தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. {தூய வழி} [PS] [QS][SS] பாலைநிலமும் பாழ்வெளியும்[SE][SS] அகமகிழும்;[SE][SS] பொட்டல் நிலம் அக்களிப்படைந்து,[SE][SS] லீலிபோல் பூத்துக் குலுங்கும்.[SE][QE]
2. [QS][SS] அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி[SE][SS] மகிழ்ந்து பாடிக் களிப்படையும்;[SE][SS] லெபனோனின் எழில்[SE][SS] அதற்கு அளிக்கப்படும்;[SE][SS] கர்மேல், சாரோனின் மேன்மை[SE][SS] அதில் ஒளிரும்;[SE][SS] ஆண்டவர் மாட்சியையும்[SE][SS] நம் கடவுளின் பெருமையையும்[SE][SS] அவர்கள் காண்பார்கள்.[SE][QE]
3. [QS][SS] தளர்ந்துபோன கைகளைத்[SE][SS] திடப்படுத்துங்கள்;[SE][SS] தள்ளாடும் முழங்கால்களை[SE][SS] உறுதிப்படுத்துங்கள்.[SE][QE]
4. [QS][SS] உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி,[SE][SS] “திடன் கொள்ளுங்கள்,[SE][SS] அஞ்சாதிருங்கள்;[SE][SS] இதோ, உங்கள் கடவுள்[SE][SS] பழிதீர்க்க வருவார்;[SE][SS] அநீதிக்குப் பழிவாங்கும்[SE][SS] கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.” [* எபி 12:12 ] [SE][QE]
5. [QS][SS] அப்போது பார்வையற்றோரின்[SE][SS] கண்கள் பார்க்கும்;[SE][SS] காது கேளாதோரின்[SE][SS] செவிகள் கேட்கும்.[SE][QE]
6. [QS][SS] அப்பொழுது, காலூனமுற்றோர்[SE][SS] மான்போல் துள்ளிக்குதிப்பர்;[SE][SS] வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்;[SE][SS] பாலைநிலத்தில் நீரூற்றுகள்[SE][SS] பீறிட்டு எழும்;[SE][SS] வறண்ட நிலத்தில் நீரோடைகள்[SE][SS] பாய்ந்தோடும். [* மத் 11:5; லூக் 7:22.[QE] ] [SE][QE]
7. [QS][SS] கனல் கக்கும் மணல்பரப்பு[SE][SS] நீர்த் தடாகம் ஆகும்;[SE][SS] தாகமுற்ற தரை[SE][SS] நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்;[SE][SS] குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும்[SE][SS] கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். [* மத் 11:5; லூக் 7:22.[QE] ] [SE][QE]
8. [QS][SS] அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்;[SE][SS] அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும்.[SE][SS] தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க்[SE][SS] கடந்து செல்லார்;[SE][SS] அவ்வழிவரும் பேதையரும்[SE][SS] வழி தவறிச் செல்லார்.[SE][QE]
9. [QS][SS] அங்கே சிங்கம் இராது;[SE][SS] அவ்வழியில் கொடிய விலங்குகள்[SE][SS] செல்வதில்லை, காணப்படுவதுமில்லை;[SE][SS] மீட்படைந்தவர்களே[SE][SS] அவ்வழியில் நடப்பார்கள்.[SE][QE]
10. [QS][SS] ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர்[SE][SS] திரும்பி வருவர்;[SE][SS] மகிழ்ந்து பாடிக் கொண்டே[SE][SS] சீயோனுக்கு வருவர்;[SE][SS] அவர்கள் முகம் என்றுமுள[SE][SS] மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்;[SE][SS] அவர்கள் மகிழ்ச்சியும்[SE][SS] பூரிப்பும் அடைவார்கள்;[SE][SS] துன்பமும் துயரமும் பறந்தோடும்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 35 / 66
ஏசாயா 35:31
தூய வழி 1 பாலைநிலமும் பாழ்வெளியும் அகமகிழும்; பொட்டல் நிலம் அக்களிப்படைந்து, லீலிபோல் பூத்துக் குலுங்கும். 2 அது வளமாய்ப் பூத்துக் குலுங்கி மகிழ்ந்து பாடிக் களிப்படையும்; லெபனோனின் எழில் அதற்கு அளிக்கப்படும்; கர்மேல், சாரோனின் மேன்மை அதில் ஒளிரும்; ஆண்டவர் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள். 3 தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். 4 உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, “திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.” * எபி 12:12 5 அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். 6 அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். [* மத் 11:5; லூக் 7:22. ] 7 கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். [* மத் 11:5; லூக் 7:22. ] 8 அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார். 9 அங்கே சிங்கம் இராது; அவ்வழியில் கொடிய விலங்குகள் செல்வதில்லை, காணப்படுவதுமில்லை; மீட்படைந்தவர்களே அவ்வழியில் நடப்பார்கள். 10 ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர் திரும்பி வருவர்; மகிழ்ந்து பாடிக் கொண்டே சீயோனுக்கு வருவர்; அவர்கள் முகம் என்றுமுள மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்; அவர்கள் மகிழ்ச்சியும் பூரிப்பும் அடைவார்கள்; துன்பமும் துயரமும் பறந்தோடும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 35 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References