1. {மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள்} [PS] [QS][SS] கலத்திலிருக்கும் நறுமணத் தைலம்[SE][SS] முழுவதையும் செத்த ஈக்கள் முடை[SE][SS] நாற்றம் வீசும்படி செய்துவிடும்.[SE][SS] அதுபோல சிறிய மதிகேடும்[SE][SS] மேன்மையான ஞானத்தைக்[SE][SS] கெடுத்து விடும்.[SE][QE]
2. [QS][SS] தக்கன செய்வதையே[SE][SS] ஞானியரின் உள்ளம் நாடும்;[SE][SS] தகாதன செய்வதையே[SE][SS] மூடரின் உள்ளம் நாடும்.[SE][QE]
3. [QS][SS] மூடர் தெருவில் நடந்தாலே போதும்;[SE][SS] அவரது மடமை வெளியாகிவிடும்.[SE][SS] தாம் மூடர் என்பதை அவரே[SE][SS] அனைவருக்கும் காட்டிடுவார்.[SE][QE]
4. [QS][SS] மேலதிகாரி உன்னைச் சினந்து[SE][SS] கொண்டால், வேலையை விட்டு விடாதே.[SE][SS] நீ அடக்கமாயிருந்தால்,[SE][SS] பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.[SE][PE][QE]
5. [PS] உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.
6. மூடர்களுக்கு உயர்ந்த பதவி அளிக்கப்படுகிறது; செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
7. அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.
8. [QS][SS] குழியை வெட்டுவார் அதில்[SE][SS] தாமே வீழ்வார்.[SE][SS] கன்னமிடுவோரைக்[SE][SS] கட்டு விரியன் கடிக்கும். [* திபா 7:15; நீமொ 26:7.[QE]. ] [SE][QE]
9. [QS][SS] கற்களை வெட்டி எடுப்பவர்[SE][SS] கற்களால் காயமடைவார்.[SE][SS] மரத்தை வெட்டுபவர்[SE][SS] காயத்திற்கு ஆளாவார்.[SE][QE]
10. [QS][SS] மழுங்கிய கோடரியைத் தீட்டாமல்[SE][SS] பயன்படுத்தினால் வேலைசெய்வது[SE][SS] மிகக் கடினமாயிருக்கும்.[SE][SS] ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.[SE][QE]
11. [QS][SS] பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால்[SE][SS] அதை மயக்கும் வித்தை[SE][SS] தெரிந்திருந்தும் பயனில்லை.[SE][QE]
12. [QS][SS] ஞானியரின் வாய்மொழி அவருக்குப்[SE][SS] பெருமை தேடித்தரும்.[SE][SS] மூடரோ தம் வாயால் கெடுவார்.[SE][QE]
13. [QS][SS] அவரது பேச்சு மடமையில் தொடங்கும்;[SE][SS] முழு பைத்தியத்தில் போய் முடியும்.[SE][QE]
14. [QS][SS] மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்;[SE][SS] என்ன பேசப்போகின்றார் என்பது[SE][SS] எவருக்கும் தெரியாது.[SE][SS] அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை[SE][SS] எவராலும் சொல்ல இயலாது.[SE][QE]
15. [QS][SS] மூடர் அளவுமீறி உழைத்துத்[SE][SS] தளர்ந்து போவார்.[SE][SS] ஊருக்குத் திரும்பிப்போகவும்[SE][SS] வகை அறியார்.[SE][QE]
16. [QS][SS] சிறு பிள்ளையை அரசனாகவும்[SE][SS] விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத்[SE][SS] தலைவர்களாகவும் கொண்ட நாடே![SE][SS] நீ கெட்டழிவாய்.[SE][QE]
17. [QS][SS] உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும்[SE][SS] உரிய நேரத்தில் உண்பவர்களை,[SE][SS] குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு[SE][SS] இருப்பவர்களைத் தலைவர்களாகவும்[SE][SS] கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.[SE][QE]
18. [QS][SS] சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்;[SE][SS] பழுதுபார்க்காதவரின் வீடு[SE][SS] இடிந்து விழும்.[SE][QE]
19. [QS][SS] விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்;[SE][SS] திராட்சை மது வாழ்க்கையில்[SE][SS] களிப்புத்தரும்;[SE][SS] பணம் இருந்தால் தான்[SE][SS] எல்லாம் கிடைக்கும்.[SE][QE]
20. [QS][SS] தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே;[SE][SS] படுக்கையறையிலுங்கூடச்[SE][SS] செல்வர்களை இகழ்ந்து பேசாதே.[SE][SS] வானத்துப் பறவைகள் நீ கூறியதை[SE][SS] எடுத்துச்செல்லும்;[SE][SS] பறந்து சென்று நீ சொன்னதைத்[SE][SS] திரும்பச் சொல்லும்.[SE][PE]