தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
ஓசியா
1. {இஸ்ரயேலரின் கடந்த கால அனுபவமும் ஆண்டவரின் கண்டிப்பும்} [PS] [QS][SS] எப்ராயிம் காற்றை உண்டு,நாள்[SE][SS] முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க[SE][SS] ஓடுகிறான்;[SE][SS] பொய்யும் வன்செயலும்[SE][SS] அவனிடம் பெருகி விட்டன;[SE][SS] அசீரியாவோடு[SE][SS] உடன்படிக்கை செய்கின்றான்;[SE][SS] எகிப்துக்கு[SE][SS] எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவருக்கு யூதாவோடு[SE][SS] வழக்கு ஒன்று உண்டு;[SE][SS] யாக்கோபை அவன் தீய[SE][SS] வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்;[SE][SS] அவன் செயல்களுக்குத் தக்கபடி[SE][SS] கைம்மாறு தருவார்.[SE][QE]
3. [QS][SS] யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே[SE][SS] தமையனை முந்திக் கொண்டான்;[SE][SS] பெரியவனாக வளர்ந்த பின்போ[SE][SS] கடவுளோடு போராடினான். [* தொநூ 25:26. ; தொநூ 32:24-26. ] [SE][QE]
4. [QS][SS] வான தூதரோடு போராடி[SE][SS] வெற்றி கொண்டான்;[SE][SS] கண்ணீர் சிந்தி,[SE][SS] அவர் அருளை வேண்டிக்கொண்டான்;[SE][SS] பெத்தேல் என்னுமிடத்தில்[SE][SS] அவரை சந்தித்தான்;[SE][SS] அவரும் அங்கே அவனுடன் பேசினார். [* தொநூ 32:24-26. ; தொநூ 28:10-22. ] [SE][QE]
5. [QS][SS] அந்த ஆண்டவரே[SE][SS] படைகளின் கடவுள்;[SE][SS] ஆண்டவர் என்பதே அவரது பெயராம்.[SE][QE]
6. [QS][SS] ஆதலால், இஸ்ரயேலே![SE][SS] உன் கடவுளிடம் திரும்பி வா;[SE][SS] இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி;[SE][SS] எப்போதும் உன் கடவுளை[SE][SS] நம்பிக் காத்திரு.[SE][PE][QE]
7. {பேராசையும் தண்டனையும்} [PS] [QS][SS] ஆனால், இஸ்ரயேல்[SE][SS] கள்ளத் தராசைக்[SE][SS] கையில் வைத்திருக்கும்[SE][SS] கானானியன் போன்றவன்;[SE][SS] அவன் கொடுஞ்செயல் புரியவே[SE][SS] விரும்புகின்றான்.[SE][QE]
8. [QS][SS] எப்ராயிம், ‘நான்[SE][SS] பணக்காரனாகிவிட்டேன்,[SE][SS] எனக் கென்று[SE][SS] செல்வம் சேர்த்துக்கொண்டேன்’[SE][SS] என்கிறான். ஆனால்,[SE][SS] அவனது செல்வம் எல்லாம்[SE][SS] சேர்ந்தும்கூட[SE][SS] அவனது தீச்செயலின் பழியை அகற்றாது![SE][QE]
9. [QS][SS] எகிப்து நாட்டினின்று[SE][SS] உன்னை அழைத்து வந்த நாள் முதல்[SE][SS] நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;[SE][SS] விழா நாள்களில் போல[SE][SS] மறுபடியும் உன்னைக்[SE][SS] கூடாரங்களில் வாழச் செய்வேன். [* லேவி 23:42-43. ] [SE][QE]
10. [QS][SS] இறைவாக்கினர்களிடம் பேசினேன்;[SE][SS] நானே காட்சிகளின்[SE][SS] எண்ணிக்கையைப் பெருக்கினேன்;[SE][SS] இறைவாக்கினர் வாயிலாக[SE][SS] உவமைகளில் பேசினேன்.[SE][QE]
11. [QS][SS] கிலயாதில்[SE][SS] தீச்செயல் மலிந்திருப்பதால்[SE][SS] அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்;[SE][SS] கில்காலில் காளைகளைப்[SE][SS] பலியிடுவதால்[SE][SS] உழவுசால் அருகே இருக்கும்[SE][SS] கற்குவியல் போல்[SE][SS] அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும்.[SE][QE]
12. [QS][SS] யாக்கோபு ஆராம் நாட்டிற்குத்[SE][SS] தப்பி ஓடினான்;[SE][SS] இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக[SE][SS] ஊழியம் செய்தான்;[SE][SS] அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். [* தொநூ 29:1-20. ] [SE][QE]
