1. {மோவாபு நாடு} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே: “மோவாபு[SE][SS] எண்ணற்ற குற்றங்கள் செய்ததற்காக[SE][SS] நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை[SE][SS] மாற்றவே மாட்டேன்;[SE][SS] ஏனெனில், அவன்[SE][SS] ஏதோம் அரசனின் எலும்புகளைச்[SE][SS] சுட்டுச் சாம்பலாக்கினான். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11. ] [SE][QE]
2. [QS][SS] ஆதலால், மோவாபின்மேல்[SE][SS] நெருப்பைக் கொட்டுவேன்.[SE][SS] அது கெரியோத்தின் கோட்டைகளை[SE][SS] விழுங்கிவிடும்;[SE][SS] இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம்[SE][SS] ஆகியவை ஒருசேர எழும் வேளைகளில்[SE][SS] மோவாபு மடிந்திடுவான். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11. ] [SE][QE]
3. [QS][SS] அந்நாட்டின் ஆட்சியாளனை[SE][SS] அவர்களிடையேயிருந்து[SE][SS] அகற்றிவிடுவேன்;[SE][SS] அவனோடு அதிகாரிகள்[SE][SS] அனைவரையும் அழித்து விடுவேன்”[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எசா 15:1-16:14; 25:10-12; எரே 48:1-47; எசே 25:8-11; செப் 2:8-11. ] [SE][PE][QE]
4. {யூதா நாடு} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “யூதா எண்ணற்ற குற்றங்கள்[SE][SS] செய்ததற்காக[SE][SS] நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை[SE][SS] மாற்றவேமாட்டேன்;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] ஆண்டவரின் திருச்சட்டத்தை[SE][SS] புறக்கணித்தார்கள்;[SE][SS] அவருடைய நியமங்களை[SE][SS] கடைப்பிடிக்கவில்லை;[SE][SS] அவர்களுடைய தந்தையர்[SE][SS] பின்பற்றிய பொய்த் தெய்வங்கள்[SE][SS] அவர்களையும் வஞ்சித்துவிட்டன.[SE][QE]
5. [QS][SS] ஆதலால் யூதாவின்மேல்[SE][SS] நெருப்பைக் கொட்டுவேன்;[SE][SS] அது எருசலேமின் கோட்டைகளை[SE][SS] விழுங்கிவிடும்.”[SE][PE][QE]
6. {இஸ்ரயேல் நாட்டின்மீது தீர்ப்பு} [PS] [QS][SS] ஆண்டவர் கூறுவது இதுவே:[SE][SS] “இஸ்ரயேல் எண்ணற்ற குற்றங்கள்[SE][SS] செய்ததற்காக[SE][SS] நான் கொடுத்த தண்டனைத் தீர்ப்பை[SE][SS] மாற்றவே மாட்டேன்;[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] நேர்மையாளரை வெள்ளிக் காசுக்கும்[SE][SS] வறியவரை இரு காலணிக்கும்[SE][SS] விற்கின்றார்கள்.[SE][QE]
7. [QS][SS] ஏழைகளின் தலைகளை மண்ணில்[SE][SS] புழுதிபட மிதிக்கின்றார்கள்;[SE][SS] ஒடுக்கப்பட்டோரின் நெறியைக்[SE][SS] கெடுக்கின்றார்கள்;[SE][SS] மகனும் தந்தையும்[SE][SS] ஒரே பெண்ணைக் கூடி,[SE][SS] என் திருப்பெயரைக்[SE][SS] களங்கப்படுத்துகின்றார்கள்.[SE][QE]
8. [QS][SS] கடன்காரரிடமிருந்து[SE][SS] பறித்த ஆடைகளை[SE][SS] விரித்துப் போட்டு,[SE][SS] எல்லாப் பலிபீடங்களின் முன்பும்[SE][SS] கிடந்து கொண்டு[SE][SS] அபராதம் விதித்துக்[SE][SS] கிடைத்த மதுவினைத்[SE][SS] தங்கள் கடவுளின் இல்லத்தில்[SE][SS] குடிக்கின்றார்கள்.[SE][QE]
9. [QS][SS] நானோ கேதுரு மரத்தின் உயரமும்[SE][SS] கருவாலி மரத்தின்[SE][SS] வலிமையும் கொண்ட எமோரியரை[SE][SS] அவர்கள் முன்பாக அழித்துவிட்டேன்;[SE][SS] மேலே அவர்களுடைய கனிகளையும்,[SE][SS] கீழே அவர்களுடைய வேர்களையும்[SE][SS] அழித்துவிட்டேன்; [* இச 3:8-11. ] [SE][QE]
10. [QS][SS] மேலும், எகிப்து நாட்டிலிருந்து[SE][SS] உங்களை அழைத்து வந்து,[SE][SS] நாற்பது ஆண்டுகள்[SE][SS] பாலைநிலத்தில் உங்களை வழிநடத்தி,[SE][SS] எமோரியர் நாட்டை நீங்கள்[SE][SS] உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளச்[SE][SS] செய்தேன்.[SE][QE]
11. [QS][SS] உங்கள் புதல்வர்களுள் சிலரை[SE][SS] இறைவாக்கினராய் உயர்த்தினேன்;[SE][SS] உங்கள் இளைஞர்களுள் சிலரை[SE][SS] நாசீர்களாய்த் தேர்ந்துகொண்டேன்;[SE][SS] இஸ்ரயேல் மக்களே,[SE][SS] இது உண்மையன்றோ?”[SE][SS] என்கிறார் ஆண்டவர். [* எண் 6:1-8.[QE]. ] [SE][QE]
12. [QS][SS] ஆனால், நீங்கள் நாசீர்களை[SE][SS] மது அருந்தச் செய்தீர்கள்;[SE][SS] இறைவாக்கினருக்கு[SE][SS] “இறைவாக்கு உரைக்கக்கூடாது”[SE][SS] என்று கட்டளையிட்டீர்கள்.[SE][QE]
13. [QS][SS] வைக்கோல் பொதி நிறைந்த வண்டி[SE][SS] அழுந்துவது போல, உங்களையும்[SE][SS] நீங்கள் இருக்கும் இடத்திலேயே[SE][SS] அழுத்துவேன்.[SE][QE]
14. [QS][SS] விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது;[SE][SS] வலிமையுள்ளவனும்[SE][SS] தன் வலிமையை இழந்து விடுவான்;[SE][SS] வீரனாலும் தன்னுயிரைக்[SE][SS] காத்துக் கொள்ள முடியாது.[SE][QE]
15. [QS][SS] வில்லேந்தும் வீரன்[SE][SS] எதிர்த்து நிற்கமாட்டான்.[SE][SS] விரைந்தோடுபவனும்[SE][SS] தன்னைக் காப்பாற்றிக்[SE][SS] கொள்ளமாட்டான்,[SE][SS] குதிரை வீரனாலும் தன்னுயிரைக்[SE][SS] காத்துக்கொள்ள முடியாது.[SE][QE]
16. [QS][SS] அந்நாளில் வலிமை மிக்கவர்களுள்[SE][SS] நெஞ்சுரம் கொண்டவன்கூடப்[SE][SS] படைக்கலன்களைத் தூக்கி எறிந்து விட்டு[SE][SS] ஓடுவான் என்கிறார் ஆண்டவர்.[SE][PE]