1. ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்துகொள்வார்; அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்டவரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள்.
|
2. மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்; தங்களை அடிமைப்படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்; அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள்.
|
3. ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில்,
|
4. பாபிலோன் மன்னனுக்கு எதிராக இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு; "ஒடுக்கியவன் ஒழிந்தானே! அவன் ஆணவமும் ஓய்ந்ததே!
|
6. அவர்கள் கோபத்தால் வெகுண்டு அடிமேல் அடியாக மக்களினங்களை அடித்து நொறுக்கினார்கள்; பிற நாட்டினரைத் தொடர்ந்து கொடுமைப்படுத்திக் கடுமையாய் ஆண்டார்கள்.
|
7. மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி அமைதியில் மூழ்கியிருக்கின்றது; மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்கின்றது.
|
8. தேவதாரு மரங்களும் லெபனோனின் கேதுரு மரங்களும் உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன; 'நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல் எமை வெட்டி வீழ்த்த எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை' எனப் பாடுகின்றன.
|
9. நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது; உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது. "
|
10. அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, "நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!
|
11. உன் இறுமாப்பும் உன் வீணைகளின் இசையொலியும் பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன; புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்! பூச்சிகள் உன் போர்வையாகும்!
|
12. வைகறைப் புதல்வனாகிய விடி வெள்ளியே! வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே! மக்களினங்களை வலிமை குன்றச் செய்தவனே, வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!
|
13. 'நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்; இறைவனுடைய விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில் என் அரியணையை ஏற்படுத்துவேன்; வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.
|
16. உன்னைக் காண்போர், உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து, 'மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும், அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,
|
17. பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி, அதன் நகரங்களை அழித்தவனும், தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப விடுதலை அளிக்காதிருப்பவனும் இவன் தானோ?' என்பர்.
|
19. நீயோ, அருவருப்பான அழுகிய இலைபோல, உன் கல்லறையிலிருந்து வெளியே வீசப்பட்டிருக்கிறாய்; வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு, நாற்றமெடுத்த பிணம்போலக் கிடக்கின்றாய்.
|
20. கல்லறையில் அவர்களோடு நீ இடம் பெறமாட்டாய்; ஏனெனில், உன் நாட்டை நீ அழித்து விட்டாய்; உன் மக்களைக் கொன்று போட்டாய்; தீங்கிழைப்போரின் வழிமரபு என்றுமே பெயரற்றுப் போகும்.
|
21. மூதாதையரின் தீச்செயல்களை முன்னிட்டு அவர்கள் புதல்வர்களுக்குக் கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்; நாட்டை உரிமையாக்க இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது; பூவுலகின் பரப்பை அவர்கள் நகரங்களால் நிரப்பக்கூடாது. "
|
22. "அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்" என்கிறார் படைகளின் ஆண்டவர், "பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன், "என்கிறார் ஆண்டவர்.
|
23. "அந்நாட்டை முள்ளம்பன்றிகளின் இடமாக்குவேன்; சேறும் சகதியும் நிறைந்த நீர்நிலையாக்குவேன்; அழிவு என்னும் துடைப்பத்தால் முற்றிலும் துடைத்துவிடுவேன்" என்கிறார் படைகளின் ஆண்டவர்.
|
24. படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறுகின்றார்; "நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்; நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.
|
25. என் அசீரியனை முறியடிப்பேன்; என் மலைகளின் மேல் அவனை மிதித்துப் போடுவேன்; அப்பொழுது அவனது நுகத்தடி அவர்களைவிட்டு அகலும்; அவன் வைத்த சுமை அவர்கள் தோளிலிருந்து இறங்கும்.
|
26. மண்ணுலகம் முழுவதையும்பற்றி நான் தீட்டிய திட்டம் இதுவே; பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.
|
27. படைகளின் ஆண்டவர் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைக்க வல்லவன் எவன்? அவர் தம் கையை ஓங்கியிருக்க அதை மடக்கக்கூடியவன் எவன்? "
|
29. பெலிஸ்திய நாட்டின் அனைத்து மக்களே, உங்களை அடித்த கோல் முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்; ஏனெனில் பாம்பின் வேரினின்று கட்டுவிரியன் புறப்பட்டு வரும்; அதன் கனியாகப் பறவைநாகம் வெளிப்படும்.
|
30. ஏழைகளின் தலைப்பிள்ளைகள் உணவு பெறுவார்கள்; வறியவர்கள் அச்சமின்றி இளைப்பாறுவார்கள்; உன் வழிமரபைப் பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன், உன்னில் எஞ்சியிருப்போரை நான் .
|
31. வாயிலே, வீறிட்டு அழு; நகரே, கதறியழு; எல்லாப் பெலிஸ்திய மக்களே; மனம் பதறுங்கள், ஏனெனில் வடபுறத்திலிருந்து புகையெனப் படை வருகின்றது. அதன் போர்வீரருள் கோழை எவனும் இல்லை.
|
32. அந்த நாட்டுத் தூதருக்கு என்ன மறுமொழி கூறப்படும்? "சீயோனுக்கு அடித்தளமிட்டவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுள் துயருறுவோர் அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே. "
|