1. [PS] [QS][SS] அநீதியான சட்டங்களை[SE][SS] இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு![SE][SS] மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை[SE][SS] எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு![SE][QE]
2. [QS][SS] அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல்,[SE][SS] அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்;[SE][SS] எம் மக்களுள் எளியோரின் உரிமையை[SE][SS] அவர்கள் திருடுகின்றார்கள்;[SE][SS] கைம்பெண்களைக்[SE][SS] கொள்ளைப் பொருளாய் எண்ணிச்[SE][SS] சூறையாடுகிறார்கள்.[SE][SS] திக்கற்றோரை[SE][SS] இரையாக்கிக் கொள்கின்றார்கள்.[SE][QE]
3. [QS][SS] தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்?[SE][SS] தொலைநாட்டிலிருந்து[SE][SS] அழிவாகிய சூறைக்காற்று வரும்போது[SE][SS] என்ன ஆவீர்கள்?[SE][SS] உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்?[SE][SS] உங்கள் செல்வங்களை[SE][SS] எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?[SE][QE]
4. [QS][SS] கட்டுண்ட கைதிகளிடையே[SE][SS] தலை கவிழ்ந்து வருவீர்கள்;[SE][SS] இல்லையேல் வெட்டுண்டு[SE][SS] மடிந்தோரிடையே வீழ்வீர்கள்.[SE][SS] இதிலெல்லாம்[SE][SS] ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை.[SE][SS] ஓங்கிய அவரது சினக் கை[SE][SS] இன்னும் மடங்கவில்லை.[SE][PE][QE]
5. {ஆண்டவரின் கருவி அசீரியா} [PS] [QS][SS] அசீரிய நாடு![SE][SS] சினத்தில் நான் பயன்படுத்தும்[SE][SS] கோல் அது;[SE][SS] தண்டனை வழங்க[SE][SS] நான் ஏந்தும் தடி அது. [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
6. [QS][SS] இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு[SE][SS] அந்நாட்டை நான் அனுப்புகிறேன்;[SE][SS] எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க[SE][SS] அதற்கு ஆணை கொடுக்கிறேன்;[SE][SS] அம்மக்களைக் கொள்ளையிடவும்[SE][SS] அவர்கள் பொருள்களைச் சூறையாடவும்,[SE][SS] தெருவில் கிடக்கும் சேற்றைப்போல[SE][SS] அவர்களை மிதித்துப் போடவும்,[SE][SS] அதற்குக் கட்டளை தருகிறேன். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
7. [QS][SS] அசீரிய அரசன் நினைப்பதோ வேறு,[SE][SS] அவனது உள்ளத்தில் எழும்[SE][SS] திட்டங்கள் வேறு;[SE][SS] மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத்[SE][SS] தன் இதயத்தில் எண்ணுகிறான்;[SE][SS] பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த[SE][SS] அவன் விரும்புகிறான். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
8. [QS][SS] அவன் இறுமாப்புடன் சொல்வதாவது:[SE][SS] “என் படைத்தலைவர்கள்[SE][SS] ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா? [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
9. [QS][SS] கல்னேர் நகர் கர்கமிசு நகர்[SE][SS] போன்ற தல்லவா?[SE][SS] ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு[SE][SS] இணையல்லவா?[SE][SS] சமாரியா நகர் தமஸ்கு நகரை[SE][SS] ஒத்ததல்லவா? [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
10. [QS][SS] சிறப்பு வாய்ந்த,[SE][SS] சிலைவணங்கும் அரசுகள் வரை[SE][SS] என் கை எட்டியிருக்கின்றது;[SE][SS] அந்நாட்டுச் சிலைகள்[SE][SS] எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட[SE][SS] எண்ணிக்கையில் மிகுதி. [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
11. [QS][SS] சமாரியாவையும்[SE][SS] அதிலுள்ள சிலைகளையும்[SE][SS] அழித்துப் பாழ்படுத்தியவன் நான்;[SE][SS] இப்படியிருக்க, எருசலேமுக்கும்[SE][SS] அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும்[SE][SS] அவ்வாறே செய்யமாட்டேனோ?” [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
12. [QS][SS] எனவே சீயோன் மலைமேலும்[SE][SS] எருசலேமிலும் என் வேலைகள்[SE][SS] அனைத்தையும் முடித்தபின்,[SE][SS] ஆணவம் நிறைந்த அசீரிய அரசனின்[SE][SS] சிந்தனையை முன்னிட்டும்,[SE][SS] இறுமாப்புடன் அவன் பேசிய[SE][SS] பேச்சுகளை முன்னிட்டும்[SE][SS] “அவனை நான் தண்டிப்பேன்”[SE][SS] என்கிறார் என் தலைவர். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
13. [QS][SS] ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்:[SE][SS] “என் கைவலிமையாலே[SE][SS] நான் அதைச் செய்து முடித்தேன்;[SE][SS] என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும்[SE][SS] அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்;[SE][SS] மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள[SE][SS] எல்லைகளை அகற்றினேன்;[SE][SS] அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்;[SE][SS] அரியணையில் வீற்றிருந்தோரை[SE][SS] ஒரு காளை மிதிப்பதுபோல்[SE][SS] மிதித்துப்போட்டேன். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
14. [QS][SS] குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல்[SE][SS] என் கை மக்களினங்களின்[SE][SS] செல்வங்களைக் கண்டு[SE][SS] எடுத்துக்கொண்டது;[SE][SS] புறக்கணித்த முட்டைகளை[SE][SS] ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல்[SE][SS] நாடுகள் யாவற்றையும்[SE][SS] ஒருங்கே சேர்த்துக்கொண்டேன்.[SE][SS] எனக்கெதிராக ஒருவரும்[SE][SS] இறக்கை அடிக்கவில்லை.[SE][SS] வாய் திறக்கவில்லை,[SE][SS] கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.” [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
