1. {அபக்கூக்குக்கு ஆண்டவரின் பதிலுரை} [PS] [QS][SS] [நான் காவல் மாடத்தில் நிற்பேன்;[SE][SS] கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்;[SE][SS] என் வாயிலாக ஆண்டவர்[SE][SS] என்ன கூறப்போகின்றார் என்றும்[SE][SS] என் முறையீட்டுக்கு[SE][SS] என்ன விடையளிப்பார் என்றும்[SE][SS] கண்டறிவதற்காகக் காத்திருப்பேன்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் எனக்கு அளித்த[SE][SS] மறுமொழி இதுவே:[SE][SS] “காட்சியை எழுதிவை;[SE][SS] விரைவாய் ஓடுகிறவனும்[SE][SS] படிக்கும் வண்ணம்[SE][SS] பலகைகளில் தெளிவாய் எழுது.[SE][QE]
3. [QS][SS] குறித்த காலத்தில்[SE][SS] நிறைவேறுவதற்காகக்[SE][SS] காட்சி இன்னும் காத்திருக்கின்றது;[SE][SS] முடிவை நோக்கி[SE][SS] விரைந்து செல்கின்றது.[SE][SS] ஒருக்காலும் பொய்க்காது.[SE][SS] அது காலந்தாழ்த்தி[SE][SS] வருவதாகத் தோன்றினால்,[SE][SS] எதிர்பார்த்துக் காத்திரு;[SE][SS] அது நிறைவேறியே தீரும்;[SE][SS] காலம் தாழ்த்தாது. [* எபி 10:37. ] [SE][QE]
4. [QS][SS] இதை நம்பாதவரோ உள்ளத்திலே[SE][SS] நேர்மையற்றவராய் இருப்பர்;[SE][SS] நேர்மையுடையவரோ[SE][SS] தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர். [* உரோ 1:17; கலா 3:11; எபி 10:38. ] [SE][PE][QE]
5. {நேர்மையற்றோருக்கு வரும் அழிவு} [PS] [QS][SS] மேலும் செல்வம்* ஏமாற்றிவிடும்;[SE][SS] ஆணவக்காரர்[SE][SS] நிலைத்து நிற்கமாட்டார்;[SE][SS] அவர்களது பேராசை[SE][SS] பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது;[SE][SS] சாவைப்போல் அவர்களும்[SE][SS] போதும் என்று நிறைவு அடைவதில்லை;[SE][SS] வேற்றினத்தார் யாவரையும்[SE][SS] அவர்கள் தங்கள் பக்கம்[SE][SS] சேர்த்துக் கொள்கின்றனர்;[SE][SS] மக்களினங்கள் அனைத்தையும்[SE][SS] தங்கள் உடைமை ஆக்கிக்[SE][SS] கொள்கின்றனர். [* ‘திராட்சை மது’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
6. [QS][SS] ஆனால், தோல்வியுற்ற அனைவரும்[SE][SS] அவர்கள் மேல் பழிமொழிகளையும்,[SE][SS] ஏளனப் பாடல்களையும்[SE][SS] இப்படிப் புனைவார்கள்;[SE][SS] ‘தமக்குரியது அல்லாததைத்[SE][SS] தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு[SE][SS] ஐயோ கேடு![SE][SS] இன்னும் எத்துணைக் காலத்திற்கு[SE][SS] இப்படிச் செய்வர்?[SE][SS] அவர்கள் தங்கள் மேல்[SE][SS] அடைமானங்களையே[SE][SS] சுமத்திக் கொள்கின்றார்கள்!’[SE][QE]
7. [QS][SS] உமக்குக் கடன் கொடுத்தவர்கள்[SE][SS] திடீரென[SE][SS] எதிர்த்தெழ மாட்டார்களோ?[SE][SS] உன்னைத் திகிலடையச்[SE][SS] செய்கின்றவர்கள்[SE][SS] விழித்தெழ மாட்டார்களோ?[SE][SS] அப்பொழுது நீ அவர்களுக்குக்[SE][SS] கொள்ளைப் பொருள் ஆவாய்.[SE][QE]
8. [QS][SS] நீ பல நாட்டினரைச் சூறையாடினாய்;[SE][SS] மனித இரத்தத்தைச் சிந்தினாய்;[SE][SS] நாட்டுக்கும், நகர்களுக்கும்[SE][SS] அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும்[SE][SS] கொடுமைகள் செய்தாய்;[SE][SS] இவற்றிற்காக,[SE][SS] மக்களினங்களுள் எஞ்சியோர் யாவரும்[SE][SS] உன்னைச் சூறையாடுவர்.[SE][QE]
