்தேன்;[SE][SS] ‘நீ என் அடியவன்;[SE][SS] நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்;[SE][SS] உன்னை நான் தள்ளிவிடவில்லை’[SE][SS] என்று சொன்னேன்.[SE][QE]
10. [QS][SS] அஞ்சாதே,[SE][SS] நான் உன்னுடன் இருக்கிறேன்;[SE][SS] கலங்காதே, நான் உன் கடவுள்,[SE][SS] நான் உனக்கு வலிமை அளிப்பேன்;[SE][SS] உதவி செய்வேன்;[SE][SS] என் நீதியின் வலக்கரத்தால்[SE][SS] உன்னைத் தாங்குவேன்.[SE][QE]
11. [QS][SS] உனக்கெதிராய்[SE][SS] வெகுண்டெழுவோர் அனைவரும்[SE][SS] மானக்கேடுற்று இழிநிலை அடைவர்;[SE][SS] உன்னை எதிர்த்து வழக்காடுவோர்[SE][SS] இல்லாதொழிவர்.[SE][QE]
12. [QS][SS] உன்னை எதிர்த்துப் போராடியோரை[SE][SS] நீ தேடுவாய்; ஆனால்[SE][SS] அவர்களைக் கண்டுபிடிக்க மாட்டாய்;[SE][SS] உன்னை எதிர்த்துப் போரிட்டோர்[SE][SS] ஒழிந்து போவர்.[SE][QE]
13. [QS][SS] ஏனெனில் நானே[SE][SS] உன் கடவுளாகிய ஆண்டவர்;[SE][SS] உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து,[SE][SS] “அஞ்சாதே, உனக்குத்[SE][SS] துணையாய் இருப்பேன்” என்று[SE][SS] உன்னிடம் சொல்பவரும் நானே.[SE][QE]
14. [QS][SS] “யாக்கோபு என்னும் புழுவே,[SE][SS] இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே,[SE][SS] அஞ்சாதிரு; நான் உனக்குத்[SE][SS] துணையாய் இருப்பேன்,”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்.[SE][QE]
15. [QS][SS] இதோ, நான் உன்னைப்[SE][SS] புதிய கூர்மையான[SE][SS] போரடிக்கும் கருவியாக்குவேன்.[SE][SS] நீ மலைகளைப்[SE][SS] போரடித்து நொறுக்குவாய்;[SE][SS] குன்றுகளைத் தவிடுபொடியாக்குவாய்.[SE][QE]
16. [QS][SS] அவற்றைத் தூற்றுவாய்,[SE][SS] காற்று அவற்றை வாரிக்கொண்டுபோம்;[SE][SS] புயல் அவற்றைச் சிதறடிக்கும்;[SE][SS] ஆண்டவரில் நீ அகமகிழ்வாய்;[SE][SS] இஸ்ரயேலின் தூயவரில்[SE][SS] மேன்மை அடைவாய்.[SE][QE]
17. [QS][SS] ஏழைகளும் வறியோரும்[SE][SS] நீரைத் தேடுகின்றனர்;[SE][SS] அது கிடைக்கவில்லை.[SE][SS] அவர்கள் தாகத்தால்[SE][SS] நாவறண்டு போகின்றனர்;[SE][SS] ஆண்டவராகிய நான்[SE][SS] அவர்களுக்குப் பதிலளிப்பேன்;[SE][SS] இஸ்ரயேலின் கடவுளாகிய நான்[SE][SS] அவர்களைக் கைவிடமாட்டேன்.[SE][QE]
18. [QS][SS] பொட்டல் மேடுகளைப் பிளந்து[SE][SS] ஆறுகள் தோன்றச் செய்வேன்;[SE][SS] பள்ளத்தாக்குகளில்[SE][SS] நீரூற்றுகள் புறப்படச் செய்வேன்;[SE][SS] பாலைநிலத்தை[SE][SS] நீர்த் தடாகங்களாகவும்[SE][SS] வறண்ட நிலத்தை[SE][SS] நீர்ச் சுனைகளாகவும் மாற்றுவேன்.[SE][QE]
19. [QS][SS] பாலைநிலத்தில்[SE][SS] கேதுரு மரங்களை வளரச் செய்வேன்;[SE][SS] சித்திம் மரம், மிருதுச் செடி,[SE][SS] ஒலிவ மரம் ஆகியன[SE][SS] தோன்றச் செய்வேன்;[SE][SS] பாழ்நிலத்தில்[SE][SS] தேவதாரு மரங்களையும்,[SE][SS] புன்னை மரங்களையும்,[SE][SS] ஊசியிலை மரங்களையும் வைப்பேன்.[SE][QE]
