1. {சூடானுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு[SE][SS] அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும்[SE][SS] உயிரினங்கள் உடையதோர்[SE][SS] நாடு உள்ளது. [* செப் 2:12.. ] [SE][QE]
2. [QS][SS] அது நாணல் படகுகளில் நீரின்மேலே[SE][SS] கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது;[SE][SS] விரைவாய்ச் செல்லும் தூதர்களே,[SE][SS] உயர்ந்து வளர்ந்து,[SE][SS] பளபளப்பான தோலுடைய[SE][SS] இனத்தாரிடம் செல்லுங்கள்;[SE][SS] அருகிலும் தொலைவிலும் உள்ளோரை[SE][SS] அச்சுறுத்திய[SE][SS] மக்கள் கூட்டத்தார் அவர்கள்;[SE][SS] ஆற்றல் வாய்ந்தவர்கள்,[SE][SS] பகைவரை மிதித்து[SE][SS] வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்;[SE][SS] ஆறுகள் குறுக்காகப்[SE][SS] பாய்ந்தோடும் நாடும் அது. [* செப் 2:12.. ] [SE][QE]
3. [QS][SS] உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே,[SE][SS] மண்ணுலகில் வாழ்வோரே,[SE][SS] மலைகளின்மேல் கொடியேற்றும்போது[SE][SS] உற்று நோக்குங்கள்;[SE][SS] எக்காளம் ஊதும்போது[SE][SS] செவிகொடுங்கள்; [* செப் 2:12.. ] [SE][QE]
4. [QS][SS] ஏனெனில், ஆண்டவர் என்னிடம்[SE][SS] இவ்வாறு சொன்னார்:[SE][SS] ‟பகலில் அடிக்கும்[SE][SS] வெப்பம் குறைந்த வெயில்போலும்,[SE][SS] அறுவடைக்கால வெயிலால்[SE][SS] உண்டாகும் பனிமேகம் போன்றும்[SE][SS] என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து[SE][SS] நான் கவனித்துப் பார்ப்பேன்” [* செப் 2:12.. ] [SE][QE]
5. [QS][SS] ஏனெனில், அறுவடைக்கு முன்[SE][SS] பூக்கள் பூத்துக் காய்த்து,[SE][SS] கனிதரும் பருவம் எய்தும்போது,[SE][SS] தழைகளை எதிரி[SE][SS] அரிவாள்களால் அறுத்தெறிவான்;[SE][SS] படரும் கொடிகளை [BR] அரிந்து அகற்றிவிடுவான். [* செப் 2:12.. ] [SE][QE]
6. [QS][SS] அவை அனைத்தும், மலைகளில்[SE][SS] பிணந்தின்னும் பறவைகளுக்கும்[SE][SS] தரையில் வாழுகின்ற[SE][SS] விலங்குகளுக்கும் விடப்படும்.[SE][SS] பிணந்தின்னும் பறவைகள்[SE][SS] கோடைக் காலத்திலும்[SE][SS] தரை வாழும் விலங்குகள்[SE][SS] குளிர்காலத்திலும் [BR]அவற்றின் மேல் தங்கியிருக்கும். [* செப் 2:12.. ] [SE][PE][QE]
7. [PS] உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்; பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும். [* செப் 2:12.. ] [PE]