1. [PS] அந்நாளில் ஆண்டவர் தம் கொடிய, பெரிய, வலிமைமிகு வாளால் லிவியத்தான் என்னும் விரைந்தோடும் பாம்பை — லிவியத்தான் என்னும் நெளிந்தோடும் பாம்பை — தண்டிப்பார்; கடலில் இருக்கும் அந்தப் பெரும் நாகத்தை அவர் வெட்டி வீழ்த்துவார். [* யோபு 41:1; திபா 74:14; 104:26.. ]
2. [QS][SS] அந்நாளில் ஒரு கனிமிகு திராட்சைத்[SE][SS] தோட்டம் இருக்கும்; அதைப்பற்றிப் பாடுங்கள்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவராகிய நானே[SE][SS] அதன் பாதுகாவலர்;[SE][SS] இடையறாது அதற்கு நான்[SE][SS] நீர் பாய்ச்சுகின்றேன்;[SE][SS] எவரும் அதற்குத்[SE][SS] தீங்கு விளைவிக்காதவாறு[SE][SS] இரவும் பகலும்[SE][SS] அதற்குக் காவலாய் இருக்கின்றேன்.[SE][QE]
4. [QS][SS] சினம் என்னிடம் இல்லை;[SE][SS] நெருஞ்சியையும் முட்புதரையும்[SE][SS] என்னோடு போரிடச் செய்தவன் எவன்?[SE][SS] நான் அவற்றிற்கு எதிராக[SE][SS] அணி வகுத்துச்சென்று,[SE][SS] அவற்றை ஒருங்கே[SE][SS] நெருப்புக்கு இரையாக்குவேன்.[SE][QE]
5. [QS][SS] அவர்கள் என்னைப்[SE][SS] புகலிடமாகக் கொண்டு வலிமை பெறட்டும்;[SE][SS] என்னோடு அவர்கள்[SE][SS] ஒப்புரவு செய்து கொள்ளட்டும்,[SE][SS] என்னோடு அவர்கள்[SE][SS] சமாதானம் செய்து கொள்ளட்டும்.[SE][QE]
6. [QS][SS] வருங்காலத்தில் யாக்கோபு[SE][SS] வேரூன்றி நிற்பான்;[SE][SS] இஸ்ரயேல் பூத்து மலருவான்;[SE][SS] உலகத்தையெல்லாம்[SE][SS] கனிகளால் நிரப்புவான்.[SE][QE]
7. [QS][SS] அவனை அடித்து நொறுக்கியோரை[SE][SS] ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல்,[SE][SS] அவனையும் அவர்[SE][SS] அடித்து நொறுக்கியது உண்டோ?[SE][SS] அவனை வெட்டி வீழ்த்தியோரை[SE][SS] அவர் வெட்டி வீழ்த்தியதுபோல்,[SE][SS] அவனையும் அவர்[SE][SS] வெட்டி வீழ்த்தியது உண்டோ?[SE][QE]
8. [QS][SS] துரத்தியடித்து வெளியேற்றியதன் மூலம்[SE][SS] அவர் அவனோடு போராடினார்;[SE][SS] கீழைக்காற்றின் நாளில்[SE][SS] சூறைக்காற்றால்[SE][SS] அவனைத் தூக்கி எறிந்தார்.[SE][QE]
9. [QS][SS] ஆதலால் இதன் வாயிலாய்[SE][SS] யாக்கோபின் குற்றத்திற்காகப்[SE][SS] பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்.[SE][SS] அவனது பாவம் அகற்றப்பட்டதன்[SE][SS] முழுப் பயன் இதுவே:[SE][SS] சுண்ணாம்புக் கற்களை உடைத்துத்[SE][SS] தூள் தூளாக்குவது போல[SE][SS] அவர் அவர்களின்[SE][SS] பலிபீடக் கற்களுக்குச் செய்வார்;[SE][SS] அசேராக் கம்பங்களும் தூபபீடங்களும்[SE][SS] நிலைநிற்காதவாறு நொறுக்கப்படும்.[SE][QE]
10. [QS][SS] அரண் சூழ்ந்த நகரம்[SE][SS] தனித்து விடப்பட்டுள்ளது;[SE][SS] குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது.[SE][SS] பாலைநிலம் போல்[SE][SS] புறக்கணிக்கப்பட்டுள்ளது;[SE][SS] ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது,[SE][SS] படுத்துக்கிடக்கின்றது;[SE][SS] அதில் தழைத்துள்ளவற்றைத்[SE][SS] தின்று தீர்க்கின்றது.[SE][QE]
11. [QS][SS] உலர்ந்த அதன் கிளைகள்[SE][SS] முறிக்கப்படுகின்றன;[SE][SS] பெண்டிர் வந்து அவற்றைச் சுட்டெறிப்பர்;[SE][SS] ஏனெனில் உணர்வற்ற மக்களினம் அது;[SE][SS] ஆதலால், அவர்களைப் படைத்தவர்[SE][SS] அவர்கள் மீது இரக்கம் காட்டார்;[SE][SS] அவர்களை உருவாக்கியவர்[SE][SS] அவர்களுக்கு ஆதரவு அருளார்.[SE][QE]
12. அந்நாளில் ஆண்டவர் பேராற்றின் வாய்க்கால் முதல் எகிப்தின் பள்ளத்தாக்குவரை புணையடிப்பார்; இஸ்ரயேல் மக்களே, நீங்கள் ஒருவர்பின் ஒருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.[PE]
13. [PS] அந்நாளில் பெரியதோர் எக்காளம் முழங்கும். அப்பொழுது, அசீரியா நாட்டில் சிதறுண்டோரும் எகிப்து நாட்டுக்குத் துரத்தப்பட்டோரும் திரும்பி வருவர். எருசலேமின் திருமலையில் அவர்கள் ஆண்டவரை வழிபடுவார்கள்.[PE]