9. [QS][SS] தீமையின் பளுவிலிருந்து தப்ப,[SE][SS] தான் வாழுமிடத்தை[SE][SS] மிக உயரத்தில் அமைக்க,[SE][SS] தன் குடும்பத்திற்காக[SE][SS] நேர்மையற்ற வழியில்[SE][SS] பொருள் சேர்க்கிறவனுக்கு[SE][SS] ஐயோ கேடு![SE][QE]
10. [QS][SS] உன் திட்டங்களால்[SE][SS] உன் குடும்பத்திற்கு[SE][SS] மானக்கேட்டை நீ வருவித்தாய்;[SE][SS] மக்களினங்கள் பலவற்றை[SE][SS] அழித்தமையால்,[SE][SS] உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.[SE][QE]
11. [QS][SS] சுவரிலிருக்கும் கற்களும்[SE][SS] உனக்கு எதிராகக் கூக்குரலிடும்;[SE][SS] கட்டடத்தின் உத்திரம்[SE][SS] அதை எதிரொலிக்கும்[SE][QE]
12. [QS][SS] இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி,[SE][SS] அநீதியால்[SE][SS] பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு[SE][SS] ஐயோ கேடு![SE][QE]
13. [QS][SS] மக்களினங்களின் உழைப்பு[SE][SS] நெருப்புக்கு இரையாவதும்,[SE][SS] வேற்றினத்தாரின் களைப்பு[SE][SS] வீணாகப் போவதும்[SE][SS] படைகளின் ஆண்டவரது[SE][SS] திருச்செயல் அன்றோ?[SE][QE]
14. [QS][SS] தண்ணீரால்[SE][SS] கடல் நிரம்பியிருப்பது போல[SE][SS] ஆண்டவரின்[SE][SS] மாட்சியைப் பற்றிய அறிவால்[SE][SS] மண்ணுலகு நிறைந்திருக்கும். [* எசா 11:9. ] [SE][QE]
15. [QS][SS] அடுத்திருப்பவர் மீது[SE][SS] கொண்ட சினத்தினால்[SE][SS] அவர்களைக் குடிவெறியர்களாக்கி[SE][SS] அவர்களது திறந்த மேனியின்[SE][SS] அலங்கோலத்தைக் காணும்வரை[SE][SS] குடிக்கச் செய்பவனுக்கு ஐயோ கேடு![SE][QE]
16. [QS][SS] நீ மேன்மை அடையாது[SE][SS] ஏளனத்துக்கு ஆளாக்கப்பட்டிருப்பாய்;[SE][SS] நீயும் குடி,[SE][SS] குடித்துவிட்டுத் தள்ளாடு;[SE][SS] ஆண்டவரின் வலக்கையிலுள்ள[SE][SS] தண்டனைக்கலம்[SE][SS] உன்னிடம் திரும்பி வரும்;[SE][SS] அப்போது உன் மேன்மை[SE][SS] மானக்கேடாய் மாறும்.[SE][QE]
17. [QS][SS] லெபனோனுக்கு நீ செய்த கொடுமை[SE][SS] உன் மீது வந்து விழும்;[SE][SS] நீ வெட்டி வீழ்த்திய விலங்குகளே[SE][SS] உன்னை நடுக்கமுறச் செய்யும்;[SE][SS] ஏனெனில், நீ மனித இரத்தத்தைச் சிந்தினாய்;[SE][SS] நாட்டுக்கும் நகர்க்கும்[SE][SS] அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும்[SE][SS] கொடுமைகள் செய்தாய்.[SE][QE]
18. [QS][SS] சிற்பி செதுக்கிய சிலையாலும்,[SE][SS] வார்ப்படத்தில் வடித்தெடுத்த[SE][SS] படிமத்தாலும் பயன் என்ன?[SE][SS] அவை பொய்களின் பிறப்பிடமே![SE][SS] ஆயினும், சிற்பி தான் செதுக்கிய[SE][SS] ஊமைச் சிலைகளாகிய[SE][SS] கைவேலைகளிலே[SE][SS] நம்பிக்கை வைக்கிறான்.[SE][QE]
19. [QS][SS] மரக்கட்டையிடம்,[SE][SS] ‘விழித்தெழும்’ என்றும்[SE][SS] ஊமைக் கல்லிடம்[SE][SS] ‘எழுந்திரும்’ என்றும்[SE][SS] சொல்கிறவனுக்கு ஐயோ கேடு![SE][SS] அவை ஏதேனும்[SE][SS] வெளிப்பாடு அருள முடியுமோ?[SE][SS] பொன் வெள்ளியால்[SE][SS] பொதியப்பட்டிருப்பினும்[SE][SS] உள்ளே சிறிதளவும் உயிரில்லையே![SE][QE]
20. [QS][SS] ஆனால் ஆண்டவர்[SE][SS] தம் புனித கோவிலில்[SE][SS] வீற்றிருக்கின்றார்;[SE][SS] அவர் திருமுன்[SE][SS] மண்ணுலகெங்கும் மௌனம் காப்பதாக.[SE][PE]