தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. {எருசலேமுக்கு ஆண்டவரின் பாதுகாப்பு} [PS] [QS][SS] துணை வேண்டி எகிப்துக்குச்[SE][SS] செல்வோருக்கு ஐயோ கேடு![SE][SS] அவர்கள் குதிரைகளுக்காகக்[SE][SS] காத்துக் கிடக்கின்றன‌ர்;[SE][SS] பெரும் தேர்ப்படைகளையும்[SE][SS] வலிமைமிகு குதிரை வீரர்களையும்[SE][SS] நம்பியிருக்கிறார்கள்;[SE][SS] இஸ்ரயேலின் தூயவருக்காக[SE][SS] ஆவலுடன் காத்திருக்கவில்லை;[SE][SS] ஆண்டவரைத் தேடுவதுமில்லை;[SE][QE]
2. [QS][SS] ஆனால் அவரோ ஞானமுடையவர்;[SE][SS] தீங்கை வருவிப்பவர்;[SE][SS] தம் வார்த்தைகளின் இலக்கை[SE][SS] மாற்றாதவர்;[SE][SS] தீயோர் வீட்டார்க்கும்[SE][SS] கொடியவருக்கு உதவுவோருக்கும்[SE][SS] எதிராகக் கிளர்ந்தெழுபவர்.[SE][QE]
3. [QS][SS] எகிப்தியர் வெறும் மனிதரே,[SE][SS] இறைவன் அல்லர்;[SE][SS] அவர்கள் குதிரைகள் வெறும்[SE][SS] தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல;[SE][SS] ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது[SE][SS] உதவி செய்பவன் இடறுவான்;[SE][SS] உதவி பெறுபவன் வீழ்வான்;[SE][SS] அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே:[SE][SS] சிங்கமோ இளஞ்சிங்கமோ[SE][SS] தன் இரைமேல் பாய்ந்து[SE][SS] கர்ச்சிக்கும் போது[SE][SS] மேய்ப்பர் கூட்டம்[SE][SS] தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால்[SE][SS] திகிலடைவதில்லை;[SE][SS] அவர்கள் ஆரவாரத்தைப்[SE][SS] பொருட்படுத்துவதில்லை.[SE][SS] அதுபோல் படைகளின் ஆண்டவர்[SE][SS] சீயோன் மலைமேலும்[SE][SS] அதன் குன்றின்மேலும்[SE][SS] போர்புரிய இறங்கி வருவார்.[SE][QE]
5. [QS][SS] பறக்கும் பறவைகள்போல்[SE][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்;[SE][SS] அதைப் பாதுகாத்து விடுவிப்பார்;[SE][SS] தண்டிக்காமல் தப்புவிப்பார்.[SE][PE][QE]
6. [PS] இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள்.
7. அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார்.
8. [QS][SS] “அசீரியன் வாளால் வீழ்வான்;[SE][SS] ஆனால் மனிதரின் வாளாலன்று;[SE][SS] அவனை வாள் விழுங்கிவிடும்;[SE][SS] ஆனால் அது மனிதரின் வாளன்று;[SE][SS] அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்;[SE][SS] அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர்.[SE][QE]
9. [QS][SS] அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்;[SE][SS] அவன் தலைவர்[SE][SS] கலக்கமுற்று ஓடுவர்” என்கிறார்,[SE][SS] சீயோனில் தீப்பிழம்பையும்[SE][SS] எருசலேமில் தீச்சூளையையும்[SE][SS] கொண்ட ஆண்டவர்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 66
ஏசாயா 31:32
எருசலேமுக்கு ஆண்டவரின் பாதுகாப்பு 1 துணை வேண்டி எகிப்துக்குச் செல்வோருக்கு ஐயோ கேடு! அவர்கள் குதிரைகளுக்காகக் காத்துக் கிடக்கின்றன‌ர்; பெரும் தேர்ப்படைகளையும் வலிமைமிகு குதிரை வீரர்களையும் நம்பியிருக்கிறார்கள்; இஸ்ரயேலின் தூயவருக்காக ஆவலுடன் காத்திருக்கவில்லை; ஆண்டவரைத் தேடுவதுமில்லை; 2 ஆனால் அவரோ ஞானமுடையவர்; தீங்கை வருவிப்பவர்; தம் வார்த்தைகளின் இலக்கை மாற்றாதவர்; தீயோர் வீட்டார்க்கும் கொடியவருக்கு உதவுவோருக்கும் எதிராகக் கிளர்ந்தெழுபவர். 3 எகிப்தியர் வெறும் மனிதரே, இறைவன் அல்லர்; அவர்கள் குதிரைகள் வெறும் தசைப்பிண்டங்களே, ஆவிகள் அல்ல; ஆண்டவர் தம் கையை ஓங்கும் போது உதவி செய்பவன் இடறுவான்; உதவி பெறுபவன் வீழ்வான்; அவர்கள் அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர். 4 ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: சிங்கமோ இளஞ்சிங்கமோ தன் இரைமேல் பாய்ந்து கர்ச்சிக்கும் போது மேய்ப்பர் கூட்டம் தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால் திகிலடைவதில்லை; அவர்கள் ஆரவாரத்தைப் பொருட்படுத்துவதில்லை. அதுபோல் படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேலும் அதன் குன்றின்மேலும் போர்புரிய இறங்கி வருவார். 5 பறக்கும் பறவைகள்போல் படைகளின் ஆண்டவர் எருசலேமுக்குப் பாதுகாப்பாய் இருப்பார்; அதைப் பாதுகாத்து விடுவிப்பார்; தண்டிக்காமல் தப்புவிப்பார். 6 இஸ்ரயேல் மக்களே! எனக்கெதிராகக் கலகம் செய்வதில் ஆழ்ந்துவிட்டீர்கள்; என்னிடம் திரும்பி வாருங்கள். 7 அந்நாளில் உங்களுள் ஒவ்வொருவரும் தமக்குப் பாவத்தை விளைவித்துக் கொள்ளுமாறு செய்த பொன், வெள்ளிச் சிலைகளைத் தூக்கி எறிந்து விடுவார். 8 “அசீரியன் வாளால் வீழ்வான்; ஆனால் மனிதரின் வாளாலன்று; அவனை வாள் விழுங்கிவிடும்; ஆனால் அது மனிதரின் வாளன்று; அவன் வாள் கண்டு, தப்பி ஓடுவான்; அவனுடைய இளங்காளையர் அடிமையாக்கப்படுவர். 9 அவன் பாறை திகிலுற்று ஓடிப்போகும்; அவன் தலைவர் கலக்கமுற்று ஓடுவர்” என்கிறார், சீயோனில் தீப்பிழம்பையும் எருசலேமில் தீச்சூளையையும் கொண்ட ஆண்டவர்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 31 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References