தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
1 சாமுவேல்
1. தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்கு தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றார்.
2. ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.
3. தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்பேக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, "கடவுள் எனக்கு என்ன செய்யவிருக்கிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும், என்று வேண்டினார்.
4. பின்பு அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தனர்.
5. பின்பு இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு "நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ! என்றார். எனவே தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.
6. தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபயாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
7. சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் கொடுப்பானோ? அவனால் உங்கள் அனைவரையும் ஆயிரவர் தலைவர்களாகவும் நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியுமா?
8. பின் எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்தபோது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை; என்மேல் மனமிரங்கி அதை எனக்குத் தெரிவிக்க உங்களில் ஒருவனும் முன்வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கெதிராகத் தூண்டிவிட்டான்" என்றார்.
9. அப்பபோது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, "நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதைக் நான் கண்டேன்.
10. அகிமெலக்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுளத்தைக் கேட்டறிந்தார். மேலும் அவர் அவனுக்கு வழியுணவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார்" என்றான்.
11. அதைக் கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லாரும் அரசிடம் வந்தனர்.
12. அப்பொழுது சவுல், "அகிப்தூபின் மகனே கேள் ", என அவரும், "இதோ உள்ளேன் என் தலைவரே! என்றார்.
13. சவுல் அவரிடம், "நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்கி செய்தீர்கள். இந்நாள் வரை அவன் எனக்கெதிராக கிளர்ச்சி செய்யும்படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்துஅவனுக்காக கடவுளின் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தாய்?" என்று கேட்டார்.
14. அதற்கு அகிமெலக்கு அரசரிடம், "உம் பணியாளர் அனைவரும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டரையே மேன்மை பெற்றவன் அன்றோ?
15. அவனுக்காக நான் கடவுளின் திருவுளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடைவையா? இல்லை. அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்; ஏனெனில் உம் பிணியாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது" என்று பதிலளித்தார்.
16. அரசர் அவரிடம் "அகிமெலக்கு நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும்" என்றார்.
17. அரசர் தம்மைச் சூழந்து நின்ற காவலர்களிடம், "நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்; ஏனெனில் அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்கு தெரிவிக்கவில்லை என்றார். ஆனால் அரசனின் பணியாளர் ஆண்டவரின் குருக்களை கொல்ல முன்வரவில்லை.
18. அப்போது அரசர் தோயோகிடம், "நீ சென்று தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து", என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயோகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினான். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.
19. மேலும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளுக்கு இரையாக்கினான்.
20. ஆனால் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.
21. ஆண்டவரின் குருக்களை சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.
22. தாவீது அபியத்தாரிடம், "ஏதோமியன் தோயோகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிவித்திருந்தேன்; உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!
23. என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுகிறவன்தான் உன் உயிரையும் பறிக்கத் தேடுவான்; ஆனால் என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய்" என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 31 Chapters, Current Chapter 22 of Total Chapters 31
1 சாமுவேல் 22:11

×

Alert

×

tamil Letters Keypad References