தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 நாளாகமம்
1. {திருக்கோவிலுக்கான பொருள்கள்[BR](1 அர 7:23-51)} [PS] சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் பத்து முழம். [* விப 27:1-2. ]
2. மேலும், கடல் என்னும் வட்டவடிவமான வெண்கலத் தொட்டியை அவர் வார்ப்பித்தார். அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம்.
3. அதன் அடியில் சுற்றிலும் காளை வடிவங்கள் இருந்தன. பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருந்தன. அவை தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.
4. அத்தொட்டி பன்னிரு காளைகளின்மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. காளைகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது.
5. தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப்போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும்.
6. கழுவுவதற்குப் பத்துக் கொப்பரைகளைச்செய்து, ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் அவர் வைத்தார். எரிபலிக்கான அனைத்தும் அவற்றில் கழுவப்பட்டன. குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் ‘கடல்’ பயன்படுத்தப்பட்டது. [* விப 30:17-21. ] [PE]
7. [PS] மேலும், அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; [* விப 25:31-40. ]
8. பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார்; [* விப 25:23-30.. ] [PE]
9. [PS] குருக்களின் முற்றத்தையும், பெரிய முற்றத்தையும் அமைத்தார்; முற்றத்தின் வாயில்களை அமைத்து, அவற்றின் கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினார்;
10. ‘கடலை’ வலப்பக்கம் தென்கிழக்கே நிறுவினார்.[PE]
11. [PS] ஈராம் பாத்திரங்களையும் சாம்பல் அள்ளுகருவிகளையும் கிண்ணங்களையும் செய்தார். இவ்வாறு அரசர் சாலமோன் கட்டளையிட்டபடி கடவுளின் இல்லத்திற்கான வேலைகளை அவர் செய்து முடித்தார்.
12. அவையாவன: இரு தூண்கள், இரு தூண்களின் உச்சியில் கிண்ண வடிவம் கொண்ட இரு போதிகைகள், தூண்களின் உச்சியிலுள்ள அப்போதிகைகளை மூட இரு வலைப்பின்னல்கள்,
13. அவ்விரு வலைப்பின்னல்களுக்கான நானூறு மாதுளை வடிவங்கள். அவை ஒவ்வொன்றிலும் மாதுளை வடிவங்கள் இரு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. வலைப்பின்னல்கள் தூண்களின் கிண்ண வடிவம் கொண்ட போதிகைகளை மூடியிருந்தன.
14. மேலும், அவன் செய்தவை: கொப்பரைகள், அவற்றுக்கான தள்ளுவண்டிகள்,
15. ஒரு ‘கடல்’. அதன்கீழ்ப் பன்னிரு காளைகள்,
16. பாத்திரங்கள், அள்ளுகருவிகள், முட்கரண்டிகள், மற்றும் துணைக்கலன்கள். ஈராம்-அபி ஆண்டவரின் இல்லத்திக்கு வேண்டிய பாத்திரங்ளைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான்.
17. அரசர் சுக்கோத்துக்கும் செரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தான் சமவெளிக் களிமண் பகுதியில் அவற்றை வார்ப்பித்தார்.
18. சாலமோன் செய்த கலன்கள் எல்லாம் கணக்கிலடங்கா; அவற்றுக்கான வெண்கலத்தை நிறுத்து மாளாது.[PE]
19. [PS] சாலமோன் கடவுளின் இல்லத்திற்கு வேண்டிய கலன்கள் எல்லாவற்றையும், பொற்பலிபீடத்தையும், திருமுன்னிலை மேசைகளையும்,
20. திருத்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி வைக்கவேண்டிய விளக்குத் தண்டுகளையும், ஏற்றவேண்டிய அகல்களையும் பசும் பொன்னால் செய்தார்;
21. அதேபோன்று மலர்களையும், அகல்களையும், அணைப்பான்களையும் பசும்பொன்னால் செய்தார்;
22. கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் தூபக்கலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்; மேலும், கோவில் வாயில்களையும், அதாவது திருத்தூயகக் கதவுகளையும் தூயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார்.[PE]
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 36
திருக்கோவிலுக்கான பொருள்கள்
(1 அர 7:23-51)

