தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஏசாயா
1. [PS] உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:[PE]
2. {கடவுள் தம் மக்களைக் கண்டித்தல்} [PS] [QS][SS] விண்வெளியே கேள்;[SE][SS] மண்ணுலகே செவிகொடு:[SE][SS] ஆண்டவர் திருவாய்[SE][SS] மலர்ந்தருளுகின்றார்;[SE][SS] பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்;[SE][SS] அவர்களோ எனக்கெதிராகக்[SE][SS] கிளர்ந்தெழுந்தார்கள். [* 2 அர 15:1-7; 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 26:1-32:33 ] [SE][QE]
3. [QS][SS] காளை தன் உடைமையாளனை[SE][SS] அறிந்து கொள்கின்றது;[SE][SS] கழுதை தன் தலைவன் தனக்குத்[SE][SS] தீனி போடும் இடத்தைத்[SE][SS] தெரிந்து கொள்கின்றது;[SE][SS] ஆனால் இஸ்ரயேலோ[SE][SS] என்னை அறிந்து கொள்ளவில்லை;[SE][SS] என் மக்களோ[SE][SS] என்னைப் புரிந்து கொள்ளவில்லை.[SE][QE]
4. [QS][SS] ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது;[SE][SS] அநீதி செய்வோரின் கூட்டம் இது;[SE][SS] தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது;[SE][SS] கேடுகெட்ட மக்கள் இவர்கள்;[SE][SS] ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்;[SE][SS] இஸ்ரயேலின் தூயவரை[SE][SS] அவமதித்துவிட்டார்கள்;[SE][SS] அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.[SE][QE]
5. [QS][SS] நீங்கள் ஏன் தொடர்ந்து[SE][SS] வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்?[SE][SS] என் கையால் பட்ட அடி போதாதா?[SE][SS] உங்கள் தலையெல்லாம் வடுக்கள்;[SE][SS] இதயமெல்லாம் தளர்ச்சி.[SE][QE]
6. [QS][SS] உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை[SE][SS] உங்கள் உடலில் நலமே இல்லை;[SE][SS] ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள்,[SE][SS] சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன;[SE][SS] அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை,[SE][SS] கட்டு போடப்படவில்லை,[SE][SS] எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.[SE][QE]
7. [QS][SS] உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது;[SE][SS] உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின;[SE][SS] வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே[SE][SS] உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்;[SE][SS] வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட[SE][SS] உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.[SE][QE]
8. [QS][SS] மகள் சீயோன்[SE][SS] திராட்சைத் தோட்டத்துக்[SE][SS] குடில் போன்றும்[SE][SS] வெள்ளரித் தோட்டத்துக்[SE][SS] குடிசை போன்றும்[SE][SS] முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும்[SE][SS] கைவிடப்பட்டாள்.[SE][QE]
9. [QS][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] நம்மில் சிலரையேனும்[SE][SS] எஞ்சியிருக்கச் செய்யாவிடில்[SE][SS] சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்.[SE][SS] கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.[SE][PE][QE]
10. {வெளிவேடக்காரருக்கு எதிராக} [PS] [QS][SS] எருசலேமே,[SE][SS] உன்னை ஆளுகிறவர்களும்[SE][SS] உன் மக்களும்,[SE][SS] சோதோம் கொமோராவைப்[SE][SS] போன்றவர்களாயிருக்கின்றனர்;[SE][SS] நம் ஆண்டவரின்[SE][SS] அறிவுரையைக் கேளுங்கள்;[SE][SS] அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.[SE][QE]
11. [QS][SS] “எண்ணற்ற உங்கள் பலிகள்[SE][SS] எனக்கு எதற்கு?”[SE][SS] என்கிறார் ஆண்டவர்.[SE][SS] ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும்,[SE][SS] கொழுத்த விலங்குகளின் கொழுப்பும்[SE][SS] எனக்குப் போதுமென்றாகிவிட்டன;[SE][SS] காளைகள், ஆட்டுக் குட்டிகள்,[SE][SS] வெள்ளாட்டுக் கிடாய்கள்[SE][SS] இவற்றின் இரத்தத்திலும்[SE][SS] எனக்கு நாட்டமில்லை.[SE][QE]
12. [QS][SS] நீங்கள் என்னை வழிபட[SE][SS] என் திருமுன் வரும்போது,[SE][SS] இவற்றையெல்லாம் கொண்டு வந்து[SE][SS] என் கோவில் முற்றத்தை[SE][SS] மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்? [* ஆமோ 5:21-22.[QE] ] [SE][QE]
13. [QS][SS] இனி, காணிக்கைகளை[SE][SS] வீணாகக் கொண்டுவர வேண்டாம்;[SE][SS] நீங்கள் காட்டும் தூபம்[SE][SS] எனக்கு அருவருப்பையே தருகின்றது;[SE][SS] நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும்[SE][SS] அமாவாசை, ஓய்வுநாள்[SE][SS] வழிபாட்டுக் கூட்டங்களை[SE][SS] நான் சகிக்க மாட்டேன். [* ஆமோ 5:21-22.[QE] ] [SE][QE]
14. [QS][SS] உங்கள் அமாவாசை, திருவிழாக்[SE][SS] கூட்டங்களையும்,[SE][SS] என் உள்ளம் வெறுக்கின்றது;[SE][SS] அவை என் மேல் விழுந்த சுமையாயின;[SE][SS] அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். [* ஆமோ 5:21-22.[QE] ] [SE][QE]
