1. {எகிப்தின் மேல் வரவிருக்கும் தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] எகிப்தைக் குறித்த திருவாக்கு:[SE][SS] விரைவாய்ச் செல்லும்[SE][SS] மேகத்தின்மேல் ஏறி[SE][SS] ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்;[SE][SS] எகிப்தின் சிலைகள்[SE][SS] அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்;[SE][SS] எகிப்தியரின் உள்மனமோ[SE][SS] உருக்குலையும்.[SE][QE]
2. [QS][SS] எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே[SE][SS] நான் கிளர்ந்தெழச் செய்வேன்.[SE][SS] அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக[SE][SS] உடன்பிறப்பும்[SE][SS] நண்பனுக்கு எதிராக நண்பனும்[SE][SS] ஒரு நகரத்தாருக்கு எதிராக[SE][SS] மற்றொரு நகரத்தாரும்[SE][SS] ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும்[SE][SS] மோதிக்கொள்வர். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
3. [QS][SS] ஆதலால், எகிப்தியர்[SE][SS] தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்;[SE][SS] அவர்கள் திட்டங்களைக்[SE][SS] குழப்பி விடுவேன்;[SE][SS] அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர்,[SE][SS] மைவித்தைக்காரர், குறிசொல்வோர்[SE][SS] ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
4. [QS][SS] கடினமனம் கொண்ட[SE][SS] அதிகாரிகளின் கைகளில்[SE][SS] எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன்.[SE][SS] கொடுங்கோல் மன்னன் ஒருவன்[SE][SS] அவர்களை ஆள்வான், என்கிறார்[SE][SS] தலைவராகிய படைகளின் ஆண்டவர். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
5. [QS][SS] கடல் நீர் வற்றிப்போகும்;[SE][SS] பேராறு காய்ந்து வறண்டு போகும்; [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
6. [QS][SS] அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்;[SE][SS] எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில்[SE][SS] நீர் குறைந்து, வறண்டு போகும்;[SE][SS] கோரைகளும் நாணல்களும்[SE][SS] மக்கிப் போகும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
7. [QS][SS] ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும்[SE][SS] உலர்ந்த தரையாகும்;[SE][SS] நைல் நதியின் அருகில் விதைத்த யாவும்[SE][SS] தீய்ந்து, பறந்து இல்லாது போகும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
8. [QS][SS] மீனவர்கள் புலம்புவர்;[SE][SS] பேராற்றில் தூண்டில் போடுவோர்[SE][SS] அனைவரும் அழுவர்;[SE][SS] நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
9. [QS][SS] மெல்லிய சணலாடை செய்வோரும்[SE][SS] வெண்பருத்தி நூலினால் நெய்வோரும்[SE][SS] வெட்கி நாணுவர். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
10. [QS][SS] நாட்டின் தூண்களாய் இருப்போர்[SE][SS] நசுக்கப்படுவர்;[SE][SS] வேலைக்கு அமர்த்தப்படுவோர்[SE][SS] உள்ளம் பதறுவர். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
11. [QS][SS] சோவானின் தலைவர்கள் மூடர்களே![SE][SS] பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர்[SE][SS] அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்;[SE][SS] ‘நான் ஞானிகளின் மகன்,[SE][SS] பண்டைக்கால அரசர்களின்[SE][SS] வழி வந்தவன்’ என்று[SE][SS] நீங்கள் ஒவ்வொருவரும்[SE][SS] பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்? [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
12. [QS][SS] அப்படியானால் உன் ஞானிகள் எங்கே?[SE][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை[SE][SS] அவர்கள் அறிந்து[SE][SS] உனக்கு அறிவிக்கட்டும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
13. [QS][SS] சோவான் தலைவர்கள்[SE][SS] அறிவிலிகள் ஆனார்கள்;[SE][SS] நோபு நகரின் தலைவர்கள்[SE][SS] ஏமாந்து போனார்கள்;[SE][SS] எகிப்தின் குல முதல்வர்கள்[SE][SS] அதை நெறிபிறழச் செய்தார்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
14. [QS][SS] ஆண்டவர் அதனுள்[SE][SS] குழப்பம் உண்டாக்கும் ஆவி[SE][SS] புகுந்துவிடச் செய்தார்;[SE][SS] போதையேறியவன் வாந்தியெடுத்துத்[SE][SS] தள்ளாடுவதுபோல,[SE][SS] அவர்கள் எகிப்தை[SE][SS] அவன் செயல்கள் அனைத்திலும்[SE][SS] தள்ளாடச் செய்தார்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][QE]
15. [QS][SS] எகிப்து நாட்டின் தலையோ,[SE][SS] வாலோ, ஈந்தோ நாணலோ[SE][SS] யாரும் எதுவுமே செய்தற்கு இராது. [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [SE][PE][QE]
16. {எகிப்து ஆண்டவரை வழிபடுதல்} [PS] அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ]
17. யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ]
18. அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்; அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று ‘கதிரவன் நகரம்’ என்று அழைக்கப்படும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ]
19. அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்; அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒள்று எழுப்பப்படும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ]
20. எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [PE]
21. [PS] அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்; எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்; பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ]
22. ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்; வதைத்துக் குணமாக்குவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ]
23. அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்; எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்து வழிபாடு செலுத்துவார்கள். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ]
24. அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும். [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ]
25. படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி: ‘என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக!’ [* எரே 46:2-26; எசே 29:1-32:32. ] [PE]