13. [QS][SS] இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு[SE][SS] ஆண்டவர் இஸ்ரயேலை[SE][SS] எகிப்திலிருந்து கூட்டி வந்தார்.[SE][SS] இறைவாக்கினர் ஒருவரால்[SE][SS] அவன் பாதுகாக்கப்பட்டான். [* விப 12:50-51.[QE]. ] [SE][QE]
14. [QS][SS] எப்ராயிம் ஆண்டவருக்கு[SE][SS] மிகவும் சினமூட்டினான்;[SE][SS] அவனுடைய தலைவர்[SE][SS] அவனுடைய இரத்தப் பழியை[SE][SS] அவன் மேலேயே சுமத்துவார்;[SE][SS] அவனுடைய நிந்தையை[SE][SS] ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.[SE][PE]

பதிவுகள்

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
இஸ்ரயேலரின் கடந்த கால அனுபவமும் ஆண்டவரின் கண்டிப்பும் 1 எப்ராயிம் காற்றை உண்டு,நாள் முழுவதும் கீழைக் காற்றைப் பிடிக்க ஓடுகிறான்; பொய்யும் வன்செயலும் அவனிடம் பெருகி விட்டன; அசீரியாவோடு உடன்படிக்கை செய்கின்றான்; எகிப்துக்கு எண்ணெய் கொடுத்தனுப்புகின்றான். 2 ஆண்டவருக்கு யூதாவோடு வழக்கு ஒன்று உண்டு; யாக்கோபை அவன் தீய வழிகளுக்கேற்பத் தண்டிப்பார்; அவன் செயல்களுக்குத் தக்கபடி கைம்மாறு தருவார். 3 யாக்கோபு தன் தாயின் வயிற்றிலேயே தமையனை முந்திக் கொண்டான்; பெரியவனாக வளர்ந்த பின்போ கடவுளோடு போராடினான். * தொநூ 25: 26. ; தொநூ 32:24- 26. 4 வான தூதரோடு போராடி வெற்றி கொண்டான்; கண்ணீர் சிந்தி, அவர் அருளை வேண்டிக்கொண்டான்; பெத்தேல் என்னுமிடத்தில் அவரை சந்தித்தான்; அவரும் அங்கே அவனுடன் பேசினார். * தொநூ 32:24- 26. ; தொநூ 28:10- 22. 5 அந்த ஆண்டவரே படைகளின் கடவுள்; ஆண்டவர் என்பதே அவரது பெயராம். 6 ஆதலால், இஸ்ரயேலே! உன் கடவுளிடம் திரும்பி வா; இரக்கத்தையும் நீதியையும் கடைப்பிடி; எப்போதும் உன் கடவுளை நம்பிக் காத்திரு. பேராசையும் தண்டனையும் 7 ஆனால், இஸ்ரயேல் கள்ளத் தராசைக் கையில் வைத்திருக்கும் கானானியன் போன்றவன்; அவன் கொடுஞ்செயல் புரியவே விரும்புகின்றான். 8 எப்ராயிம், ‘நான் பணக்காரனாகிவிட்டேன், எனக் கென்று செல்வம் சேர்த்துக்கொண்டேன்’ என்கிறான். ஆனால், அவனது செல்வம் எல்லாம் சேர்ந்தும்கூட அவனது தீச்செயலின் பழியை அகற்றாது! 9 எகிப்து நாட்டினின்று உன்னை அழைத்து வந்த நாள் முதல் நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; விழா நாள்களில் போல மறுபடியும் உன்னைக் கூடாரங்களில் வாழச் செய்வேன். * லேவி 23:42- 43. 10 இறைவாக்கினர்களிடம் பேசினேன்; நானே காட்சிகளின் எண்ணிக்கையைப் பெருக்கினேன்; இறைவாக்கினர் வாயிலாக உவமைகளில் பேசினேன். 11 கிலயாதில் தீச்செயல் மலிந்திருப்பதால் அவர்கள் திண்ணமாய் அழிவார்கள்; கில்காலில் காளைகளைப் பலியிடுவதால் உழவுசால் அருகே இருக்கும் கற்குவியல் போல் அவர்களுடைய பலிபீடங்கள் ஆகிவிடும். 12 யாக்கோபு ஆராம் நாட்டிற்குத் தப்பி ஓடினான்; இஸ்ரயேல் ஒரு பெண்ணுக்காக ஊழியம் செய்தான்; அப்பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். * தொநூ 29:1- 20. 13 இறைவாக்கினர் ஒருவரைக் கொண்டு ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்திலிருந்து கூட்டி வந்தார். இறைவாக்கினர் ஒருவரால் அவன் பாதுகாக்கப்பட்டான். [* விப 12:50-51.. ] 14 எப்ராயிம் ஆண்டவருக்கு மிகவும் சினமூட்டினான்; அவனுடைய தலைவர் அவனுடைய இரத்தப் பழியை அவன் மேலேயே சுமத்துவார்; அவனுடைய நிந்தையை ஆண்டவர் அவன் மேலேயே திருப்புவார்.
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References