1. {எருசலேமின் நிலைமை} [PS] [QS][SS] தாவீது பாசறை அமைத்த நகராகிய[SE][SS] அரியேல்!* அரியேல்! உனக்கு[SE][SS] ஐயோ கேடு![SE][SS] ஆண்டிற்குப்பின் ஆண்டு[SE][SS] கடந்து வரட்டும்;[SE][SS] விழாக்கள் முறைமுறையாய்[SE][SS] வந்து போகட்டும். [* “அரியேல்” என்பது எபிரேயத்தில், ‘இறைவனின் பெண் சிங்கம்’ எனவும் ‘இறைவனின் பீடம்’ எனவும் பொருள்படும்.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] அரியேலுக்கு நான்[SE][SS] இடுக்கண் விளைவிப்பேன்;[SE][SS] அங்கு அழுகையும் புலம்பலும்[SE][SS] நிறைந்திருக்கும்;[SE][SS] அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.[SE][QE]
3. [QS][SS] உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்;[SE][SS] உன்னைப் போர்க் கோபுரங்களால்[SE][SS] சூழ்ந்து வளைப்பேன்;[SE][SS] உனக்கெதிராய்[SE][SS] முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.[SE][QE]
4. [QS][SS] தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்;[SE][SS] நலிந்த உன் குரல்[SE][SS] புழுதியிலிருந்து எழும்பும்;[SE][SS] உன் குரல்,[SE][SS] இறந்தவன் ஆவியின் ஒலிபோல,[SE][SS] மண்ணிலிருந்து வெளிவரும்;,[SE][SS] உன் பேச்சு[SE][SS] புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.[SE][QE]
5. [QS][SS] உன் பகைவனின் திரள்[SE][SS] நுண்ணிய தூசிபோல் இருக்கும்;[SE][SS] கொடியவர் கூட்டம்[SE][SS] “பறக்கும் பதர் போலிருக்கும்;[SE][SS] இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.[SE][QE]
6. [QS][SS] இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல்,[SE][SS] சூறாவளி, புயல்காற்று விழுங்கும்[SE][SS] நெருப்புப் பிழம்பு ஆகியவற்றால்[SE][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] உன்னைத் தண்டிப்பார்.[SE][QE]
7. [QS][SS] அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும்[SE][SS] திரளான வேற்றினத்தார் அனைவரும்[SE][SS] அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப்[SE][SS] போரிட்டு[SE][SS] அதைத் துன்புறுத்திய அனைவரும்[SE][SS] கனவு போலும், கனவில் காணும்[SE][SS] காட்சிபோலும் மறைவர்.[SE][QE]
8. [QS][SS] பசியாய் இருப்பவர் உண்பதாய்க்[SE][SS] கனவு கண்டு விழித்தெழுந்து[SE][SS] வெறும் வயிற்றினராய்[SE][SS] வாடுவது போலும்,[SE][SS] தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க்[SE][SS] கனாக்கண்டு விழித்தெழுந்து[SE][SS] தீராத்தாகத்தால் தவிப்பது போலும்,[SE][SS] சீயோன் மலைமேல் போர் தொடுக்கும்[SE][SS] திரளான வேற்றினத்தார்[SE][SS] அனைவரும் ஆவர்.[SE][PE][QE]
9. {எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்படல்} [PS] [QS][SS] திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்;[SE][SS] குருடரைப்போல் இருங்கள்;[SE][SS] பார்வையற்றவராகுங்கள்.[SE][SS] ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல;[SE][SS] தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.[SE][QE]
10. [QS][SS] ஏனெனில் ஆழ்ந்த[SE][SS] தூக்கம் தரும் ஆவியை[SE][SS] ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்;[SE][SS] இறைவாக்கினராகிய[SE][SS] உங்கள் கண்களை மூடியுள்ளார்;[SE][SS] திருக்காட்சியாளராகிய[SE][SS] உங்கள் பார்வையை மறைத்துள்ளார். [* உரோ 11:8. ] [SE][QE]
11. ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர்“என்னால் இயலாது; இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.
12. எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து “இதைப் படியும்” என்றால் அவர் “எனக்குப் படிக்கத்தெரியாதே” என்பார்.[PE]
13. [PS] என் தலைவர் கூறுவது இதுவே: [QS][SS]வாய்ச் சொல்லால் இம்மக்கள்[SE][SS] என்னை அணுகுகின்றனர்;[SE][SS] உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்;[SE][SS] அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத்[SE][SS] தொலையில் இருக்கிறது;[SE][SS] அவர்களது இறையச்சம்[SE][SS] மனனம் செய்த வெறும்[SE][SS] மனித கட்டளையைச் சார்ந்ததே! [* மத் 15:8-9; மாற் 7:6-7. ] [SE][QE]
14. [QS][SS] ஆதலால், இதோ நான்[SE][SS] இந்த மக்களுக்காக[SE][SS] மீண்டும் வியத்தகு செயல் புரிவேன்.[SE][SS] அது விந்தைக்கு மேல்[SE][SS] விந்தையாக இருக்கும்.[SE][SS] அவர்களுடைய ஞானிகளின்[SE][SS] ஞானம் அழிந்துபோம்;[SE][SS] அவர்களுடைய அறிஞர்களின்[SE][SS] அறிவு மறைந்துபோம். [* 1 கொரி 1:19. ] [SE][PE][QE]
15. {வருங்கால நம்பிக்கை} [PS] [QS][SS] ஆண்டவரிடமிருந்து[SE][SS] தங்கள் திட்டங்களை[SE][SS] மனத்தின் ஆழங்களில்[SE][SS] மறைத்துக்கொண்டு,[SE][SS] தங்கள் செயல்களை இருளில் செய்து,[SE][SS] “நம்மை எவர் காணப்போகின்றார்?[SE][SS] நம்மை எவர் அறியப் போகின்றார்?”[SE][SS] எனச் சொல்வோருக்கு ஐயோ[SE][SS] கேடு![SE][QE]
16. [QS][SS] நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன?[SE][SS] குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ?[SE][SS] கைவேலை தன்[SE][SS] கைவினைஞனை நோக்கி[SE][SS] “நீர் என்னை உருவாக்கவில்லை”[SE][SS] என்று கூறலாமோ?[SE][SS] வனையப்பட்டது[SE][SS] தன்னை வனைந்தவனை நோக்கி[SE][SS] “உமக்கு அறிவில்லை” என்று[SE][SS] சொல்லலாமோ? [* எசா 45:9. ] [SE][QE]
17. [QS][SS] இன்னும் சிறிது காலத்தில் லெபனோன்[SE][SS] வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ?[SE][SS] வளம் மிகு நிலம்[SE][SS] காடாக ஆகிவிடுமன்றோ?[SE][QE]
18. [QS][SS] அந்நாளில் காது கேளாதோர்[SE][SS] ஏட்டுச் சுருளின்[SE][SS] வார்த்தைகளைக் கேட்பர்;[SE][SS] பார்வையற்றோரின் கண்கள்[SE][SS] காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும்[SE][SS] விடுதலையாகிப் பார்வை பெறும்.[SE][QE]
19. [QS][SS] ஒடுக்கப்பட்டோர் மீண்டும்[SE][SS] ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்;[SE][SS] மானிடரில் வறியவர்[SE][SS] இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.[SE][QE]
20. [QS][SS] கொடியோர் இல்லாதொழிவர்;[SE][SS] இகழ்வோர் இல்லாமற் போவர்;[SE][SS] தீமையில் நாட்டம் கொள்வோர்[SE][SS] அழிந்து போவர்.[SE][QE]
21. [QS][SS] அவர்கள் ஒருவர்மேல்[SE][SS] பொய்க் குற்றம் சாட்டி,[SE][SS] நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை[SE][SS] இடறச் செய்கின்றனர்;[SE][SS] பொய் புனைந்து நேர்மையாளரின்[SE][SS] வழக்கைப் புரட்டுகின்றனர்.[SE][QE]
22. [QS][SS] ஆதலால்[SE][SS] ஆபிராகாமை மீட்ட ஆண்டவர்[SE][SS] யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது:[SE][SS] இனி யாக்கோபு[SE][SS] மானக்கேடு அடைவதில்லை;[SE][SS] அவன் முகம் இனி[SE][SS] வெளிறிப் போவதுமில்லை.[SE][QE]
23. [QS][SS] அவன் பிள்ளைகள் என் பெயரைத்[SE][SS] தூயதெனப் போற்றுவர்;[SE][SS] நான் செய்யவிருக்கும் என்[SE][SS] கைவேலைப்பாடுகளைக் காணும்போது[SE][SS] யாக்கோபின் தூயவரைத்[SE][SS] தூயவராகப் போற்றுவர்;[SE][SS] இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.[SE][QE]
24. [QS][SS] தவறிழைக்கும் சிந்தை கொண்டோர்[SE][SS] உணர்வடைவர்; முறுமுறுப்போர்[SE][SS] அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.[SE][PE]