1. {துணை வேண்டும் மன்றாட்டு} [PS] [QS][SS] அழித்தொழிப்பவனே, உனக்கு[SE][SS] ஐயோ கேடு! நீ இன்னும்[SE][SS] அழித்தொழிக்கப்படவில்லையே![SE][SS] நம்பிக்கைத் துரோகியே,[SE][SS] உனக்கு எவரும்[SE][SS] துரோகம் செய்யவில்லையா![SE][SS] நீ அழித்தொழிப்பதை முடித்ததும்,[SE][SS] நீயும் அழிந்தொழிவாய்;[SE][SS] நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன்,[SE][SS] உனக்கும் துரோகம் செய்வார்கள். [* “அரியேல்” என்பது எபிரேயத்தில், ‘இறைவனின் பெண் சிங்கம்’ எனவும் ‘இறைவனின் பீடம்’ எனவும் பொருள்படும்.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] ஆண்டவரே, எங்கள்மீது[SE][SS] இரக்கமாய் இரும்;[SE][SS] நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்;[SE][SS] அதிகாலைதோறும்[SE][SS] எங்களைக் காக்கும் கரமாகவும்,[SE][SS] துன்ப வேளைகளில் எங்களை[SE][SS] விடுவிப்பவராகவும் இருப்பீராக![SE][QE]
3. [QS][SS] ஆரவராப் பேரொலி கேட்க[SE][SS] மக்களினங்கள் பின்வாங்கி ஓடுகின்றன;[SE][SS] நீர் கிளர்ந்தெழும்போது[SE][SS] வேற்றினத்தார் சிதறுண்டு போகின்றனர்.[SE][QE]
4. [QS][SS] பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல்[SE][SS] கொள்ளைப் பொருட்கள்[SE][SS] சேர்க்கப்படுகின்றன.[SE][SS] வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல்[SE][SS] அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவர் மாட்சிக்கு உரியவர்;[SE][SS] ஏனெனில் அவர்[SE][SS] உன்னதத்தில் உறைகின்றார்;[SE][SS] சீயோனை அவர் நீதியாலும்[SE][SS] நேர்மையாலும் நிரப்புகின்றார்;[SE][QE]
6. [QS][SS] உங்கள் காலத்தில் அவரே[SE][SS] பாதுகாப்பாய் இருப்பார்;[SE][SS] அவர் உங்களுக்கு[SE][SS] முழு விடுதலை வழங்கி[SE][SS] ஞானத்தையும் அறிவாற்றலையும்[SE][SS] நல்குவார்.[SE][SS] ஆண்டவரைப்பற்றிய அச்சமே[SE][SS] அவர்களது அரும்செல்வம்.[SE][QE]
7. [QS][SS] இதோ! வலிமைமிக்க[SE][SS] அவர்களுடைய வீரர்கள்[SE][SS] வீதியில் நின்று கதறியழுகின்றனர்;[SE][SS] சமாதானத்தின் தூதர்[SE][SS] மனங்கசந்து அழுகின்றனர்.[SE][QE]
8. [QS][SS] நெடுஞ்சாலைகளில்[SE][SS] ஆள் நடமாட்டம் இல்லை;[SE][SS] வழிப்பயணிகள்[SE][SS] கடந்து செல்வதும் இல்லை;[SE][SS] உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது;[SE][SS] ஒப்பந்தம் மீறப்படுகின்றது;[SE][SS] மனிதருக்கு மரியாதையே கிடையாது.[SE][QE]
9. [QS][SS] நாடு புலம்பியழுது[SE][SS] சோர்ந்து போகின்றது;[SE][SS] லெபனோன் வெட்கி நாணித்[SE][SS] தளர்ச்சியடைகின்றது;[SE][SS] சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது;[SE][SS] பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன.[SE][PE][QE]
10. {பகைவருக்கு ஆண்டவரின் எச்சரிக்கை} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுகின்றார்:[SE][SS] இப்பொழுது நான் எழுந்தருள்வேன்;[SE][SS] இப்பொழுது என்னை[SE][SS] உயர்த்திக் கொள்வேன்;[SE][SS] இப்பொழுது என்னை[SE][SS] மாட்சிமைப் படுத்துவேன். [* உரோ 11:8. ] [SE][QE]
11. [QS][SS] நீங்கள் பதரைக் கருத்தாங்கி,[SE][SS] வைக்கோலைப் பெற்றெடுத்தீர்கள்;[SE][SS] உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி[SE][SS] உங்களையே எரித்துவிடும்.[SE][QE]
12. [QS][SS] சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல்[SE][SS] மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்;[SE][SS] முட்கள்போல் வெட்டுண்டு[SE][SS] நெருப்புக்கு இரையாவார்கள்.[SE][QE]