15. [QS][SS] வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு[SE][SS] மேலாகக் கோடரி தன்னை[SE][SS] மேன்மை பாராட்டுவதுண்டோ?[SE][SS] அறுப்பவனைவிடத்[SE][SS] தன்னைச் சிறப்புமிக்கதாக[SE][SS] வாள் கருத இயலுமோ?[SE][SS] தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக்[SE][SS] கைத்தடியால் கூடுமோ?[SE][SS] மரம் அல்லாத மனிதனைத் தூக்க[SE][SS] மரத்தால் ஆன கோலால் இயலுமோ? [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
16. [QS][SS] ஆதலால் தலைவராகிய[SE][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] பாழாக்கும் கொள்ளை நோயை[SE][SS] அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே[SE][SS] அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ்[SE][SS] தீ ஒன்றை வைப்பார்;[SE][SS] அவர் நெருப்பு மூட்டுவார்;[SE][SS] அது கொழுந்துவிட்டு எரியும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
17. [QS][SS] இஸ்ரயேலின் ஒளியானவர்[SE][SS] நெருப்பாக மாறுவார்;[SE][SS] அதன் தூயவர்[SE][SS] தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்;[SE][SS] அது அவனுடைய முட்புதர்களையும்[SE][SS] நெருஞ்சி முள்களையும்,[SE][SS] ஒரே நாளில் சுட்டெரித்துச்[SE][SS] சாம்பலாக்கி விடும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
18. [QS][SS] வனப்புமிக்க அவனுடைய காடுகள்,[SE][SS] செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள்[SE][SS] யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்;[SE][SS] அது நோயாளி ஒருவன்[SE][SS] உருக்குலைவதை ஒத்திருக்கும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
19. [QS][SS] அவனது காட்டில் மிகச் சில[SE][SS] மரங்களே எஞ்சியிருக்கும்;[SE][SS] ஒரு சிறுவன்கூட அவற்றை[SE][SS] எண்ணி எழுதிவிடலாம். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][PE][QE]
20. {எஞ்சியோரின் மீட்பு} [PS] அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ]
21. யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ]
22. இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்; அழிவு நெருங்கி வந்தாயிற்று; அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ; உரோ 9:27.[QE]. ]
23. ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ; உரோ 9:27.[QE]. ] [PE]
24. {அசீரியாவுக்கு ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு} [PS] என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்; [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ]
25. ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்; அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்”. [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ]
26. ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீதுதமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ]
27. அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்; உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [PE]
28. {பகைவனின் படையெடுப்பு} [PS] [QS][SS] பகைவன் அய்யாத்துக்கு எதிராகப்[SE][SS] போர் தொடுத்துள்ளான்;[SE][SS] அவன் மிக்ரோனைக்[SE][SS] கடந்து வந்துவிட்டான்;[SE][SS] மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை[SE][SS] வைத்திருக்கிறான். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
29. [QS][SS] கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்;[SE][SS] கேபாவில் தங்கி[SE][SS] இரவைக் கழிக்கின்றார்கள்;[SE][SS] இராமா நகரின் மக்கள்[SE][SS] அஞ்சி நடுங்குகின்றார்கள்;[SE][SS] சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள்[SE][SS] ஓட்டமெடுக்கின்றார்கள். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
30. [QS][SS] பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்;[SE][SS] இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்;[SE][SS] அனத்தோத்தின் மக்களே,[SE][SS] மறுமொழி கூறுங்கள். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
31. [QS][SS] மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்;[SE][SS] கேபிமினில் வாழ்வோர்[SE][SS] புகலிடம் தேடி ஓடுகிறார்கள். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
32. [QS][SS] இன்றே அப்பகைவன்[SE][SS] நோபு நகரில் தங்குவான்;[SE][SS] அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும்[SE][SS] எருசலேமின் குன்றிற்கும்[SE][SS] எதிராகக் கையை ஓங்கி அசைப்பான். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
33. [QS][SS] நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர்[SE][SS] அச்சுறுத்தும் ஆற்றலால்,[SE][SS] கிளைகளை வெட்டி வீழ்த்துவார்;[SE][SS] உயர்ந்தவற்றின் கிளைகள்[SE][SS] துண்டிக்கப்படும்;[SE][SS] செருக்குற்றவை தாழ்த்தப்படும்;[SE][SS] நிமிர்ந்து நிற்பவை[SE][SS] தரைமட்டமாக்கப்படும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][QE]
34. [QS][SS] அடர்ந்த காட்டை அவர்[SE][SS] கோடரியால் வெட்டி வீழ்த்துவார்;[SE][SS] லெபனோன் தன் உயர்ந்த[SE][SS] மரங்களுடன் தரையிலே சாயும். [* எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15. ] [SE][PE]