தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. {மோவாபின் நம்பிக்கையற்ற நிலை} [PS] [QS][SS] சீயோன் மகளின் மலையில்[SE][SS] நாட்டை ஆள்பவனுக்குச்[SE][SS] சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச்[SE][SS] செம்மறியாடு அனுப்புங்கள்.[SE][QE]
2. [QS][SS] சிறகடித்து அலையும் பறவை போலும்[SE][SS] கூடு இழந்த குஞ்சுபோலும்[SE][SS] மோவாபிய மகளிர்[SE][SS] அர்னோன் துறைகளில் காணப்படுவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
3. [QS][SS] வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்;[SE][SS] நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்;[SE][SS] நண்பகலில் உங்கள் நிழலை[SE][SS] இரவு போலாக்கி,[SE][SS] விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு[SE][SS] மறைத்து வையுங்கள்;[SE][SS] தப்பி ஓடுகிறவர்களைக்[SE][SS] காட்டிக் கொடுக்காதீர்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
4. [QS][SS] மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள்[SE][SS] உங்களிடமே தங்கியிருக்கட்டும்;[SE][SS] அழிக்க வருபவனின்[SE][SS] பார்வையிலிருந்து தப்ப[SE][SS] அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்;[SE][SS] ஒடுக்குபவன் ஒழிந்து போவான்;[SE][SS] அழிவு ஓய்ந்து போகும்;[SE][SS] மிதிக்கிறவர்கள்[SE][SS] நாட்டில் இல்லாது போவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
5. [QS][SS] அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால்[SE][SS] ஓர் அரியணையை அமைப்பார்;[SE][SS] அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த[SE][SS] ஒருவர் வீற்றிருப்பார்;[SE][SS] அவர் உண்மையுடன் ஆள்பவர்;[SE][SS] நீதியை நிலைநாட்டுபவர்;[SE][SS] நேர்மையானதைச் செய்ய விரைபவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
6. [QS][SS] மோவாபின் இறுமாப்பைப்பற்றி[SE][SS] நாங்கள் கேள்வியுற்றோம்;[SE][SS] அவன் ஆணவம் பெரிதே;[SE][SS] அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும்[SE][SS] செருக்கையும் குறித்துக்[SE][SS] கேள்விப்பட்டோம்.[SE][SS] அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
7. [QS][SS] ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்;[SE][SS] மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்;[SE][SS] கீர் அரசேத்தின்[SE][SS] திராட்சை அடைகளை நினைந்து,[SE][SS] நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
8. [QS][SS] எஸ்போனின் வயல்வெளி நிலங்கள்[SE][SS] வாடுகின்றன,[SE][SS] மக்களினங்களின் தலைவர்களை[SE][SS] விழத் தள்ளிய சிபிமானின்[SE][SS] திராட்சைத் தோட்டத்துக் கிளைகள்[SE][SS] அழிந்துவிட்டன.[SE][SS] அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன;[SE][SS] பாலை நிலம்வரை படர்ந்திருந்தன;[SE][SS] அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து[SE][SS] கடல்கடந்து படர்ந்து சென்றன. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
9. [QS][SS] ஆதலால் யாசேருக்காக அழுததுபோல்[SE][SS] நான் சிபிமாவின்[SE][SS] திராட்சைத் தோட்டத்திற்காகக்[SE][SS] கண்ணீர் விடுகின்றேன்;[SE][SS] எஸ்போன்! எலயாரே! உங்களை[SE][SS] என் கண்ணீரால் நனைக்கின்றேன்;[SE][SS] ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும்[SE][SS] அறுவடைக்காகவும் எழும்[SE][SS] மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
10. [QS][SS] வளமான வயல் நிலங்களிலிருந்து[SE][SS] அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன.[SE][SS] திராட்சைத் தோட்டங்களில்[SE][SS] பாடல்கள் பாடுவார் யாருமில்லை;[SE][SS] ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை.[SE][SS] இரசம் எடுப்பதற்கு ஆலையில்[SE][SS] திராட்சைக்கனி பிழிவாருமில்லை;[SE][SS] பழம் பிழிவாரின் பூரிப்பும்[SE][SS] இல்லாதொழிந்தது; [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
11. [QS][SS] ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும்,[SE][SS] கீர்கேரசிற்காக என் இதயமும்[SE][SS] வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது; [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
12. [QS][SS] மோவாபியர் உயரமான[SE][SS] தொழுகை மேடுகளில்[SE][SS] வழிபாடு செய்து களைத்தும்,[SE][SS] திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும்[SE][SS] அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
13. இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; திவெ 8:10; 9:1 ]
14. ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; மத் 11:23; லூக் 10:15 ] [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 66
ஏசாயா 16:27
மோவாபின் நம்பிக்கையற்ற நிலை 1 சீயோன் மகளின் மலையில் நாட்டை ஆள்பவனுக்குச் சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச் செம்மறியாடு அனுப்புங்கள். 2 சிறகடித்து அலையும் பறவை போலும் கூடு இழந்த குஞ்சுபோலும் மோவாபிய மகளிர் அர்னோன் துறைகளில் காணப்படுவர். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 3 வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்; நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்; நண்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்கி, விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு மறைத்து வையுங்கள்; தப்பி ஓடுகிறவர்களைக் காட்டிக் கொடுக்காதீர்கள். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 4 மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள் உங்களிடமே தங்கியிருக்கட்டும்; அழிக்க வருபவனின் பார்வையிலிருந்து தப்ப அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்; ஒடுக்குபவன் ஒழிந்து போவான்; அழிவு ஓய்ந்து போகும்; மிதிக்கிறவர்கள் நாட்டில் இல்லாது போவர். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 5 அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால் ஓர் அரியணையை அமைப்பார்; அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த ஒருவர் வீற்றிருப்பார்; அவர் உண்மையுடன் ஆள்பவர்; நீதியை நிலைநாட்டுபவர்; நேர்மையானதைச் செய்ய விரைபவர். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 6 மோவாபின் இறுமாப்பைப்பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்; அவன் ஆணவம் பெரிதே; அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும் செருக்கையும் குறித்துக் கேள்விப்பட்டோம். அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 7 ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்; மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்; கீர் அரசேத்தின் திராட்சை அடைகளை நினைந்து, நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 8 எஸ்போனின் வயல்வெளி நிலங்கள் வாடுகின்றன, மக்களினங்களின் தலைவர்களை விழத் தள்ளிய சிபிமானின் திராட்சைத் தோட்டத்துக் கிளைகள் அழிந்துவிட்டன. அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன; பாலை நிலம்வரை படர்ந்திருந்தன; அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து கடல்கடந்து படர்ந்து சென்றன. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 9 ஆதலால் யாசேருக்காக அழுததுபோல் நான் சிபிமாவின் திராட்சைத் தோட்டத்திற்காகக் கண்ணீர் விடுகின்றேன்; எஸ்போன்! எலயாரே! உங்களை என் கண்ணீரால் நனைக்கின்றேன்; ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும் அறுவடைக்காகவும் எழும் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 10 வளமான வயல் நிலங்களிலிருந்து அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன. திராட்சைத் தோட்டங்களில் பாடல்கள் பாடுவார் யாருமில்லை; ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை. இரசம் எடுப்பதற்கு ஆலையில் திராட்சைக்கனி பிழிவாருமில்லை; பழம் பிழிவாரின் பூரிப்பும் இல்லாதொழிந்தது; * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 11 ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும், கீர்கேரசிற்காக என் இதயமும் வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது; * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 12 மோவாபியர் உயரமான தொழுகை மேடுகளில் வழிபாடு செய்து களைத்தும், திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும் அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 13 இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; திவெ 8:10; 9:1 14 ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; மத் 11:23; லூக் 10:15
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 16 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References