1. {‘எகிப்தை ஆண்டவர் தண்டிப்பார்’} [PS] ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [* எசா 19:1-25; எரே 46:2-26. ]
2. “மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:[QS][SS]‘ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது’[SE][SS] என்று அலறுங்கள்; [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
3. [QS][SS] ஏனெனில், அருகில் உள்ளது அந்த நாள்;[SE][SS] ஆண்டவருக்குரிய அந்நாள்[SE][SS] அண்மையில் உள்ளது;[SE][SS] அது மேகத்தின் நாள்;[SE][SS] வேற்றினத்தாருக்கு அழிவின் நாள். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
4. [QS][SS] எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்;[SE][SS] கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்;[SE][SS] எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில்[SE][SS] அதன் செல்வங்கள்[SE][SS] வாரிக்கொண்டு செல்லப்படும்;[SE][SS] அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
5. [QS][SS] எகிப்துடன் கூசு, பூத்து, லூது,[SE][SS] அனைத்து அரேபியா, லிபியா மற்றும்[SE][SS] நான் உடன்படிக்கை செய்து கொண்ட[SE][SS] நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
6. [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே;[SE][SS] எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்;[SE][SS] அதன் பெருமைக்குரிய வலிமை[SE][SS] தோல்வியுறும்;[SE][SS] மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள[SE][SS] பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர்,[SE][SS] என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ; எசா 36:6.. ] [SE][QE]
7. [QS][SS] அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள்[SE][SS] பாழாகிக் கிடப்பர்;[SE][SS] அவர்களின் நகரங்கள்,[SE][SS] அழிந்த நகரங்கள் நடுவே[SE][SS] அழிந்து கிடக்கும். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
8. [QS][SS] நான் எகிப்துக்குத் தீ வைத்து[SE][SS] அதற்குத் துணையாயிருந்தோரை[SE][SS] நொறுக்கும்போது ‘நானே ஆண்டவர்’என்பதை[SE][SS] அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
9. [QS][SS] அந்நாளில் கூசு மக்களின்[SE][SS] மனவுறுதியைக் குலைத்த நான்[SE][SS] கப்பலில் தூதரை அனுப்புவேன்;[SE][SS] எகிப்தின் அழிவு நாளில்[SE][SS] திகில் அவர்களை ஆட்கொள்ளும்;[SE][SS] ஏனெனில், அந்நாள் உண்மையிலேயே[SE][SS] வரப்போகின்றது. [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
10. [QS][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே;[SE][SS] பாபிலோனின் மன்னன்[SE][SS] நெபுகத்னேசரின் கையால்[SE][SS] எகிப்தின் செல்வத்தை[SE][SS] அழிக்கப்போகின்றேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
11. [QS][SS] மக்களினங்களில் மிகவும்[SE][SS] வலிமை வாய்ந்த அவன் படைகளும்[SE][SS] நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்;[SE][SS] எகிப்திற்கு எதிராய்[SE][SS] அவர்கள் வாளை உருவி,[SE][SS] கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
12. [QS][SS] ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து[SE][SS] தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன்.[SE][SS] அந்நியர் துணையால்[SE][SS] நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும்[SE][SS] வெறுமையாக்குவேன்.[SE][SS] ஆண்டவராகிய நானே[SE][SS] இதை உரைத்தேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
13. [QS][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே:[SE][SS] நான் சிலைகளை அழிப்பேன்;[SE][SS] நோபில் இருக்கும் உருவங்களுக்கு[SE][SS] முடிவுகட்டுவேன்;[SE][SS] எகிப்தில் இனி மன்னன் இரான்;[SE][SS] நாடு முழுவதும்[SE][SS] அச்சத்தைப் பரப்புவேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
14. [QS][SS] பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்;[SE][SS] சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்;[SE][SS] நோ நகரின்மீது[SE][SS] தண்டனை வரச் செய்வேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
15. [QS][SS] எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது[SE][SS] என் சினத்தைக் கொட்டுவேன்;[SE][SS] நோ நகரின் எண்ணற்ற மக்களை[SE][SS] வெட்டி வீழ்த்துவேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
16. [QS][SS] எகிப்துக்கு நெருப்பிடுவேன்;[SE][SS] சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்;[SE][SS] புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்;[SE][SS] தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
17. [QS][SS] ஆவேன் மற்றும் பீபசேத்து[SE][SS] நகர இளைஞர் வாளால் வீழ்வர்;[SE][SS] அந்நகர்கள் அடிமைத்தனத்தில் உழலும். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
18. [QS][SS] எகிப்தின் கொழுவை[SE][SS] நான் முறிக்கையில்,[SE][SS] தெகபனகேசு நகரில் பகல் இரவாகும்;[SE][SS] இறுமாப்புக்குரிய அதன் வலிமை[SE][SS] அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்;[SE][SS] மேகங்களால் அது மூடப்படும்;[SE][SS] சிறையிருப்புக்கு[SE][SS] அதன் சிற்றூர்கள் செல்லும். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][QE]
19. [QS][SS] இவ்வாறு நான் எகிப்தின் மீது[SE][SS] தண்டனை வரச்செய்வேன்.[SE][SS] அப்போது ‘நானே ஆண்டவர்’[SE][SS] என்பதை அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [SE][PE][QE]
20. {‘எகிப்திய மன்னனின் வலிமை முறிந்தது’} [PS] பதினொன்றாம் ஆண்டு, முதல் மாதத்தின் ஏழாம் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; [* எசா 19:1-25; எரே 46:2-26. ]
21. “மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை; வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை. [* எசா 19:1-25; எரே 46:2-26. ]
22. எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன். அவனுடைய இரு கைகளையும் — நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும் — முறித்து, அவன் கையினின்று வாளை விழச் செய்வேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ]
23. மக்களினங்களிடையேயும் நாடுகளிடையேயும் எகிப்தியரைச் சிதறுண்டு போகச் செய்வேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ]
24. பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான். [* எசா 19:1-25; எரே 46:2-26. ]
25. நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ]
26. எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும், நாடுகளிடையேயும் சிதறடிப்பேன். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.” [* எசா 19:1-25; எரே 46:2-26. ] [PE]