1. {தீரின் மன்னனுக்கு எதிரான இறைவாக்கு} [PS] ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
2. [QS][SS] மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] உன் இதயத்தின் செருக்கில்,[SE][SS] ‘நானே கடவுள்;[SE][SS] நான் கடல் நடுவே[SE][SS] கடவுளின் அரியணையில்[SE][SS] வீற்றிருக்கிறேன்’[SE][SS] என்று சொல்கின்றாய், ஆனால்[SE][SS] நீ கடவுளைப்போல்[SE][SS] அறிவாளியாக இருப்பதாக[SE][SS] எண்ணிடினும்,[SE][SS] நீ கடவுளல்ல; மனிதனே! [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
3. [QS][SS] தானியேலை விட நீ அறிவாளிதான்![SE][SS] மறைபொருள் எதுவும்[SE][SS] உனக்கு மறைவாயில்லை! [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
4. [QS][SS] உன் ஞானத்தாலும் அறிவாலும்[SE][SS] உனக்குச் செல்வம் சேர்த்தாய்;[SE][SS] உன் கருவூலத்தில் பொன்னையும்[SE][SS] வெள்ளியையும் குவித்தாய். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
5. [QS][SS] உன் வாணிபத் திறமையால்[SE][SS] உன் செல்வத்தைப் பெருக்கினாய்;[SE][SS] உன் செல்வத்தினாலோ[SE][SS] உன் இதயம் செருக்குற்றது. [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
6. [QS][SS] ஆகவே, தலைவராகிய ஆண்டவர்[SE][SS] இவ்வாறு கூறுகிறார்:[SE][SS] கடவுளைப்போல் அறிவாளி என[SE][SS] உன்னைக் கருதிக் கொள்வதால், [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
7. [QS][SS] மக்களினங்களில்[SE][SS] மிகவும் கொடியோரான அந்நியரை[SE][SS] உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்;[SE][SS] அவர்கள் உன் அழகுக்கும்[SE][SS] ஞானத்திற்கும் எதிராக[SE][SS] உருவிய வாளுடன் வருவர்;[SE][SS] உன் பெருமையைக் குலைப்பர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
8. [QS][SS] படு குழியில் தள்ளுவர் உன்னை;[SE][SS] கடல் நடுவே மூழ்கிச்[SE][SS] சாவோரெனச் சாவாய் நீயே! [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
9. [QS][SS] அப்போது உன்னைக்[SE][SS] கொல்வோரின் நடுவில்[SE][SS] ‘நானே கடவுள்’ என்று சொல்வாயோ?[SE][SS] உன்னைக் குத்திக்[SE][SS] கிழிப்போரின் கையில்[SE][SS] நீ கடவுளாக அல்ல,[SE][SS] மனிதனாகவே இருப்பாய். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
10. [QS][SS] விருத்தசேதனம்[SE][SS] செய்யப்படாதவனைப்போல்[SE][SS] அன்னியர் கையால் நீ சாவாய்.[SE][SS] நானே உரைத்தேன், என்கிறார்[SE][SS] தலைவராகிய ஆண்டவர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][PE][QE]
11. {தீர் மன்னனின் வீழ்ச்சி} [PS] [QS][SS] ஆண்டவரின் வாக்கு[SE][SS] எனக்கு அருளப்பட்டது: [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
12. [QS][SS] மானிடா! தீர் நகரின்[SE][SS] மன்னனைக் குறித்து,[SE][SS] இரங்கற்பா ஒன்று பாடு.[SE][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே;[SE][SS] ‘நீ நிறைவின் மாதிரியாகவும்[SE][SS] ஞானத்தின் நிறைவாகவும்ப்[SE][SS] அழகின் முழுமையாகவும் இருந்தாய். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
13. [QS][SS] கடவுளின் தோட்டமாகிய[SE][SS] ஏதேனில் இருந்தாய்![SE][SS] விலையுயர்ந்த கற்கள்[SE][SS] உன்னை அழகுபடுத்தின![SE] பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகப்பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருந்தாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன. [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [QE]
14. காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்; ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
15. நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ]
16. [QS][SS] பரந்த உன் வாணிபத்தால்[SE][SS] வன்முறை நிறைந்தது உன்னில்;[SE][SS] பாவம் செய்தாய் நீயே![SE][SS] எனவே, வெறுப்புடன் உன்னைக்[SE][SS] கடவுளின் மலையினின்று[SE][SS] வெளியேற்றினேன்;[SE][SS] ஓ! காவல்காக்கும் கெருபே![SE][SS] உன்னை ஒளிவீசும்[SE][SS] கற்கள் நடுவினின்று[SE][SS] வெளியே தள்ளினேன். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
