1. {தீர் பற்றிய செய்தி} [PS] [QS][SS] தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு:[SE][SS] தர்சீசின் மரக் கப்பல்களே கதறி[SE][SS] அழுங்கள்;[SE][SS] தீரின் வீடுகள் இல்லாதபடிக்கும்[SE][SS] வருவார் போவார் இல்லாதபடிக்கும்[SE][SS] பாழாய்ப் போய்விட்டது;[SE][SS] சைப்பிரசு நாட்டிலிருந்து இச்செய்தி[SE][SS] அவர்களை வந்தடைகின்றது. [* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
2. [QS][SS] கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே,[SE][SS] வாய் திறவாதீர்; உங்கள் தூதர்[SE][SS] கடல்கடந்து வந்தனர். [* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
3. [QS][SS] பல இனத்தாரோடும்[SE][SS] நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்;[SE][SS] சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில்[SE][SS] விளைந்த தானியமும்,[SE][SS] நைல் நதியின் அறுவடையுமே[SE][SS] உங்கள் வருமானம். [* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
4. [QS][SS] சீதோனே, வெட்கப்படு; ‘[SE][SS] நான் பேறுகால வேதனை அடையவில்லை;[SE][SS] பிள்ளையைப் பெற்றெடுக்கவில்லை;[SE][SS] இளைஞரைப் பேணவுமில்லை;[SE][SS] கன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை’[SE][SS] என்று கடல் சொல்கின்றது;[SE][SS] கடற்கோட்டை கூறுகின்றது. [* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
5. [QS][SS] இச்செய்தி எகிப்தை எட்டும்போது,[SE][SS] தீர்நாட்டின் நிலையைக் கேட்டு[SE][SS] அவர்கள் நடுங்குவார்கள். [* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
6. [QS][SS] கடற்கரை நாட்டில் வாழ்வோரே,[SE][SS] தர்சீசுக்குக் கடந்து சென்று[SE][SS] கதறியழுங்கள். [* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
7. [QS][SS] பண்டைக்காலம் முதல் நிலைபெற்று,[SE][SS] களிப்புமிகுந்த நகர் இதுதானா?[SE][SS] தொலை தூரத்திற்குச் சென்று[SE][SS] குடியேறுமாறு அடியெடுத்து[SE][SS] வைத்த நகரா இது? [* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
8. [QS][SS] அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும்[SE][SS] இளவரசர்களைப் போன்ற[SE][SS] வணிகரைக் கொண்டதும்,[SE][SS] உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப்[SE][SS] பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக[SE][SS] இதைத் திட்டமிட்டது யார்? [* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
9. [QS][SS] செருக்குற்றோர் சீர்குலையவும்,[SE][SS] நாட்டில் மதிப்புப்பெற்றோர் அனைவரும்[SE][SS] அவமதிப்பு அடையவும்[SE][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] இதைத் திட்டமிட்டார்.[SE][QE]
10. [QS][SS] தர்சீசின் மகளே, உன் நிலத்தை[SE][SS] உழுது பண்படுத்து;[SE][SS] இனி இங்குத் துறைமுகமே இராது.[SE][QE]
11. [QS][SS] கடலுக்கு மேலாக ஆண்டவர்[SE][SS] தம் கையை ஓங்கியுள்ளார்;[SE][SS] கானானின் ஆற்றல்மிக்க[SE][SS] புகலிடங்களை அழிக்குமாறு[SE][SS] ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார்.[SE][QE]
12. [QS][SS] “ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய[SE][SS] கன்னிப்பெண்ணே,[SE][SS] இனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய்,[SE][SS] எழுந்து, சைப்பிரசுக்கு புறப்பட்டுப்போ;[SE][SS] அங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்”[SE][SS] என்கிறார் அவர்.[SE][QE]
13. இதோ, கல்தேயர் நாட்டைப்பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்; இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்; அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டமாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.[PE]
14. [PS] தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்; ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.[PE]
15. [PS] அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள் தீர் நகர் மறக்கப்பட்டிருக்கும். எழுபது ஆண்டுகளுக்குப்பின், விலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்:
16. [QS][SS] “மறக்கப்பட்ட விலைமாதே![SE][SS] யாழினைக் கையிலெடுத்து,[SE][SS] நகரைச் சுற்றி வலம் வா.[SE][SS] உன் நினைவு நிலைக்குமாறு[SE][SS] இன்னிசை மீட்டு; பண் பல பாடு.”[SE][QE]
17. எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர் தீர் நகரைத் தேடிவருவார். அப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி, மண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள்.
18. ஆனால் அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும். அது சேமித்துவைக்கப்படுவதுமில்லை; பதுக்கி வைக்கப்படுவதுமில்லை; அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.[PE]