1. {பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] ஆமோட்சின் மகன் எசாயா[SE][SS] பாபிலோனைக் குறித்துக் கண்ட[SE][SS] காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு:[SE][QE]
2. [QS][SS] வறண்ட மலை ஒன்றில்[SE][SS] போர்க்கொடி ஏற்றுங்கள்;[SE][SS] போர்வீரர்களை[SE][SS] உரக்கக் கூவி அழையுங்கள்;[SE][SS] உயர்குடி மக்கள் வாழும்[SE][SS] நகர வாயில்களுக்குள் நுழையும்படி,[SE][SS] அவர்களுக்குக் கையசைத்துச்[SE][SS] சைகை காட்டுங்கள். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
3. [QS][SS] போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள[SE][SS] என் வீரர்களுக்கு,[SE][SS] நானே ஆணை பிறப்பித்துள்ளேன்;[SE][SS] நான் சினமடைந்து பிறப்பித்துள்ள[SE][SS] என் கட்டளையை நிறைவேற்றிட,[SE][SS] தங்கள் வலிமையால்[SE][SS] பெருமிதம் கொள்ளும்[SE][SS] என் வீரர்களை அழைத்துள்ளேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
4. [QS][SS] மலைகளின் மேல் எழும்[SE][SS] பேரிரைச்சலைக் கேளுங்கள்;[SE][SS] அது பெருங்கூட்டமாய் வரும்[SE][SS] மக்களின் ஆரவாரம்;[SE][SS] அரசுகளின் ஆர்ப்பாட்டக்[SE][SS] குரலைக் கேளுங்கள்,[SE][SS] பிற இனத்தார் ஒருங்கே[SE][SS] திரண்டு விட்டனர்; [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
5. [QS][SS] தொலைநாட்டிலிருந்தும்[SE][SS] தொடுவானத்து எல்லைகளிலிருந்தும்[SE][SS] அவர்கள் வருகின்றார்கள்;[SE][SS] ஆண்டவர் தம் கடும்சினத்தின்[SE][SS] போர்க் கலன்களோடு[SE][SS] உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
6. [QS][SS] அழுது புலம்புங்கள்,[SE][SS] ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;[SE][SS] எல்லாம் வல்லவரிடமிருந்து[SE][SS] அழிவு வடிவத்தில் அது வருகின்றது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
7. [QS][SS] ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்;[SE][SS] மானிட நெஞ்சம் அனைத்தும்[SE][SS] உருகி நிற்கும். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; யோவே 1:15 ] [SE][QE]
8. [QS][SS] அவர்கள் திகிலடைவார்கள்;[SE][SS] துன்ப துயரங்கள்[SE][SS] அவர்களைக் கவ்விக்கொள்ளும்;[SE][SS] பேறுகாலப் பெண்ணைப்போல[SE][SS] வேதனையடைவார்கள்;[SE][SS] ஒருவர் மற்றவரைப் பார்த்துத்[SE][SS] திகைத்து நிற்பர்;[SE][SS] கோபத் தீயால் அவர்கள் முகம்[SE][SS] கனன்று கொண்டிருக்கும். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
9. [QS][SS] இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது,[SE][SS] கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும்[SE][SS] நிறைந்த நாள் அது;[SE][SS] மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும்[SE][SS] நாள் அது;[SE][SS] அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும்[SE][SS] அழித்துவிடும் நாள் அது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
10. [QS][SS] வானத்து விண்மீன்களும்[SE][SS] இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா;[SE][SS] தோன்றும்போதே கதிரவன்[SE][SS] இருண்டு போவான்;[SE][SS] வெண்ணிலாவும் தண்ணொளியைத்[SE][SS] தந்திடாது. [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