17. [QS][SS] உன் அழகின் காரணமாய்[SE][SS] உன் இதயம் செருக்குற்றது;[SE][SS] உன் மாட்சியின் காரணமாய்[SE][SS] உன் ஞானத்தைக்[SE][SS] கெடுத்துக் கொண்டாய்;[SE][SS] எனவே நான் உன்னைத்[SE][SS] தரையில் தள்ளிவிட்டேன்;[SE][SS] மன்னர்கள் முன்னே உன்னைக்[SE][SS] காட்சிப் பொருளாக்கினேன். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
18. [QS][SS] உன் மிகுதியான பாவங்களாலும்[SE][SS] நேர்மையற்ற வாணிபத்தாலும்[SE][SS] உன் திருத்தலங்களைத்[SE][SS] தீட்டுப்படுத்தினாய்;[SE][SS] எனவே உன் நடுவினின்று[SE][SS] நெருப்பு வரச்செய்தேன்.[SE][SS] உன்னைப் பார்த்தோர் கண்முன்னே[SE][SS] முற்றிலும் உன்னைத்[SE][SS] தரையில் சாம்பலாக்கினேன். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][QE]
19. [QS][SS] உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும்[SE][SS] உன்னைக் கண்டு மருண்டு[SE][SS] திகிலுறுகின்றன.[SE][SS] நடுங்கற்குரிய முடிவுக்கு[SE][SS] வந்து விட்டாய் நீ;[SE][SS] இனிமேல் நீ இருக்கமாட்டாய்.’ [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ] [SE][PE][QE]
20. {சீதோனுக்கு எதிரான இறைவாக்கு} [PS] ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; யோவே 3:4-8; செக் 9:1-2; மத் 11:21-22; லூக் 10:13-14.. ]
21. மானிடா! சீதோனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்காகச் சொல். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; யோவே 3:4-8; செக் 9:1-2; மத் 11:21-22; லூக் 10:13-14.. ]
22. [QS][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] கூறுவது இதுவே;[SE][SS] சீதோனே, நான் உனக்கு[SE][SS] எதிராய் இருக்கிறேன்;[SE][SS] உன் நடுவில் என் மாட்சியை[SE][SS] வெளிப்படுத்தும்போது,[SE][SS] நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை[SE][SS] நிறைவேற்றும்போது,[SE][SS] உன் நடுவில் என் தூய்மையைக்[SE][SS] காண்பிக்கும்போது,[SE][SS] ‘நானே ஆண்டவர்’ என[SE][SS] உன்னிலுள்ளோர் அறிந்து கொள்வர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; யோவே 3:4-8; செக் 9:1-2; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][QE]
23. [QS][SS] உன்னிடத்தில் கொள்ளை நோய்[SE][SS] வரச்செய்து, உன் தெருக்களில்[SE][SS] குருதி ஓடச் செய்வேன்.[SE][SS] கொலை செய்யப்பட்டோர்[SE][SS] உன் நடுவில் விழுந்துகிடப்பர்;[SE][SS] உனக்கு எதிராய் எப்பக்கமும்[SE][SS] வாள் இருக்கும்;[SE][SS] அப்போது ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; யோவே 3:4-8; செக் 9:1-2; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [SE][PE][QE]
24. {இஸ்ரயேல் நற்பேறு பெறும்} [PS] இஸ்ரயேல் நாட்டினர்க்கு அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் இனிமேல் காலில் குத்தும் முள்ளாகவும் தைத்து வலிகொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இருக்கமாட்டார். அப்போது, அவர்கள் ‘நானே தலைவராகிய ஆண்டவர்’ என்பதை அறிந்து கொள்வர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; யோவே 3:4-8; செக் 9:1-2; மத் 11:21-22; லூக் 10:13-14.. ]
25. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டினரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்க்கையில் எல்லா மக்களினங்கள் நடுவிலும் நான் என் தூய்மையைக் காண்பிப்பேன். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டில் அப்போது வாழ்வர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; யோவே 3:4-8; செக் 9:1-2; மத் 11:21-22; லூக் 10:13-14.. ]
26. அவர்கள் அங்கே அச்சமின்றிக் குடியிருப்பர்; வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பர். அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் அனைவர் மீதும் தண்டனைத் தீர்ப்புகளை நான் நிறைவேற்றும்போது, அவர்கள் மட்டும் அச்சமின்றி வாழ்வர். அப்போது ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர். [* :19 எசா 23:1-18; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14. ; யோவே 3:4-8; செக் 9:1-2; மத் 11:21-22; லூக் 10:13-14.. ] [PE]