1. {சிறைமீண்ட மக்கள்} [PS] இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் தலைமுறை அட்டவணையின்படி புதிவு செய்யப்பட்டனர். இவை இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்று நூலில் எழுதப்பட்டுள்ளன. யூதா மக்கள் அவர்களது துரோகத்தை முன்னிட்டு பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
2. தங்களுக்குச் சொந்தமான இடங்களிலும் நகர்களிலும் முதன் முதலாகக் குடியேறியவர்கள் இஸ்ரயேலரும் குருக்களும் லேவியரும் கோவில் பணியாளருமே.
3. யூதா, பென்யமின் எப்ராயிம் மனாசே மக்களுள் எருசலேமில் குடியிருந்தவர்; [* எஸ்ரா 2:27; நெகே 7:73. ] [PE]
4. [PS] ஊத்தாய்; இவர் அம்மிகூதின் மகன்; இவர் ஓம்ரியின் மகன்; இவர் இம்ரியின் மகன்; இவர் பானியின் மகன்; இவர் பெரேட்சியின் புதல்வருள் ஒருவர்; இவர் யூதாவின் மகன். [* எஸ்ரா 2:27; நெகே 7:73. ] [PE]
5. [PS] சீலோன் மரபில் தலைமகன் அசாயாவும் அவர் புதல்வரும்.
6. கேராகின் புதல்வருள் எகுவேல்; அவர் உறவினர் அறுநூற்றுத் தொண்ணூறுபேர்.[PE]
7. [PS] பென்யமின் புதல்வருள் சல்லூ; இவர் மெசுல்லாமின் மகன்; இவர் ஓதவியாவின் மகன்; இவர் அஸ்னுவாவின் மகன்;
8. எரோகாமின் மகன் இப்னயா; மிக்ரீயின் புதல்வராகிய உசீயின் மகன் ஏலா; இப்னயாவின் புதல்வராகிய இரகுவேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.
9. தலைமுறை அட்டவணைப்படி அவர்கள் உறவினர் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஆறுபேர். இந்த ஆள்கள் அனைவரும் தங்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களாயிருந்தனர்.[PE]
10. {எருசலேமில் வாழ்ந்த குருக்கள்} [PS] குருக்கள் எதாயா, யோயாரிபு, யாக்கின்;
11. அசரியா; இவர் இல்க்கியாவின் மகன்; இவர் மெசுல்லாமின் மகன்; இவர் சாதோக்கின் மகன்; இவர் மெராயோத்தின் மகன்; இவர் கடவுளின் இல்லப் பொறுப்பளாரான அகித்தூபின் மகன்.[PE]
12. [PS] அதாயா; இவர் மல்கியாவின் புதல்வரான பஸ்கூருக்குப் பிறந்த எரொகாமின் மகன்; இவர் அதியேலின் மகன்; இவர் யாகிசேராவின் மகன்; இவர் மெசுல்லாமின் மகன்; இவர் மெசில்லேமித்தின் மகன்; இவர் இம்மேரின் மகன்.
13. அவர்கள் உறவினரும் அவர்கள் மூதாதையர் மரபில் குடும்பத் தலைவர்களுமாயிருந்த ஆற்றல்மிகு வீரர் ஆயிரத்து எழுநூற்று அறுபது பேர். இவர்கள் கடவுளின் இல்லப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.[PE]
14. {எருசலேமில் வாழ்ந்த லேவியர்} [PS] லேவியருள் செமாயா; இவர் அசூபின் மகன்; இவர் அஸ்ரிகாமின் மகன்; இவர் அசபியாவின் மகன்; இவர் மெராரியின் புதல்வருள் ஒருவர்.[PE]
15. [PS] பகபக்கர், எரேசு, காலால்; ஆசாவின் புதல்வர் சிக்ரிக்குப் பிறந்த மீக்காவின் மகன் மத்தனியா.
16. எதுத்தூனின் புதல்வன் காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெற்றோபாவியரின் சிற்றூர்களில் வாழ்ந்த எல்கானாவுக்குப் பிறந்த ஆசாவின் மகன் பெரக்கியா.[PE]
17. {எருசலேமில் வாழ்ந்த கோயிற் காவலர்} [PS] வாயில் காப்போர் சல்லூம், அக்கூபு, தல்மோன், அகிமான், மற்றும் இவர்கள் உறவினர்; சல்லூம் இவர்களின் தலைவர்.
18. இவர்கள் இன்றுவரை கிழக்கில் அரச வாயிலைக் காத்து வருகின்றனர். இவர்களே லேவியர் பாளையத்தின் காவலராய் இருந்தவர்கள்.[PE]
19. [PS] கோராகின் புதல்வர் எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும் அவர் தந்தையின் வீட்டாரும் உறவினருமாகிய கோராகியரும் கூடார நுழைவாயில் மேற்பார்வைப்பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். முன்பே அவர்களின் மூதாதையர் ஆண்டவரது பாளையவாயிலைக் காத்து வந்தனர்.
