1. {ஏசாவின் வழிமரபினர்[BR](1 குறி 1:34-37)} [PS] ஏதோம் என்ற ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
2. ஏசா கானான் நாட்டுப் பெண்களில் இத்தியன் ஏலோனின் மகள் ஆதாவையும் இவ்வியன் சிபெயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமாவையும், [* தொநூ 26:34. ]
3. இஸ்மயேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமான பாசமத்தையும் மணந்து கொண்டார். [* தொநூ 28:9.. ]
4. ஏசாவுக்கு ஆதா எலிப்பாசைப் பெற்றெடுத்தாள். பாசமத்து இரகுவேலைப் பெற்றெடுத்தாள்.
5. ஒகோலி பாமா எயூசு, யாலாம், கோராகு ஆகியோரைப் பெற்றெடுத்தாள். இவர்கள் ஏசாவுக்குக் கானான் நாட்டில் பிறந்த புதல்வர்கள்.[PE]
6. [PS] பின்னர், ஏசா தம் மனைவியர், புதல்வர், புதல்வியர், தம் வீட்டைச் சேர்ந்தவர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு, தம் மந்தைகள், கால்நடைகள், கானான் நாட்டில் சேர்த்திருந்த உடைமைகள் யாவற்றோடும் தம் சகோதரன் யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குப் போனார்.
7. ஏனெனில், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியாத அளவு அவர்களுடைய உடைமைகள் பெருகிவிட்டன. அவர்கள் தங்கியிருந்த நிலம் அவர்களுடைய மந்தைகளுக்குப் போதாதிருந்தது.
8. ஆகையால், ஏசா என்ற ஏதோம் சேயிர் என்ற மலைநாட்டிற்குச் சென்று குடியேறினார்.[PE]
9. [PS] சேயிர் மலைநாட்டில் வாழும் ஏதோமியரின் மூதாதையாகிய ஏசாவின் தலைமுறை அட்டவணை இதுவே.
10. ஏசாவின் புதல்வர்கள் பெயர்களாவன; ஏசாவின் மனைவி ஆதாவின் மகன் எலிப்பாசு, அவருடைய இரண்டாம் மனைவியான பாசமத்தின் மகன் இரகுவேல்.
11. எலிப்பாசின் புதல்வர்கள்; தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு.
12. ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள். இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப் பிள்ளைகள்.
13. இரகுவேலின் புதல்வர்கள்; நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே ஏசாவின் மனைவி பாசமத்தின் பேரப்பிள்ளைகள்.
14. சிபயோனின் மகளான அனாவின் மகள் ஒகோலிபாமா ஏசாவுக்குப் பெற்றெடுத்த புதல்வர்கள்; எயுசு, யாலாம், கோராகு.[PE]
15. [PS] ஏசாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்; ஏசாவின் தலைமகன் எலிப்பாசின் புதல்வர்களான தேமான், ஒமார், செப்போ, கெனாசு.
16. கோராகு, காத்தாம், அமலேக்கு ஆகிய இவர்கள் அனைவரும் எலிப்பாசுக்குப் பிறந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள். இவர்களே ஆதாவின் பேரப்பிள்ளைகள்.
17. ஏசாவின் மகன் இரகுவேலின் புதல்வர்களுள் தலைவர்களாயிருந்தவர்கள்; நகத்து, செராகு, சம்மா, மிசா. இவர்களே இரகுவேலின் புதல்வர்கள், ஏசாவின் மனைவி பாசுமத்தின் பேரப்பிள்ளைகள். இவர்கள் இரகுவேலின் வழிவந்த ஏதோம் நாட்டுத் தலைவர்கள்.
18. ஏசாவின் மனைவி ஒகோலிபாமாவின் புதல்வர்களுள் தலைவர்களாய் இருந்தவர்கள்; எயுசு, யாலாம், கோராகு. இவர்கள் அனாவின் மகளும் ஏசாவின் மனைவியுமான ஒகோலிபாமா வழிவந்த தலைவர்கள்.
