1. {அம்மோனுக்கு எதிரான இறைவாக்கு} [PS] ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: [* எரே 49:1-6; எசே 21:28-32; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ]
2. “மானிடா! அம்மோனியருக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு எதிராய் இறைவாக்குரை. [* எரே 49:1-6; எசே 21:28-32; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ]
3. அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். அவர் கூறுவது இதுவே; நீங்கள் எனது தூயகம் தீட்டுப்படுத்தப்பட்டபோதும், இஸ்ரயேல் நாடு பாழாக்கப்பட்டபோதும் யூதாவின் வீட்டார் சிறைப்பிடிக்கப்பட்டபோதும் ‘ஆகா’ என்று கூறி அக்களித்தீர்கள். [* எரே 49:1-6; எசே 21:28-32; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ]
4. எனவே உங்களைக் கீழ்த்திசையினருக்கு உரிமையாக ஒப்புவிக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் நடுவே பாளையம் அமைப்பார்கள்; கூடாரங்கள் அடிப்பார்கள்; உங்கள் மரங்களின் கனிகளை உண்பார்கள்; உங்கள் மந்தையின் பாலைப் பருகுவார்கள். [* எரே 49:1-6; எசே 21:28-32; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ]
5. இராபாவை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனை மந்தையின் கிடையாகவும் மாற்றுவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். [* எரே 49:1-6; எசே 21:28-32; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ]
6. ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் குதித்து வன்மனத்துடன் மகிழ்ந்தீர்கள். [* எரே 49:1-6; எசே 21:28-32; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ]
7. எனவே நான் என் கைகளை உங்களுக்கு எதிராய் ஓங்கி உங்களை வேற்றினத்தாருக்குக் கொள்ளைப் பொருளாய் ஒப்புவிப்பேன். உங்களை மக்களினங்களினின்று பிரித்து, நாடுகளிடையே இல்லாதபடி பூண்டோடு அழிப்பேன். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள். [* எரே 49:1-6; எசே 21:28-32; ஆமோ 1:13-15; செப் 2:8-11. ] [PE]
8. {மோவாபுக்கு எதிரான இறைவாக்கு} [PS] தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மோவாயும் சேயிரும், ‘இதோ! யூதா வீட்டார் மற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர்’ எனக் கூறினர். [* எச 15:1-16:14. ]
9. எனவே, மோவாபின் மலை வாயிலைத் திறப்பேன்; அதன் அணிகலனாகவும் எல்லையாகவும் உள்ள பெத்தசிமோத்து, பாகால்மெகோன், கிரியத்தாயிம் ஆகியவற்றை அழிப்பேன். [* எச 15:1-16:14. ]
10. மோவாபை அம்மோனுடன் சேர்த்து, கீழை நாட்டினர்க்கு உரிமையாகக் கொடுப்பேன். அது மக்களினங்களிடையே நினைவுகூரப்பட மாட்டாது. [* எச 15:1-16:14. ; எரே 48:1-47; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ]
11. மோவாபின்மேல் தண்டனையை வருவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அது அறிந்து கொள்ளும். [* எச 15:1-16:14. ; எரே 48:1-47; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ] [PE]
12. {ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு} [PS] தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: யூதா வீட்டாரை ஏதோம் பழிதீர்த்து அதன்மூலம் குற்றப் பழிக்குள்ளானது. [* எரே 48:1-47; ஆமோ 2:1-3; செப் 2:8-11. ; எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ]
13. எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் ஏதோமுக்கு எதிராய் என் கைகளை ஓங்கி, அதன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்; அதைப் பாழாக்குவேன். தேமானிலிருந்து தெதான் வரை மக்கள் வாளால் வீழ்வர். [* எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ]
14. என் மக்களாகிய இஸ்ரயேலரின் கையால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்களும் என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் தக்கவாறு ஏதோமுக்குச் செய்வார்கள். அது என் பழிவாங்குதலை உணர்ந்து கொள்ளும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [* எசா 34:5-17; 63:1-6; எரே 49:7-22; எசே 35:1-15; ஆமோ 1:11-12; ஒப 1-14; மலா 1:2-5. ] [PE]
15. {பெலிஸ்தியாவுக்கு எதிரான இறைவாக்கு} [PS] தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: பெலிஸ்தியர் பழிவாங்குமாறு இதயத்தில் பகை உணர்வுடன் செயல்பட்டனர். பழைய பகையை மனத்தில் வைத்து யூதாவை அழிக்கத் தேடினர். [* எசா 14:29-31; எரே 47:1-7; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.. ]
16. எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பெலிஸ்தியருக்கு எதிராக கைகளை ஓங்குகிறேன். கெரேத்தியரைக் கொன்று, கடற்கரை ஊர்களில் எஞ்சியவற்றையெல்லாம் அழிப்பேன். [* எசா 14:29-31; எரே 47:1-7; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.. ]
17. வன்மையாய் அவர்களைப் பழிவாங்கி, என் சீற்றத்தால் அவர்களைத் தண்டிப்பேன். அவ்வாறு அவர்களைப் பழிவாங்குகையில், நானே ஆண்டவர் என அவர்கள் அறிந்து கொள்வர். [* எசா 14:29-31; எரே 47:1-7; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.. ] [PE]