தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஓசியா
1. {இஸ்ரயேலரின் போலி மனமாற்றம்} [PS] [QS][SS] “வாருங்கள், ஆண்டவரிடம் நாம்[SE][SS] திரும்புவோம்; நம்மைக்[SE][SS] காயப்படுத்தியவர் அவரே,[SE][SS] அவரே நம்மைக் குணமாக்குவார்;[SE][SS] நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே,[SE][SS] அவரே நம் காயங்களைக் கட்டுவார்.[SE][QE]
2. [QS][SS] இரண்டு நாளுக்குப் பிறகு[SE][SS] நமக்குப் புத்துயிர் அளிப்பார்;[SE][SS] மூன்றாம் நாளில்[SE][SS] நம்மை எழுப்பி விடுவார்;[SE][SS] அப்பொழுது நாம்[SE][SS] அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.[SE][QE]
3. [QS][SS] நாம் அறிவடைவோமாக,[SE][SS] ஆண்டவரைப்பற்றி[SE][SS] அறிய முனைந்திடுவோமாக;[SE][SS] அவருடைய புறப்பாடு[SE][SS] புலரும் பொழுதுபோல் திண்ணமானது;[SE][SS] மழைபோலவும், நிலத்தை நனைக்கும்[SE][SS] இளவேனிற்கால மாரிபோலவும்[SE][SS] அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.[SE][QE]
4. [QS][SS] எப்ராயிமே! உன்னை நான்[SE][SS] என்ன செய்வேன்?[SE][SS] யூதாவே! உன்னை நான்[SE][SS] என்ன செய்வேன்?[SE][SS] உங்கள் அன்பு[SE][SS] காலைநேர மேகம் போலவும்[SE][SS] கதிரவனைக் கண்ட பனிபோலவும்[SE][SS] மறைந்துபோகிறதே![SE][QE]
5. [QS][SS] அதனால்தான் நான்[SE][SS] இறைவாக்கினர் வழியாக[SE][SS] அவர்களை வெட்டி வீழ்த்தினேன்;[SE][SS] என் வாய்மொழிகளில்[SE][SS] அவர்களைக் கொன்று விட்டேன்;[SE][SS] எனது தண்டனைத் தீர்ப்பு[SE][SS] ஒளிபோல வெளிப்படுகின்றது.[SE][QE]
6. [QS][SS] உண்மையாகவே[SE][SS] நான் விரும்புவது பலியை அல்ல,[SE][SS] இரக்கத்தையே விரும்புகின்றேன்;[SE][SS] எரிபலிகளைவிட,[SE][SS] கடவுளை அறியும் அறிவையே[SE][SS] நான் விரும்புகின்றேன். [* மத் 9:13; 12:7. ] [SE][QE]
7. [QS][SS] அவர்களோ ஆதாம்* என்ற இடத்தில்[SE][SS] உடன்படிக்கையை மீறினார்கள்;[SE][SS] அங்கே எனக்கு[SE][SS] நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள். [* "ஆதாமைப்போல்" என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
8. [QS][SS] கிலயாது கொடியோர் நிறைந்த நகர்;[SE][SS] அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.[SE][QE]
9. [QS][SS] கொள்ளையர் கூட்டம்[SE][SS] வழிப்போக்கருக்காகக்[SE][SS] காத்திருப்பது போல்[SE][SS] குருக்களின் கூட்டம்[SE][SS] செக்கேமுக்குப் போகிற வழியில்[SE][SS] காத்திருந்து கொலை செய்கின்றது;[SE][SS] கொடுமையன்றோ அவர்கள் செய்வது![SE][QE]
10. [QS][SS] இஸ்ரயேல் குடும்பத்தாரிடம்[SE][SS] மிகக் கொடிய செயலொன்றை[SE][SS] நான் கண்டேன்;[SE][SS] அங்கே எப்ராயிமின்[SE][SS] வேசித்தனம் இருந்தது,[SE][SS] இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.[SE][QE]
11. [QS][SS] யூதாவே! உனக்கும்[SE][SS] அறுவடைக்காலம் ஒன்று[SE][SS] குறிக்கப்பட்டிருக்கின்றது.[SE][SS] நான் என் மக்களை[SE][SS] நன்னிலைக்குத் திரும்பக்[SE][SS] கொணரும் போது,[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
இஸ்ரயேலரின் போலி மனமாற்றம் 1 “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார். 2 இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பி விடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம். 3 நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழைபோலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள். 4 எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே! 5 அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளில் அவர்களைக் கொன்று விட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது. 6 உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன். * மத் 9:13; 12: 7. 7 அவர்களோ ஆதாம்* என்ற இடத்தில் உடன்படிக்கையை மீறினார்கள்; அங்கே எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள். [* "ஆதாமைப்போல்" என்பது எபிரேய பாடம்.. ] 8 கிலயாது கொடியோர் நிறைந்த நகர்; அதில் இரத்தக்கறை படிந்துள்ளது. 9 கொள்ளையர் கூட்டம் வழிப்போக்கருக்காகக் காத்திருப்பது போல் குருக்களின் கூட்டம் செக்கேமுக்குப் போகிற வழியில் காத்திருந்து கொலை செய்கின்றது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது! 10 இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் மிகக் கொடிய செயலொன்றை நான் கண்டேன்; அங்கே எப்ராயிமின் வேசித்தனம் இருந்தது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது. 11 யூதாவே! உனக்கும் அறுவடைக்காலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கின்றது. நான் என் மக்களை நன்னிலைக்குத் திரும்பக் கொணரும் போது,
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References