13. [QS][SS] தொலையில் உள்ளோரே,[SE][SS] நான்செய்வதைக் கேளுங்கள்;[SE][SS] அருகில் உள்ளோரே,[SE][SS] என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள். [* மத் 15:8-9; மாற் 7:6-7. ] [SE][QE]
14. [QS][SS] சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்;[SE][SS] இறைப்பற்றில்லாரைத்[SE][SS] திகில் ஆட்கொள்கின்றது.[SE][SS] சுட்டெரிக்கும் நெருப்பில்[SE][SS] நம்மில் எவர் தங்குவார்?[SE][SS] என்றென்றும் பற்றியெரியும் தழலில்[SE][SS] நம்மில் எவர் இருப்பார்? [* 1 கொரி 1:19. ] [SE][QE]
15. [QS][SS] நீதிநெறியில் நடப்பவர்,[SE][SS] நேர்மையானவற்றைப் பேசுபவர்.[SE][SS] கொடுமைசெய்து பெற்ற[SE][SS] வருவாயை வெறுப்பவர்,[SE][SS] கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர்,[SE][SS] இரத்தப் பழிச் செய்திகளைச்[SE][SS] செவி கொடுத்துக் கேளாதவர்,[SE][SS] தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்;[SE][QE]
16. [QS][SS] அவர்களே உன்னதங்களில் வாழ்வர்;[SE][SS] கற்பாறைக் கோட்டைகள்[SE][SS] அவர்களது காவல்அரண் ஆகும்;[SE][SS] அவர்களுக்கு உணவு வழங்கப்படும்;[SE][SS] தண்ணீர் தரப்படுவதும் உறுதி. [* எசா 45:9. ] [SE][PE][QE]
17. {மேன்மைமிகு வருங்காலம்} [PS] [QS][SS] அரசரை உங்கள் கண்கள்[SE][SS] அழகுமிக்கவராகக் காணும்;[SE][SS] பரந்து விரிந்த நாட்டை[SE][SS] நீங்கள் காண்பீர்கள்:[SE][QE]
18. [QS][SS] திகிலைப்பற்றி உங்கள் மனம்[SE][SS] இவ்வாறு சிந்திக்கும்;[SE][SS] ‘குடிக்கணக்குச் செய்தவன் எங்கே?[SE][SS] திறைப்பொருளை[SE][SS] நிறுத்துப் பார்த்தவன் எங்கே?[SE][SS] கோபுரங்களை[SE][SS] எண்ணிக்கை இட்டவன் எங்கே?[SE][QE]
19. [QS][SS] உங்களுக்கு விளங்காத[SE][SS] குளறுபடியான பேச்சையும்[SE][SS] புரியாத வேற்றுமொழியையும் கொண்ட[SE][SS] காட்டுமிராண்டி மக்களை[SE][SS] நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.[SE][QE]
20. [QS][SS] நம் விழாக்களின் நகரான[SE][SS] சீயோனைப் பார்;[SE][SS] அமைதியின் இல்லமாகவும்,[SE][SS] பெயர்க்கப்படாத முளைகளும்[SE][SS] அறுபடாத கயிறுகளும் கொண்ட[SE][SS] அசைக்க முடியாத கூடாரமாகவும்[SE][SS] எருசலேம் இருப்பதை[SE][SS] உங்கள் கண்கள் காணும்.[SE][QE]
21. [QS][SS] ஏனெனில், அங்கே ஆண்டவர்[SE][SS] நமக்கெனத் தம் மாட்சியை[SE][SS] விளங்கச் செய்வார்;[SE][SS] அது அகன்ற ஆறுகளையும்[SE][SS] விரிந்த நீரோடைகளையும் உடைய[SE][SS] இடம் போன்றது;[SE][SS] துடுப்புப் படகு அங்குப் போவதில்லை;[SE][SS] மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.[SE][QE]
22. [QS][SS] ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்;[SE][SS] ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்;[SE][SS] ஆண்டவரே நமக்கு வேந்தர்;[SE][SS] அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.[SE][QE]
23. [QS][SS] உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்;[SE][SS] அவற்றால் பாய் மரத்தை[SE][SS] நிலையாய்ப் பிடிக்க இயலாது;[SE][SS] பாய் விரிக்கவும் முடியாது;[SE][SS] அப்பொழுது திரளான[SE][SS] கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்;[SE][SS] முடவரும் கொள்ளைப் பொருளைச்[SE][SS] சூறையாடுவர்.[SE][QE]
24. [QS][SS] சீயோனில் வாழ்பவர் எவரும்[SE][SS] ‘நான் நோயாளி’ என்று சொல்லமாட்டார்.[SE][SS] அதில் குடியிருக்கும் மக்களின்[SE][SS] தீச்செயல் மன்னிக்கப்படும்.[SE][PE][QE]