19. இவர்களே ஏதோம் எனப்பட்ட ஏசாவின் புதல்வர்களும், அந்த இனத்தின் தலைவர்களும் ஆவர்.[PE]
20. {சேயிரின் வழிமரபினர்[BR](1 குறி 1:38-42)} [PS] அந்த நாட்டில் குடியிருந்த ஓரியனான சேயிரின் புதல்வர்கள்; லோத்தான், சோபால், சிபயோன், அனா,
21. தீசோன், ஏட்சேர், தீசான். இவர்களே ஏதோம் நாட்டிலிருந்த சேயிரின் மக்களாகிய ஓரியரின் தலைவர்கள்.
22. லோத்தானின் புதல்வர்கள் இவர்களே; ஓரி, ஏமாம். லோத்தானின் சகோதரி திம்னா.
23. சோபாலின் புதல்வர்கள் இவர்களே; அல்வான், மானகத்து, ஏபால், செப்போ, ஓனாம்.
24. சிபயோனின் புதல்வர்கள் இவர்களே; அய்யா, அனா. இந்த அனா தன் தந்தை சிபயோனின் கழுதைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது பாலை நிலத்தில் வெப்ப நீரூற்றுகளைக் கண்டுபிடித்தான்.
25. அனாவின் மகன் தீசோன்; அனாவின் மகள் ஒகோலிபாமா.
26. தீசானின் புதல்வர்கள் இவர்களே; எம்தான், எஸ்பான், இத்ரான், கெரான்.
27. ஏட்சேரின் புதல்வர்கள் இவர்களே; பில்கான், சகவான், ஆக்கான்.
28. தீசோனின் புதல்வர்கள் இவர்களே; ஊசு, ஆரான்.
29. ஓரியனின் தலைவர்கள் இவர்களே; லோத்தான், சோபால், சிபயோன், அனா,
30. தீசோன், ஏட்சேர், தீசான். இவர்கள் சேயிர் நாட்டின் குலப்பிரிவுகளுக்கு ஏற்ப ஓரியரின் தலைவர்களாய் இருந்தவர்கள்.[PE]
31. {ஏதோமின் வழிமரபினர்[BR](1 குறி 1:43-54)} [PS] இஸ்ரயேலரிடையே முடியாட்சி தொடங்குமுன்னரே ஏதோமில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் இவர்களே.
32. பெகோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி புரிந்தான். அவனது நகரின் பெயர் தின்காபா.
33. பேலா இறந்தபின் போஸ்ராவைச் சார்ந்த செராகின் மகன் யோபாபு ஆட்சிக்கு வந்தான்.
34. யோபாபு இறந்தபின் தேமானியரின் நாட்டைச் சேர்ந்த ஊசாம் ஆட்சிக்கு வந்தான்.
35. ஊசாம் இறந்தபின் பெதாதின் மகன் அதாது ஆட்சிக்கு வந்தான். இவன் மோவாபு நாட்டில் மிதியானியரைத் தோற்கடித்தவன். அவனது நகரின் பெயர் அவீத்து.
36. அதாது இறந்தபின், மஸ்ரேக்காவைச் சார்ந்த சம்லா ஆட்சிக்கு வந்தான்.
37. சம்லா இறந்தபின் யூப்பிரத்தீசு நதிக்கருகில் இருந்த இரகபோத்தைச் சார்ந்த சாவூல் ஆட்சிக்கு வந்தான்.
38. சாவூல் இறந்தபின், அக்போரின் மகன் பாகால் அனான் ஆட்சிக்கு வந்தான்.
39. பாகால் அனான் இறந்தபின், அதார் ஆட்சிக்கு வந்தான். அவனது நகரின் பெயர் பாகூ. அவன் மனைவியின் பெயர் மெகேற்றபேல். அவள் மேசகாபின் மகளான மத்ரேத்தின் மகள்.
40. தங்கள் குலப்பிரிவின்படியும், நிலப்பகுதிகளின்படியும் ஏசாவின் வழிவந்த தலைவர்களின் பெயர்கள் இவைகளே; திம்னா, ஆல்வா, எத்தேத்து.
41. ஒகோலிபாமா, ஏலா, பினோன்,
42. கெனாசு, தேமான், மிபுசார்,
43. மக்தியேல், ஈராம். ஏதோமியர் உரிமையாகக் கொண்டு குடியேறி வாழ்ந்த நிலப்பகுதிகளின்படி தலைவர்களாய் இருந்தவர்கள் இவர்களே. இந்த ஏதோமியரின் மூதாதைதான் ஏசா.[PE]