2. "யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன்.
|
3. ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.
|
5. "மரத்தைச் செதுக்கவும் மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் வேண்டிய திட்டமிடும் நுட்பத்திறன் பெற்றுள்ளான்.
|
6. மேலும், தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு என்பவனையும் நான் அவனோடு நியமித்துள்ளேன். ஞானமுள்ளோர் அனைவரின் உள்ளத்திலும் நானே ஞானம் அருளியுள்ளதால், அவர்கள் நான் உனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்வர். அவையாவன;
|
7. சந்திப்புக் கூடாரம், உடன்படிக்கைப் பேழையோடு அதன் மேலமைந்த இரக்கத்தின் இருக்கை, கூடாரத்திலுள்ள அனைத்துத் துணைக்கலன்கள்,
|
10. அழகுறப் பின்னப்பட்ட ஆடைகள், குருவாகிய ஆரோனுக்குரிய திருவுடைகள், குருத்துவப் பணிபுரிவதற்காக அவன் புதல்வருக்குரிய ஆடைகள்,
|
11. திருப்பொழிவு எண்ணெய், தூயதலத்திற்கான நறுமணத் தூப வகைகள் ஆகியவை. நான் உனக்குக் கட்டளையிட்டபடி இவை அனைத்தையும் அவர்கள் செய்வர்" என்றார்.
|
13. ""நீ இஸ்ரயேல் மக்களிடம் அறிவிக்க வேண்டியதாவது; நீங்கள் என் ஓய்வு நாள்களைக் கருத்தாய்க் கடைப்பிடியுங்கள். ஆண்டவராகிய நானே உங்களைப் புனிதமாக்குகிறவர் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளும்படி அது எனக்கும் உங்களுக்கும் இடையில் உங்கள் தலைமுறைதோறும் ஓர் அடையாளமாக இருக்கும்.
|
14. ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள். அது உங்களுக்குப் புனிதமானதாகும். அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும். அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
|
15. ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய "சாபாத்து ". ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
|
16. இஸ்ரயேல் மக்கள் ஓய்வுநாளைக் கடைபிடிக்க வேண்டும். என்றுமுள்ள உடன்படிக்கையாக விளங்கும்படி தலைமுறைதோறும் ஓய்வுநாளைக் கைக்கொள்ள வேண்டும்.
|
17. இது எனக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே என்றுமுள்ள ஓர் அடையாளம். ஏனெனில் ஆண்டவராகிய நான் ஆறு நாள்களில் விண்ணுலகையும் மண்ணுலகையும் உருவாக்கி ஏழாம் நாளில் ஓய்வெடுத்து இளைப்பாறினேன்" என்றார்.
|
18. ஆண்டவர் சீனாய்மலைமேல் மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்.
|