1. [PS] [QS][SS] எக்காளத்தை ஊது![SE][SS] கழுகு ஒன்று ஆண்டவருடைய[SE][SS] வீட்டின்மேல் பாய்ந்து வருகின்றது;[SE][SS] அவர்கள் என் உடன்படிக்கையை[SE][SS] மீறினார்கள்;[SE][SS] என் திருச்சட்டத்தை மீறி நடந்தார்கள்.[SE][QE]
2. [QS][SS] இஸ்ரயேலர் என்னை நோக்கிக்[SE][SS] கூக்குரலிட்டு,[SE][SS] “எங்கள் கடவுளே,[SE][SS] நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்”[SE][SS] என்று சொல்கின்றார்கள்.[SE][QE]
3. [QS][SS] இஸ்ரயேலரோ[SE][SS] நலமானதை வெறுத்து விட்டார்கள்;[SE][SS] பகைவன் அவர்களைத் துரத்துவான்.[SE][PE][QE]
4. {அரசியல் குழப்பமும் சிலைவழிபாடும்} [PS] [QS][SS] அவர்கள் தாங்களே அரசர்களை[SE][SS] ஏற்படுத்திக் கொண்டார்கள்;[SE][SS] அது என்னாலே அன்று;[SE][SS] அவர்களே தலைவர்களை[SE][SS] நியமித்துக் கொண்டார்கள்;[SE][SS] அதைப்பற்றியும் நான் ஒன்றுமறியேன்.[SE][SS] தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும்[SE][SS] தங்களுக்கெனச்[SE][SS] சிலைகளைச் செய்தார்கள்;[SE][SS] தாங்கள் அழிந்துபோகவே அவற்றைச் செய்தார்கள்.[SE][QE]
5. [QS][SS] சமாரியா மக்கள் வழிபடும்[SE][SS] கன்றுக்குட்டியை[SE][SS] நான் வெறுக்கின்றேன்;[SE][SS] என் கோபத்தீ[SE][SS] அவர்களுக்கு எதிராய் எரிகின்றது.[SE][SS] இன்னும் எத்துணைக் காலம்[SE][SS] அவர்கள் தூய்மையடையாது[SE][SS] இருப்பார்கள்?[SE][QE]
6. [QS][SS] அந்தக் கன்றுக்குட்டி[SE][SS] இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ![SE][SS] அது கடவுளல்லவே![SE][SS] கைவினைஞன் ஒருவன்தானே[SE][SS] அதைச் செய்தான்![SE][SS] சமாரியாவின் கன்றுக்குட்டி[SE][SS] தவிடுபொடியாகும்.[SE][QE]
7. [QS][SS] அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்;[SE][SS] கடும்புயலை அறுப்பார்கள்.[SE][SS] வளரும் பயிர் முற்றுவதில்லை;[SE][SS] கோதுமை நன்றாக விளைவதில்லை;[SE][SS] அப்படியே விளைந்தாலும்[SE][SS] அந்நியரே அதை விழுங்குவர்.[SE][PE][QE]
8. {வேற்றினத்தாரை நம்பிப் பாழாய்ப் போன இஸ்ரயேல்} [PS] [QS][SS] இஸ்ரயேல் விழுங்கப்பட்டாயிற்று;[SE][SS] இப்பொழுது அவர்கள்[SE][SS] வேற்றினத்தார் நடுவில்[SE][SS] உதவாத பாத்திரம்போல்[SE][SS] இருக்கின்றார்கள்.[SE][QE]
9. [QS][SS] அவர்கள் தனிமையில் திரிகிற[SE][SS] காட்டுக் கழுதைபோல்[SE][SS] அசீரியாவைத் தேடிப் போனார்கள்.[SE][SS] எப்ராயிம் மக்கள்[SE][SS] தங்கள் காதலர்க்குப்[SE][SS] பொருள் கொடுத்து வருகிறார்கள்.[SE][QE]
10. [QS][SS] கைக்கூலி கொடுத்து[SE][SS] வேற்றினத்தாரை[SE][SS] அவர்கள் துணைக்கு[SE][SS] அமர்த்திக் கொண்டாலும்,[SE][SS] இப்பொழுதே நான்[SE][SS] அவர்களையும் சேர்த்துச் சிதறடிப்பேன்.*[SE][SS] தலைவர்கள் ஏற்படுத்திய[SE][SS] மன்னன் சுமத்தும் சுமையில்[SE][SS] சிறிது காலம் துயருறுவார்கள். [* ‘கூட்டிச் சேர்ப்பேன்’ என்பது எபிரேய பாடம். ; ‘சிறிது காலம் அரசனையும் தலைவர்களையும் திருப்பொழிவு செய்யாது ஓய்ந்திருப்பார்கள்’ எனவும் பொருள்படும்.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே[SE][SS] பலிபீடங்கள் பல செய்துகொண்டான்;[SE][SS] அப்பீடங்களே அவன்[SE][SS] பாவம் செய்வதற்குக் காரணமாயின.[SE][QE]
12. [QS][SS] ஆயிரக்கணக்கில் நான்[SE][SS] திருச்சட்டங்களை[SE][SS] எழுதிக் கொடுத்தாலும்,[SE][SS] அவை நமக்கில்லை என்றே[SE][SS] அவர்கள் கருதுவார்கள்.[SE][QE]
13. [QS][SS] பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்;[SE][SS] பலி கொடுத்து, அந்த[SE][SS] இறைச்சியையும் உண்ணுகிறார்கள்;[SE][SS] அவற்றின்மேல்[SE][SS] ஆண்டவர் விருப்பங்கொள்ளவில்லை;[SE][SS] அதற்கு மாறாக,[SE][SS] அவர்கள் தீச்செயல்களை[SE][SS] நினைவில் கொள்கின்றார்;[SE][SS] அவர்கள் செய்த பாவங்களுக்குத்[SE][SS] தண்டனை வழங்குவார்;[SE][SS] அவர்களோ எகிப்து நாட்டிற்குத்[SE][SS] திரும்புவார்கள்.[SE][QE]
14. [QS][SS] இஸ்ரயேல்[SE][SS] தன்னைப் படைத்தவரை மறந்துவிட்டு[SE][SS] அரண்மனைகளைக் கட்டினான்;[SE][SS] யூதாவோ அரண்சூழ் நகர்கள்[SE][SS] பலவற்றை எழுப்பினான்;[SE][SS] நானோ அவனுடைய நகர்கள்மேல்[SE][SS] நெருப்பை அனுப்புவேன்;[SE][SS] அவனுடைய அரண்களை[SE][SS] அது பொசுக்கிவிடும்.[SE][PE]