1. [PS] [QS][SS] அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு[SE][SS] பெண்கள் பிடித்துக்கொண்டு,[SE][SS] ‟நாங்கள் எங்கள் சொந்த உணவை[SE][SS] உண்டு வாழ்வோம்;[SE][SS] எங்கள் சொந்த ஆடைகளை[SE][SS] உடுத்திக்கொள்வோம்;[SE][SS] உமது பெயரை மட்டும்[SE][SS] எங்களுக்கு வழங்கி எங்கள்[SE][SS] இழிவை நீக்குவீராக” என்பார்கள்.[SE][PE][QE]
2. {எருசலேமின் மறுவாழ்வு} [PS] [QS][SS] அந்நாளில் ஆண்டவரால்[SE][SS] துளிர்க்கும் தளிர்,[SE][SS] அழகும் மேன்மையும்[SE][SS] வாய்ந்ததாய் இருக்கும்;[SE][SS] நாட்டில் விளையும் நற்கனிவகைகள்,[SE][SS] இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின்[SE][SS] பெருமையும் மேன்மையுமாய் அமையும்.[SE][QE]
3. [QS][SS] அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும்,[SE][SS] எருசலேமில் தப்பி வாழ்வோரும்[SE][SS] ‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்;[SE][SS] உயிர் பிழைப்பதற்கென்று[SE][SS] எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும்[SE][SS] ‛புனிதர்’ எனப்படுவர்.[SE][QE]
4. [QS][SS] என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக்[SE][SS] கழுவித் தூய்மைப்படுத்துவார்;[SE][SS] நீதியின்படி தீர்ப்பிடும்[SE][SS] அவரது தன்மையாலும்[SE][SS] நெருப்புத்தணலையொத்த[SE][SS] அவரது ஆற்றலாலும்[SE][SS] எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி[SE][SS] அதனைத் தூய்மைப்படுத்துவார்.[SE][QE]
5. சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். [* விப 13:21; 24:16.. ]
6. அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.[PE]