20. எலயாசர் மகன் பினகாசு முற்காலத்தில் அவர்களின் அதிகாரியாக இருந்தார். ஆண்டவர் அவரோடிருந்தார்.[PE]
21. [PS] மெசல்லேமியாவின் மகன் செக்கரியா சந்திப்புக் கூடார நுழைவாயிலின் காவலராக இருந்தார்.[PE]
22. [PS] நுழைவாயில்களைக் காப்பதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களின் எண்ணிக்கை இருநூற்றுப் பன்னிரண்டு . இவர்கள் தங்கள் சிற்றூர்களில் தலைமுறை அட்டவணைப்படி பதிவு செய்யப்பட்டவர்கள். அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்ததால், தாவீதும், திருக்காட்சியாளர் சாமுவேலும் அவர்களை இப்பணியில் அமர்த்தினார்கள்.
23. அவர்களும் அவர்கள் புதல்வரும் கடவுளின் இல்லக் கூடாரத்தின் வாயில்களைக் காத்து வந்தனர்.
24. வாயில் காப்போர், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு பக்கங்களிலும் இருந்தனர்.
25. சிற்றூர்களில் இருந்த அவர்களின் உறவின் முறையினர் ஏழு நாள்கள் இவர்களோடிருக்க மாறி மாறி வரவேண்டும்.
26. தலைமை வாயில் காவலராகிய நான்கு லேவியரும் கடவுளின் இல்லப் பண்டக சாலைகளுக்கும், கருவூலங்களுக்கும் பொறுப்பாளர்களாய் இருந்தனர்.
27. காவல் காக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்ததால் அவர்கள் கடவுளின் இல்லத்தைச் சுற்றிலும் இரவில் தங்கியிருந்து காலைதோறும் கதவுகளைத் திறந்து விடுவார்கள்.[PE]
28. {வேறு லேவியர்} [PS] அவர்களில் சிலரிடம் வழிபாட்டுக்குரிய கலங்களின் பொறுப்பு இருந்தது. அவற்றை உள்ளே கொண்டு போகும் போதும் வெளியே கொண்டு வரும்போதும் எண்ணிச் சரிபார்ப்பர்.
29. மற்றும் சிலரிடம் தட்டுமுட்டுகள், எல்லாப்புனித கலங்கள், மிருதுவான மாவு, திராட்சை ரசம், எண்ணெய், சாம்பிராணி, நறுமணப்பொருள்கள் ஆகியவற்றின்மேல் பொறுப்பு தரப்பட்டிருந்தது.
30. குருக்களின் புதல்வர் சிலர் நறுமணப் பொருள்களில் இருந்து நறுமணக் கலவை தயாரித்தனர்.[PE]
31. [PS] கோராகியரான சல்லூமின் தலைமகன் மத்தித்தியா என்ற லேவியருக்குத் தட்டைச் சட்டியில் பண்டங்கள் சுடும் பொறுப்பு விடப்பட்டிருந்தது.
32. அவர்கள் உறவினராகிய கோகாத்தியரின் புதல்வருள் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் திருமுன் அடுக்கும் அப்பங்களைத் தயாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
33. இவர்களில் லேவியரின் மூதாதையருள் பாடகர் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கயிருந்தனர். ஏனெனில்,அவர்கள் இரவும் பகலும் பணி செய்ய வேண்டியிருந்ததால், பிற பணியின்றிக் கடவுளின் இல்ல அறைகளிலேயே தங்கியிருந்தனர்.
34. தலைவராகிய இவர்களே தலைமுறை அட்டவணைப்படி லேவியருள் குடும்பத் தலைவர்கள்; எருசலேமில் குடியிருந்த தலைவர்கள்.[PE]
35. {அரசர் சவுலின் மூதாதையரும் வழிமரபினரும்[BR](8:29-38)} [PS] கிபயோனில் கிபயோனின் தந்தை எயியேல் வாழ்ந்து வந்தார். அவர் மனைவியின் பெயர் மாக்கா.
36. அவர் தலைமகன் அப்தோன்; மற்றவர்கள் சூர், கீசு, பாகால், நேர், நாதாபு,
37. கெதார், அகியோ, செக்கரியா, மிக்லோத்து.
38. மிக்லோத்திற்கு சிமயாம் பிறந்தார். இவர்கள் எருசலேமில் தங்கள் உறவின்முறையாரோடு வாழ்ந்து வந்தார்கள்.[PE]
39. [PS] நேருக்குக் கீசு பிறந்தார்; கீசுக்கு சவுல் பிறந்தார்; சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.
40. யோனத்தானின் மகன் மெரிபு பாகால்; மெரிபு பாகாலுக்கு மீக்கா பிறந்தார்.
41. மீக்காவின் புதல்வர்கள் பித்தோன், மெலேக்கு, தகரேயா, ஆகாசு.
42. ஆகாசுக்கு யாரா பிறந்தார்; யாராவுக்கு அலமேத், அஸ்மாவேத், சிம்ரி பிறந்தனர். சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.
43. மோட்சாவுக்கு பினேயா பிறந்தார்; இவர் மகன் இரபாயா; இவர் மகன் எலயாசர்; இவர் மகன் ஆட்சேல்.[PE]
44. [PS] ஆட்சேலுக்கு ஆறு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் பெயர்களாவன; அசிரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயர்யா, ஒபதியா, ஆனான். இவர்கள் ஆட்சேலின் புதல்வர்கள்.[PE]