20. [QS][SS] அப்போது, ஆண்டவர் தம் ஆற்றலால்[SE][SS] இதைச்செய்தார் என்றும்[SE][SS] இஸ்ரயேலின் தூயவர்[SE][SS] அதைப் படைத்தார் என்றும்[SE][SS] மக்கள் கண்டு உணர்ந்து கொள்வர்;[SE][SS] ஒருங்கே சிந்தித்துப் புரிந்து கொள்வர்.[SE][PE][QE]
21. {பொய்த் தெய்வங்களுக்கு ஆண்டவரின் அறைகூவல்} [PS] [QS][SS] ‘உங்கள் வழக்கைக் கொண்டு வாருங்கள்’[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] ‘உங்கள் ஆதாரங்களை[SE][SS] எடுத்துரையுங்கள்’, என்கிறார்[SE][SS] யாக்கோபின் அரசர்.[SE][QE]
22. [QS][SS] அத்தெய்வங்கள் அருகில் வந்து,[SE][SS] நிகழப்போவதை நமக்கு அறிவிக்கட்டும்;[SE][SS] முன்னே நடந்தவற்றை[SE][SS] எடுத்துரைக்கட்டும்;[SE][SS] நாம் சிந்தித்து அவற்றின்[SE][SS] இறுதி விளைவை அறிந்து கொள்வோம்;[SE][SS] இல்லாவிடில் வரவிருப்பவற்றை[SE][SS] நமக்கு எடுத்துக்கூறட்டும்.[SE][QE]
23. [QS][SS] “நீங்கள் தெய்வங்கள் என[SE][SS] நாங்கள் உணரும்பொருட்டு[SE][SS] வருங்காலத்தில் நடப்பனவற்றை[SE][SS] எங்களுக்குக் கூறுங்கள்;[SE][SS] நன்மையாவது தீமையாவது[SE][SS] செய்யுங்கள்;[SE][SS] நாங்கள் யாவரும் ஒன்றாகக்கண்டு[SE][SS] திகைத்து நிற்போம்.[SE][QE]
24. [QS][SS] இதோ, நீங்கள் ஒன்றுமில்லாமை![SE][SS] உங்கள் செயலும் ஒன்றுமில்லாமையே![SE][SS] உங்களைத் தேர்ந்துகொள்பவன்[SE][SS] வெறுக்கத்தக்கவன்”.[SE][QE]
25. [QS][SS] நான் வடக்கிலிருந்து[SE][SS] ஒருவனை எழும்பச் செய்தேன்;[SE][SS] அவன் கதிரவன் உதிக்கும்[SE][SS] திசையிலிருந்து வந்துவிட்டான்;[SE][SS] அவன் என் பெயரைப் போற்றுவான்;[SE][SS] ஒருவன் சேற்றைக் குழைப்பதுபோலும்[SE][SS] குயவன் களிமண்ணை மிதிப்பது போலும்[SE][SS] அவன் ஆளுநர்களை நடத்துவான்.[SE][QE]
26. [QS][SS] நாங்கள் அறியும்படி[SE][SS] தொடக்கத்திலிருந்தே[SE][SS] இதை அறிவித்தவர் யார்?[SE][SS] ‘அது சரி’ என்று[SE][SS] நாங்கள் சொல்லும்முன்னரே[SE][SS] உரைத்தவர் யார்?[SE][SS] அப்படி எதுவும் அறிவிக்கவில்லை;[SE][SS] முன்னுரைக்கவில்லை;[SE][SS] நீங்கள் பேசியதை[SE][SS] யாரும் கேட்டதுமில்லை.[SE][QE]
27. [QS][SS] “இதோ வருகிறார்கள்” என்று[SE][SS] முதன்முதலில் சீயோனுக்கு[SE][SS] அறிவித்தது நானே![SE][SS] நற்செய்தியாளரை எருசலேமுக்கு[SE][SS] அனுப்பியதும் நானே![SE][QE]
28. [QS][SS] நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்;[SE][SS] எதையும் காணவில்லை;[SE][SS] அவற்றுள் அறிவுரை வழங்கவோ[SE][SS] என் வினாவுக்கு மறுமொழி தரவோ[SE][SS] எத்தெய்வமும் இல்லை.[SE][QE]
29. [QS][SS] இதோ அவை அனைத்தும்[SE][SS] ஒன்றுமில்லாமையே![SE][SS] அவற்றின் செயல்களும்[SE][SS] ஒன்றுமில்லாமையே![SE][SS] அவற்றின் படிமங்களோ[SE][SS] வெறும் காற்றும் வெறுமையுமே![SE][PE]