1. {இஸ்ரயேலுக்கு வரும் தண்டனைத் தீர்ப்பு} [PS] [QS][SS] இஸ்ரயேலே! நீ களிப்புறாதே; மற்ற[SE][SS] மக்களைப்போல் நீ அக்களிக்காதே.[SE][SS] உன் கடவுளைக் கைவிட்டு[SE][SS] நீ வேசித் தொழில் புரிந்தாய்;[SE][SS] கதிரடிக்கும் களமெல்லாம் நீ[SE][SS] விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.[SE][QE]
2. [QS][SS] கதிரடிக்கும் களமும்,[SE][SS] திராட்சைக் கனி பிழியும் ஆலையும்[SE][SS] அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா;[SE][SS] புதிய திராட்சை இரசமும்[SE][SS] இல்லாமல் போகும்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரின் நாட்டில்[SE][SS] அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்;[SE][SS] எப்ராயிம் எகிப்துக்குத்[SE][SS] திரும்பிப் போவான்;[SE][SS] அவர்கள் அசீரியாவில்[SE][SS] தீட்டுப்பட்டதை உண்பார்கள்.[SE][QE]
4. [QS][SS] திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு[SE][SS] நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்;[SE][SS] அவர்களின் பலிகள்[SE][SS] அவருக்கு உகந்தவை ஆகமாட்டா;[SE][SS] அவை அவர்களுக்கு[SE][SS] இழவு வீட்டு உணவு போலிருக்கும்;[SE][SS] அவற்றை உண்பவர் யாவரும்[SE][SS] தீட்டுப்படுவர்;[SE][SS] ஏனெனில், அவை அவர்களின்[SE][SS] பசி தீர்க்கும் உணவே ஆகும்.[SE][SS] ஆண்டவரின் கோவிலில்[SE][SS] அவை படைக்கப்படுவதில்லை.[SE][QE]
5. [QS][SS] விழா நாள்களில்[SE][SS] அவர்கள் என்ன செய்கின்றார்கள்?[SE][SS] ஆண்டவரின் திருநாளன்று[SE][SS] அவர்கள் செய்வதென்ன?[SE][QE]
6. [QS][SS] அவர்கள் அழிவுக்குத்[SE][SS] தப்பி ஓடுவார்கள்;[SE][SS] எகிப்து அவர்களைச்[SE][SS] சேர்த்துக் கொள்ளும்;[SE][SS] மெம்பிசில் அவர்கள்[SE][SS] அடக்கம் செய்யப்படுவார்கள்.[SE][SS] அவர்கள் விரும்பி வைத்திருந்த[SE][SS] வெள்ளியால் செய்த[SE][SS] அரிய பொருள்கள்[SE][SS] காஞ்சொறிச் செடிகளுக்கு[SE][SS] உரிமைச் சொத்தாகும்.[SE][SS] அவர்களின் கூடாரங்களில்[SE][SS] முட்புதர்கள் வளரும்.[SE][PE][QE]
7. {இஸ்ரயேலரின் பாவமும் அதற்கான தண்டனையும்} [PS] [QS][SS] தண்டனைத் தீர்ப்புப் பெறும்[SE][SS] நாள்கள் வந்துவிட்டன;[SE][SS] பதிலடி கிடைக்கும்[SE][SS] நாள்கள் வந்துவிட்டன;[SE][SS] இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர்.[SE][SS] உன் தீச்செயலின் மிகுதியாலும்,[SE][SS] பெரும் பகையுணர்ச்சியாலும்[SE][SS] ‘இறைவாக்கினன்[SE][SS] மூடனாய் இருக்கிறான்;[SE][SS] இறை ஆவி பெற்றவன்[SE][SS] வெறிக்கொண்டு உளறுகின்றான்,’[SE][SS] என்கின்றாய். [* லூக் 21:22. ] [SE][QE]
8. [QS][SS] என் கடவுளின் மக்களாகிய[SE][SS] எப்ராயிமுக்கு இறைவாக்கினன்[SE][SS] காவலாளியாய் இருக்கின்றான்;[SE][SS] ஆயினும் வேடன் ஒருவனின் வலை[SE][SS] அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது;[SE][SS] அவனுடைய கடவுளின் கோவிலிலும்[SE][SS] பகைமை நிலவுகின்றது.[SE][QE]
