1. {வெட்டுக்கிளிகளின் காட்சி} [PS] தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: “அரசனுக்கென முதல் புல்லறுப்புச் செய்தானபின், இரண்டாம் பருவத்தில் புற்கள் துளிர்க்கத் தொடங்கும் வேளையில், அவர் வெட்டுக்கிளிக் கூட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
2. நாட்டிலிருந்த புல்லையெல்லாம் அவை தின்று தீர்த்துக் கொண்டிருந்த வேளையில் நான்[QS][SS]“இறைவனாகிய ஆண்டவரே,[SE][SS] மன்னித்தருளும்;[SE][SS] உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்;[SE][SS] யாக்கோபு எப்படி[SE][SS] நிலைநிற்கப் போகிறான்?[SE][SS] அவன் மிகச் சிறியவன் அல்லவா!”[SE][SS] என்றேன்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரும் இதைக் குறித்து[SE][SS] மனம் மாறினார்;[SE][SS] ‘இது நிகழாது,’ என்றார்[SE][SS] தலைவராகிய ஆண்டவர்.”[SE][PE][QE]
4. {நெருப்பின் காட்சி} [PS] [QS][SS] தலைவராகிய ஆண்டவர்[SE][SS] எனக்குக் காட்டிய காட்சி இதுவே:[SE][SS] “தலைவராகிய ஆண்டவர்[SE][SS] தண்டனைத் தீர்ப்பாக[SE][SS] நெருப்பு மழையை வருவித்தார்;[SE][SS] அந்த நெருப்பு[SE][SS] ஆழ்கடலை வற்றச் செய்து[SE][SS] நிலத்தையும் விழுங்கிக்[SE][SS] கொண்டிருந்தது.[SE][QE]
5. [QS][SS] நான்,‘தலைவராகிய ஆண்டவரே,[SE][SS] இதை நிறுத்தியருளும்;[SE][SS] உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்;[SE][SS] யாக்கோபு எப்படி[SE][SS] நிலைநிற்கப் போகின்றான்?[SE][SS] அவன் மிகச் சிறியவன் அல்லவா!’[SE][SS] என்றேன்.[SE][PE][QE]
6. [PS] [QS][SS] ஆண்டவரும் இதைக் குறித்து[SE][SS] மனம் மாறினார்;[SE][SS] ‘இதுவும் நிகழாது,’ என்றார்[SE][SS] தலைவராகிய ஆண்டவர்.”[SE][PE][QE]
7. {தூக்குநூல் குண்டின் காட்சி} [PS] [QS][SS] ஆண்டவர் எனக்குக் காட்டிய[SE][SS] காட்சி இதுவே:[SE][SS] “தூக்கு நூல் குண்டின் துணைகொண்டு[SE][SS] கட்டப்பட்ட ஒரு மதில் அருகில்[SE][SS] அவர் நின்று கொண்டிருந்தார்.[SE][SS] அவர் கையில் ஒரு[SE][SS] தூக்கு நூல் குண்டு இருந்தது.[SE][QE]
8. [QS][SS] ‘ஆமோஸ்![SE][SS] நீ காண்பதென்ன?’ என்று[SE][SS] ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.[SE][SS] நான், ‘அது தூக்கு[SE][SS] நூல் குண்டு’ என்றேன்.[SE][SS] தலைவர் தொடர்ந்து சொன்னார்:[SE][SS] ‘தூக்கு நூல் குண்டை[SE][SS] என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில்[SE][SS] தொங்கவிடப் போகிறேன்;[SE][SS] இனி நான் அவர்கள் நடுவே[SE][SS] ஒருபோதும் கடந்து[SE][SS] செல்லப்போவதில்லை’. [* யோபு 9:1; 38:31. ] [SE][QE]
9. [QS][SS] ஈசாக்கின் உயர்ந்த இடங்கள்[SE][SS] பாழாக்கப்படும்;[SE][SS] இஸ்ரயேலின் புனித இடங்கள்[SE][SS] பாலைவெளி ஆக்கப்படும்;[SE][SS] எரொபவாம் வீட்டாருக்கு எதிராக[SE][SS] நான் வாளெடுத்து வருவேன்.”[SE][PE][QE]
10. {ஆமோசும் அமட்சியாவும்} [PS] பிறகு, பெத்தேலின் குருவாகிய அமட்சியா என்பவன் இஸ்ரயேலின் அரசன் எரொபவாமுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினான்: “இஸ்ரயேல் வீட்டாரிடையே ஆமோஸ் உமக்கு எதிராகச் சதி செய்கிறான்.
11. அவன் சொல்வதை எல்லாம் இந்த நாட்டால் தாங்கமுடியவில்லை. ஏனெனில், ‘எரொபவாம் வாளால் மடிவான்; அவனது நாட்டைவிட்டு இஸ்ரயேல் அடிமையாய்க் கொண்டு போகப்படும்’ என்று ஆமோஸ் சொல்லுகிறான்.”
12. பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு; யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு; அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்.
13. பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்” என்று சொன்னான்.[PE]
14. [PS] ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: “நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை; நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன்.
15. ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, ‘என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு’ என்று அனுப்பினார்.[PE]
16. [PS] [QS][SS] எனவே, இப்பொழுது[SE][SS] ஆண்டவரின் வாக்கைக் கேள்:[SE][SS] ‘இஸ்ரயேலுக்கு எதிராக[SE][SS] இறைவாக்கு உரைக்காதே;[SE][SS] ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப்[SE][SS] பேசாதே’ என்று நீ சொல்கிறாய்![SE][QE]
17. [QS][SS] ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:[SE][SS] “உன் மனைவி நகரில்[SE][SS] விலைமகளாய் இருப்பாள்;[SE][SS] உன் புதல்வர் புதல்வியர்[SE][SS] வாளால் மடிவர்;[SE][SS] உன் நிலபுலம்[SE][SS] பங்கு போட்டுக் கொள்ளப்படும்,[SE][SS] நீயோ புனிதமற்ற நாட்டிலே[SE][SS] மாண்டு போவாய்;[SE][SS] இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே[SE][SS] அடிமையாகக் கொண்டு போகப்படும்.”[SE][PE][QE]