15. [QS][SS] என்னை நோக்கி உங்கள் கைகளை[SE][SS] நீங்கள் உயர்த்தும் போது,[SE][SS] பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்;[SE][SS] நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும்[SE][SS] நான் செவிகொடுப்பதில்லை;[SE][SS] உங்கள் கைகளோ[SE][SS] இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. [* ஆமோ 5:21-22.[QE] ] [SE][QE]
16. [QS][SS] உங்களைக் கழுவித்[SE][SS] தூய்மைப்படுத்துங்கள்;[SE][SS] உங்கள் தீச்செயலை[SE][SS] என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்;[SE][SS] தீமை செய்தலை விட்டொழியுங்கள்;[SE][QE]
17. [QS][SS] நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்;[SE][SS] நீதியை நாடித் தேடுங்கள்;[SE][SS] ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்;[SE][SS] திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்;[SE][SS] கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.[SE][QE]
18. [QS][SS] “வாருங்கள், இப்பொழுது[SE][SS] நாம் வழக்காடுவோம்”[SE][SS] என்கிறார் ஆண்டவர்;[SE][SS] “உங்கள் பாவங்கள்[SE][SS] கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன;[SE][SS] எனினும் உறைந்த பனிபோல[SE][SS] அவை வெண்மையாகும்.[SE][SS] இரத்த நிறமாய்[SE][SS] அவை சிவந்திருக்கின்றன;[SE][SS] எனினும் பஞ்சைப்போல்[SE][SS] அவை வெண்மையாகும்.[SE][QE]
19. [QS][SS] மனமுவந்து நீங்கள்[SE][SS] எனக்கு இணங்கி நடந்தால்;[SE][SS] நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.[SE][QE]
20. [QS][SS] மாறாக, இணங்க மறுத்து[SE][SS] எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால்,[SE][SS] திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்;[SE][SS] ஏனெனில் ஆண்டவர்தாமே[SE][SS] இதைக் கூறினார்.[SE][PE][QE]
21. {அநீதி நிறைந்த எருசலேம்} [PS] [QS][SS] உண்மையாய் இருந்த நகரம்,[SE][SS] எப்படி விலைமகள் போல் ஆயிற்று![SE][SS] முன்பு அந்நகரில்[SE][SS] நேர்மை நிறைந்திருந்தது;[SE][SS] நீதி குடி கொண்டிருந்தது;[SE][SS] இப்பொழுதோ,[SE][SS] கொலைபாதகர் மலிந்துள்ளனர்.[SE][QE]
22. [QS][SS] உன் வெள்ளி களிம்பேறிற்று;[SE][SS] உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.[SE][QE]
23. [QS][SS] உன் தலைவர்கள்[SE][SS] வன்முறையில் ஈடுபடுகின்றனர்;[SE][SS] திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்;[SE][SS] கையூட்டு வாங்குவதற்கு[SE][SS] ஒவ்வொருவனும் ஏங்குகின்றான்.[SE][SS] திக்கற்றோருக்கு அவர்கள்[SE][SS] நீதி வழங்குவதில்லை;[SE][SS] கைம்பெண்ணின் வழக்குகளைத்[SE][SS] தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.[SE][QE]
24. [QS][SS] ஆதலால், படைகளின் ஆண்டவரும்[SE][SS] இஸ்ரயேலின் வல்லவருமாகிய[SE][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] என் எதிரிகளைப் பழிவாங்குவேன்;[SE][SS] என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத்[SE][SS] தீர்த்துக்கொள்வேன்.[SE][QE]
25. [QS][SS] உனக்கு நேராக[SE][SS] என் கைகளை நீட்டுவேன்;[SE][SS] உன்னை நன்றாகப் புடமிட்டு[SE][SS] உன் களிம்பை நீக்குவேன்;[SE][SS] உன்னிடமுள்ள உலோகக் கலவை[SE][SS] அனைத்தையும் நீக்குவேன்.[SE][QE]
26. [QS][SS] முன்னாளில் இருந்தது போலவே[SE][SS] உன் நீதிபதிகளைத்[SE][SS] திருப்பிக் கொணர்வேன்;[SE][SS] தொடக்க காலத்தில் இருந்தது போலவே[SE][SS] உன் ஆலோசகர்களை[SE][SS] மீண்டும் தருவேன்;[SE][SS] அப்பொழுது எருசலேம்[SE][SS] ‘நீதியின் நகர்’[SE][SS] எனப் பெயர் பெறும்;[SE][SS] ‘உண்மையின் உறைவிடம்’ எனவும்[SE][SS] அழைக்கப்படும்.[SE][QE]
27. [QS][SS] நீதி சீயோனை மீட்கும்;[SE][SS] நேர்மை மனமாற்றம் அடைவோரை[SE][SS] விடுவிக்கும்.[SE][QE]
28. [QS][SS] ஆனால் வன்முறையாளரும் பாவிகளும்[SE][SS] ஒருங்கே அழிந்தொழிவர்;[SE][SS] ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள்[SE][SS] அனைவரும் இல்லாதொழிவர்;[SE][QE]
29. [QS][SS] நீங்கள் நாடி வழிபட்ட[SE][SS] தேவதாரு மரங்களை முன்னிட்டு[SE][SS] மானக்கேடு அடைவீர்கள்;[SE][SS] நீங்கள் தெரிந்து கொண்ட[SE][SS] சோலைகளை முன்னிட்டு[SE][SS] நாணுவீர்கள்;[SE][QE]
30. [QS][SS] ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த[SE][SS] தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்;[SE][SS] நீரின்றி வாடிப்போகும்[SE][SS] சோலையைப் போலவும் இருப்பீர்கள்;[SE][QE]
31. [QS][SS] வலிமை மிக்கவன்[SE][SS] சணற் கூளம் போலாவான்;[SE][SS] அவனுடைய கைவேலைப்பாடும்[SE][SS] தீப்பொறியாகும்;[SE][SS] அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்;[SE][SS] நெருப்புத் தணலை அணைப்பார்[SE][SS] எவரும் இரார்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 66
ஏசாயா 1:36