11. [QS][SS] உலகை அதன் தீச்செயலுக்காகவும்[SE][SS] தீயோரை அவர்தம்[SE][SS] கொடுஞ் செயலுக்காகவும்[SE][SS] நான் தண்டிப்பேன்;[SE][SS] ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்;[SE][SS] அச்சுறுத்துவோரின் இறுமாப்பை[SE][SS] அடக்குவேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; எசே 32:7; மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21:25; திவெ 6:12-13 ] [SE][QE]
12. [QS][SS] மானிடரைப் பசும் பொன்னைவிடவும்[SE][SS] மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும்[SE][SS] அரிதாக்குவேன். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
13. [QS][SS] ஆதலால், வானத்தை[SE][SS] நடுங்கச் செய்வேன்;[SE][SS] மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து[SE][SS] ஆட்டங் கொடுக்கும்;[SE][SS] படைகளின் ஆண்டவரது கோபத்தால்[SE][SS] அவரது கடும்சினத்தின் நாளில்[SE][SS] இது நடக்கும். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
14. [QS][SS] துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும்,[SE][SS] ஒன்று சேர்ப்பாரின்றிச்[SE][SS] சிதறுண்டு ஆடுகளைப் போலவும்,[SE][SS] எல்லாரும் தம் மக்களிடம்[SE][SS] திரும்பிச் செல்வர்;[SE][SS] எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத்[SE][SS] தப்பியோடுவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
15. [QS][SS] அகப்பட்ட ஒவ்வொருவரும்[SE][SS] பிடிபட்ட ஒவ்வொருவரும்[SE][SS] வாளால் மடிவர். [* :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 ] [SE][QE]
16. [QS][SS] அவர்கள் பச்சிளம் குழந்தைகள்[SE][SS] அவர்கள் கண்ணெதிரே[SE][SS] மோதியடிக்கப்படுவர்.[SE][SS] அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்,[SE][SS] அவர்கள் துணைவியர்[SE][SS] மானபங்கப்படுத்தப்படுவர்.[SE][QE]
17. [QS][SS] இதோ, அவர்களுக்கு எதிராக நான்[SE][SS] மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன்,[SE][SS] அவர்கள் வெள்ளியைப்[SE][SS] பெரிதாக எண்ணாதவர்கள்;[SE][SS] பொன்னை அடைவதற்கு[SE][SS] ஆவல் கொள்ளாதவர்கள்.[SE][QE]
18. [QS][SS] அவர்கள் வில்வீரர்[SE][SS] இளைஞரை மோதியடிப்பார்கள்,[SE][SS] பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள்[SE][SS] கருணை காட்டமாட்டார்கள்;[SE][SS] சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில்[SE][SS] இரக்கம் இராது.[SE][QE]
19. [QS][SS] அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின்[SE][SS] மேன்மையும் பெருமையுமான பாபிலோன்[SE][SS] கடவுள் அழித்த சோதோம்[SE][SS] கொமோராவைப்போல ஆகிவிடும்.[SE][QE]
20. [QS][SS] இனி எவரும் அதில்[SE][SS] ஒருபோதும் குடியிருக்க மாட்டார்;[SE][SS] அதுவும் தலைமுறை தலைமுறையாகக்[SE][SS] குடியற்று இருக்கும்;[SE][SS] அரேபியர் அங்கே[SE][SS] கூடாரம் அமைக்கமாட்டார்;[SE][SS] ஆயர்கள் தம் மந்தையை அங்கே[SE][SS] இளைப்பாற விடுவதில்லை. [* தொநூ 19:24 ] [SE][QE]
21. [QS][SS] ஆனால், காட்டு விலங்குகள்[SE][SS] அங்கே படுத்துக் கிடக்கும்;[SE][SS] ஊளையிடும் குள்ளநரிகள்[SE][SS] அவர்கள் வீடுகளை நிரப்பும்;[SE][SS] தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்;[SE][SS] வெள்ளாட்டுக் கிடாய்கள்[SE][SS] அங்கே துள்ளித் திரியும்.[SE][QE]
22. [QS][SS] அவர்கள் கோட்டைகளில்[SE][SS] ஓநாய்கள் அலறும்;[SE][SS] அரண்மனைகளில்[SE][SS] குள்ளநரிகள் ஊளையிடும்;[SE][SS] அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது;[SE][SS] அதற்குரிய நாள்கள்[SE][SS] அண்மையில் உள்ளன. [* எசா 34:14; செப் 2:14; திவெ 18:2.[QE] ] [SE][PE]