1 சாலமோன் ஒரு வெண்கலப் பலிபீடத்தைச் செய்தார். அதன் நீளம் இருபது முழம்; அகலம் இருபது முழம்; உயரம் பத்து முழம். * விப 27:1- 2. 2 மேலும், கடல் என்னும் வட்டவடிவமான வெண்கலத் தொட்டியை அவர் வார்ப்பித்தார். அதன் விட்டம் பத்து முழம்; உயரம் ஐந்து முழம்; சுற்றளவு முப்பது முழம். 3 அதன் அடியில் சுற்றிலும் காளை வடிவங்கள் இருந்தன. பத்து முழ அகலத்தில் அவை இரண்டு வரிசைகளாக வைக்கப்பட்டிருந்தன. அவை தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன. 4 அத்தொட்டி பன்னிரு காளைகளின்மேல் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள் மூன்று வடக்கையும் மூன்று மேற்கையும் மூன்று தெற்கையும் மூன்று கிழக்கையும் நோக்கிய வண்ணம் இருந்தன. காளைகளின் பின்பக்கம் உட்புறம் இருந்தது. 5 தொட்டியின் கனம் நான்கு விரல் கடை. அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போன்றும், மலர்ந்த லீலியைப்போன்றும் இருந்தது. அது மூவாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும். 6 கழுவுவதற்குப் பத்துக் கொப்பரைகளைச்செய்து, ஐந்தை வலப்பக்கத்திலும், ஐந்தை இடப்பக்கத்திலும் அவர் வைத்தார். எரிபலிக்கான அனைத்தும் அவற்றில் கழுவப்பட்டன. குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகக் ‘கடல்’ பயன்படுத்தப்பட்டது. * விப 30:17- 21. 7 மேலும், அவர் பத்துப் பொன் விளக்குத் தண்டுகளை அவற்றிற்குரிய நியமத்தின்படி செய்து, ஐந்தை வலப்புறமும் ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; * விப 25:31- 40. 8 பத்து மேசைகளைச் செய்து ஐந்தை வலப்புறமும், ஐந்தை இடப்புறமுமாகத் தூயகத்தில் வைத்தார்; நூறு பொற்கிண்ணங்களையும் செய்தார்; * விப 25:23-30.. 9 குருக்களின் முற்றத்தையும், பெரிய முற்றத்தையும் அமைத்தார்; முற்றத்தின் வாயில்களை அமைத்து, அவற்றின் கதவுகளை வெண்கலத் தகட்டால் மூடினார்; 10 ‘கடலை’ வலப்பக்கம் தென்கிழக்கே நிறுவினார். 11 ஈராம் பாத்திரங்களையும் சாம்பல் அள்ளுகருவிகளையும் கிண்ணங்களையும் செய்தார். இவ்வாறு அரசர் சாலமோன் கட்டளையிட்டபடி கடவுளின் இல்லத்திற்கான வேலைகளை அவர் செய்து முடித்தார். 12 அவையாவன: இரு தூண்கள், இரு தூண்களின் உச்சியில் கிண்ண வடிவம் கொண்ட இரு போதிகைகள், தூண்களின் உச்சியிலுள்ள அப்போதிகைகளை மூட இரு வலைப்பின்னல்கள், 13 அவ்விரு வலைப்பின்னல்களுக்கான நானூறு மாதுளை வடிவங்கள். அவை ஒவ்வொன்றிலும் மாதுளை வடிவங்கள் இரு வரிசைகளில் வைக்கப்பட்டிருந்தன. வலைப்பின்னல்கள் தூண்களின் கிண்ண வடிவம் கொண்ட போதிகைகளை மூடியிருந்தன. 14 மேலும், அவன் செய்தவை: கொப்பரைகள், அவற்றுக்கான தள்ளுவண்டிகள், 15 ஒரு ‘கடல்’. அதன்கீழ்ப் பன்னிரு காளைகள், 16 பாத்திரங்கள், அள்ளுகருவிகள், முட்கரண்டிகள், மற்றும் துணைக்கலன்கள். ஈராம்-அபி ஆண்டவரின் இல்லத்திக்கு வேண்டிய பாத்திரங்ளைக் கலப்பற்ற வெண்கலத்தால் சாலமோனுக்குச் செய்து கொடுத்தான். 17 அரசர் சுக்கோத்துக்கும் செரேதாவுக்கும் இடையிலுள்ள யோர்தான் சமவெளிக் களிமண் பகுதியில் அவற்றை வார்ப்பித்தார். 18 சாலமோன் செய்த கலன்கள் எல்லாம் கணக்கிலடங்கா; அவற்றுக்கான வெண்கலத்தை நிறுத்து மாளாது. 19 சாலமோன் கடவுளின் இல்லத்திற்கு வேண்டிய கலன்கள் எல்லாவற்றையும், பொற்பலிபீடத்தையும், திருமுன்னிலை மேசைகளையும், 20 திருத்தூயகத்திற்கு முன்பாக முறைப்படி வைக்கவேண்டிய விளக்குத் தண்டுகளையும், ஏற்றவேண்டிய அகல்களையும் பசும் பொன்னால் செய்தார்; 21 அதேபோன்று மலர்களையும், அகல்களையும், அணைப்பான்களையும் பசும்பொன்னால் செய்தார்; 22 கத்தரிக்கோல்களையும், தீர்த்தச் செம்புகளையும், கரண்டிகளையும் தூபக்கலசங்களையும் பசும் பொன்னால் செய்தார்; மேலும், கோவில் வாயில்களையும், அதாவது திருத்தூயகக் கதவுகளையும் தூயகக் கதவுகளையும் தங்கத்தால் செய்தார்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References