1. {மனமாற்றத்திற்கு அழைப்பு} [PS] [QS][SS] இஸ்ரயேலே! உன் கடவுளாகிய[SE][SS] ஆண்டவரிடம் திரும்பி வா;[SE][SS] நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.[SE][QE]
2. [QS][SS] இம்மொழிகளை ஏந்தி[SE][SS] ஆண்டவரிடம் திரும்பி வந்து[SE][SS] இவ்வாறு சொல்லுங்கள்:[SE][SS] “தீவினை அனைத்தையும் [BR] அகற்றியருளும்,[SE][SS] நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்;[SE][SS] நாங்கள் எங்கள் வாய்மொழியாம்[SE][SS] கனிகளை உமக்கு அளிப்போம்;[SE][QE]
3. [QS][SS] அசீரியர் எங்களை[SE][SS] விடுவிக்கமாட்டார்கள்;[SE][SS] குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்;[SE][SS] எங்கள் கைவினைப் [BR] பொருள்களை நோக்கி,[SE][SS] ‘எங்கள் கடவுளே!’ என்று[SE][SS] இனிச் சொல்லமாட்டோம்;[SE][SS] திக்கற்றவன் உம்மிடத்தில்[SE][SS] பரிவைப் பெறுகிறான்” [BR] எனச் சொல்லுங்கள்.[SE][QE]
4. [QS][SS] அவர்களுடைய [BR] பற்றுறுதியின்மையை[SE][SS] நான் குணமாக்குவேன்;[SE][SS] அவர்கள்மேல் உளமார[SE][SS] அன்பு கூர்வேன்.[SE][SS] அவர்கள் மேலிருந்த என் சினம்[SE][SS] தணிந்துவிட்டது.[SE][QE]
5. [QS][SS] நான் இஸ்ரயேலுக்குப்[SE][SS] பனி போலிருப்பேன்;[SE][SS] அவன் லீலிபோல் மலருவான்;[SE][SS] லெபனோனின் மரம்போல் [BR] வேரூன்றி நிற்பான்.[SE][QE]
6. [QS][SS] அவனுடைய கிளைகள்[SE][SS] விரிந்து பரவும்;[SE][SS] அவன் பொலிவு[SE][SS] ஒலிவ மரம் போல் இருக்கும்;[SE][SS] லெபனோனைப்போல்[SE][SS] அவன் நறுமணம் பரப்புவான்.[SE][QE]
7. [QS][SS] அவர்கள் திரும்பிவந்து என்*[SE][SS] நிழலில் குடியிருப்பார்கள்;[SE][SS] கோதுமைபோல்[SE][SS] தழைத்தோங்குவார்கள்.[SE][SS] திராட்சைக் கொடிபோல்[SE][SS] செழிப்படைவார்கள்.[SE][SS] லெபனோனின்[SE][SS] திராட்சை இரசம்போல் [BR] அவர்களது புகழ் விளங்கும். [* * ‘அவர்’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
8. [QS][SS] இனிமேல் எப்ராயிமுக்குச்[SE][SS] சிலைகள் எதற்கு?[SE][SS] நானே அவனுக்குச்[SE][SS] செவி சாய்த்து,[SE][SS] அவன்மேல்[SE][SS] அக்கறை கொண்டுள்ளேன்;[SE][SS] நான் பசுமையான[SE][SS] தேவதாரு மரம் போன்றவன்.[SE][SS] உன் கனி எல்லாம்[SE][SS] என்னிடமிருந்தே வரும்.[SE][QE]
9. [QS][SS] ஞானம் நிறைந்தவன் எவனோ,[SE][SS] அவன் இவற்றை [BR] உணர்ந்து கொள்ளட்டும்;[SE][SS] பகுத்தறிவு உள்ளவன் எவனோ,[SE][SS] அவன் இவற்றை[SE][SS] அறிந்து கொள்ளட்டும்;[SE][SS] ஆண்டவரின் நெறிகள்[SE][SS] நேர்மையானவை;[SE][SS] நேர்மையானவர்கள்[SE][SS] அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்;[SE][SS] மீறுகிறவர்கள்[SE][SS] அவற்றில் இடறி விழுகின்றார்கள்.[SE][PE]