9. [QS][SS] கிபயாவின் நாள்களில்[SE][SS] நடந்ததுபோலவே,[SE][SS] அவர்கள் கொடுமை செய்வதில்[SE][SS] ஆழ்ந்திருக்கின்றார்கள்;[SE][SS] அவர்களுடைய தீச்செயலை[SE][SS] ஆண்டவர் நினைவில் கொள்வார்;[SE][SS] அவர்களுடைய பாவங்களுக்குத்[SE][SS] தண்டனை கொடுப்பார். [* நீத 19:1-30. ] [SE][QE]
10. [QS][SS] பாலைநிலத்தில்[SE][SS] திராட்சைக் குலைகளைக்[SE][SS] கண்டது போல்[SE][SS] நான் இஸ்ரயேலைக்[SE][SS] கண்டுபிடித்தேன்.[SE][SS] பருவகாலத் தொடக்கத்தின்[SE][SS] முதல் அத்திப் பழங்களைப்போல்[SE][SS] உங்கள் தந்தையரைக்[SE][SS] கண்டு பிடித்தேன்.[SE][SS] அவர்களோ[SE][SS] பாகால் பெயோருக்கு வந்து,[SE][SS] மானக்கேடானவற்றுக்குத்[SE][SS] தங்களையே நேர்ந்து கொண்டார்கள். [* எண் 25:1-5.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] எப்ராயிமின், மேன்மை[SE][SS] பறவைபோல் பறந்தோடிவிடும்;[SE][SS] அவர்களுக்குள்[SE][SS] பிறப்போ, கருத்தாங்குவதோ,[SE][SS] கருத்தரிப்பதோ எதுவுமே இராது.[SE][QE]
12. [QS][SS] அவர்கள் பிள்ளைகளைப்[SE][SS] பெற்று வளர்த்தாலும்,[SE][SS] ஒருவனும் எஞ்சியிராமல்[SE][SS] அப்பிள்ளைகளை[SE][SS] இழக்கச் செய்வேன்;[SE][SS] நான் அவர்களைவிட்டு[SE][SS] அகன்றுவிட்டால்,[SE][SS] அவர்களுக்கு ஐயோ கேடு![SE][QE]
13. [QS][SS] நான் பார்த்ததற்கிணங்க,[SE][SS] எப்ராயிம் தம் மக்களைக்[SE][SS] கொள்ளைப் பொருளாய்[SE][SS] ஆக்கியிருக்கின்றான்;[SE][SS] எப்ராயிம் தம் மக்களையெல்லாம்[SE][SS] கொலைக் களத்திற்குக்[SE][SS] கூட்டிச் செல்வான்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவரே,[SE][SS] அவர்களுக்குக் கொடுத்தருளும்,[SE][SS] எதைக் கொடுப்பீர்?[SE][SS] கருச்சிதைவையும் கருப்பையையும்[SE][SS] பால் சுரவா முலைகளையும்[SE][SS] கொடுத்தருளும்.[SE][PE][QE]
15. {கில்காலில் செய்த பாவத்திற்குத் தண்டனை} [PS] [QS][SS] அவர்களின்[SE][SS] கொடுஞ்செயல்கள் யாவும்[SE][SS] கில்காலில் உருவாயின;[SE][SS] அங்கேதான் நான் அவர்களைப் [BR] பகைக்கத் தொடங்கினேன்;[SE][SS] அவர்களுடைய[SE][SS] தீச்செயல்களை முன்னிட்டு[SE][SS] என் வீட்டினின்றும்[SE][SS] நான் அவர்களை விரட்டியடிப்பேன்;[SE][SS] இனி அவர்கள்மேல்[SE][SS] அன்புகொள்ள மாட்டேன்,[SE][SS] அவர்களின் தலைவர்கள் அனைவரும்[SE][SS] கலகக்காரராய் இருக்கிறார்கள்.[SE][QE]
16. [QS][SS] எப்ராயிம் மக்கள்[SE][SS] வெட்டுண்டு வீழ்ந்தார்கள்;[SE][SS] அவர்களுடைய வேர்[SE][SS] உலர்ந்து போயிற்று;[SE][SS] இனிமேல் அவர்கள்[SE][SS] கனி கொடுக்கமாட்டார்கள்;[SE][SS] அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும்,[SE][SS] நான் அவர்களுடைய[SE][SS] அன்புக் குழந்தைகளைக்[SE][SS] கொன்றுவிடுவேன்.[SE][QE]
17. [QS][SS] என் கடவுள்[SE][SS] அவர்களைத் தள்ளிவிடுவார்;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] அவருக்குச் செவி கொடுக்கவில்லை;[SE][SS] வேற்றினத்தார் நடுவில் அவர்கள்[SE][SS] நாடோடிகளாய்த் திரிவார்கள்.[SE][PE]