1 உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: கடவுள் தம் மக்களைக் கண்டித்தல் 2 விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு: ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்; பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்; அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். * 2 அர 15:1-7; 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 26:1-32:33 3 காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை. 4 ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது; அநீதி செய்வோரின் கூட்டம் இது; தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது; கேடுகெட்ட மக்கள் இவர்கள்; ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்; இஸ்ரயேலின் தூயவரை அவமதித்துவிட்டார்கள்; அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள். 5 நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்? என் கையால் பட்ட அடி போதாதா? உங்கள் தலையெல்லாம் வடுக்கள்; இதயமெல்லாம் தளர்ச்சி. 6 உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை. 7 உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது; உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின; வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்; வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது. 8 மகள் சீயோன் திராட்சைத் தோட்டத்துக் குடில் போன்றும் வெள்ளரித் தோட்டத்துக் குடிசை போன்றும் முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும் கைவிடப்பட்டாள். 9 படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம். கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம். வெளிவேடக்காரருக்கு எதிராக 10 எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாயிருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள். 11 “எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?” என்கிறார் ஆண்டவர். ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன; காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை. 12 நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்? [* ஆமோ 5:21-22. ] 13 இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். [* ஆமோ 5:21-22. ] 14 உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். [* ஆமோ 5:21-22. ] 15 என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. [* ஆமோ 5:21-22. ] 16 உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; 17 நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள். 18 “வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்கிறார் ஆண்டவர்; “உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். 19 மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்; நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். 20 மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார். அநீதி நிறைந்த எருசலேம் 21 உண்மையாய் இருந்த நகரம், எப்படி விலைமகள் போல் ஆயிற்று! முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது; நீதி குடி கொண்டிருந்தது; இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர். 22 உன் வெள்ளி களிம்பேறிற்று; உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று. 23 உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்; கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகின்றான். திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை; கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. 24 ஆதலால், படைகளின் ஆண்டவரும் இஸ்ரயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் எதிரிகளைப் பழிவாங்குவேன்; என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத் தீர்த்துக்கொள்வேன். 25 உனக்கு நேராக என் கைகளை நீட்டுவேன்; உன்னை நன்றாகப் புடமிட்டு உன் களிம்பை நீக்குவேன்; உன்னிடமுள்ள உலோகக் கலவை அனைத்தையும் நீக்குவேன். 26 முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்; தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்; அப்பொழுது எருசலேம் ‘நீதியின் நகர்’ எனப் பெயர் பெறும்; ‘உண்மையின் உறைவிடம்’ எனவும் அழைக்கப்படும். 27 நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும். 28 ஆனால் வன்முறையாளரும் பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவர்; ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்; 29 நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு மானக்கேடு அடைவீர்கள்; நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு நாணுவீர்கள்; 30 ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்; நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்; 31 வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்; அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும்; அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்; நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References