1. {பென்யமினின் வழிமரபினர்} [PS] பென்யமினுக்குப் பிறந்தோர்; தலைமகன் பேலா, இரண்டாமவர் அஸ்பேல், மூன்றாமவர் அகிராகு,
2. நான்காமவர் நோகா, ஐந்தாமவர் இராப்பா.[PE]
3. [PS] பேலாவுக்கு இருந்த புதல்வர்: அதார், கேரா, அபிகூது,
4. அபிசூவா, நாகமான், அகோகு,
5. கேரா, செபுவான், ஊராம்.[PE]
6. [PS] ஏகூதின் புதல்வர்: அவர்கள் மானகாத்திற்கு நாடு கடத்தப்பட்ட கெபாலின் குடிகளின் மூதாதை வீட்டுக்குத் தலைவர்கள்;
7. நாகமான், அகியா, கேரா என்ற எக்லாம். அவர் உசாவையும் அகிகூதையும் பெற்றார்.[PE]
8. [PS] சகரயிம், தம் மனைவியர் கூசீம், பாரா என்பவர்களைத் தள்ளிவைத்தபின், மோவாபு நாட்டில் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தனர்.
9. ஓதேசு என்னும் மனைவிமூலம் அவர் பெற்ற புதல்வர்கள்; யோபாப், சிபியா, மேசா, மல்காம்.
10. எயூசு, சாக்கியா, மிர்மா. மூதாதையரின் வீட்டுத் தலைவர்களான இவர்கள் அவரின் புதல்வர்.
11. ஊசிம் மூலம் அவர் அபிதூபையும் எல்பாகாலையும் பெற்றார்.[PE]
12. [PS] எல்பாகாலின் புதல்வர்: ஏபேர், மிஸ்யாம், சாமேது. அவர் ஓனோ, லோது மற்றும் அதன் சிற்றூர்களையும் கட்டி எழுப்பினார்.[PE]
13. {அய்யலோன் மற்றும் காத்துப் பகுதிகளில் வாழ்ந்த பென்யமினியர்} [PS] பெரியாவும் செமாவும் அய்யலோன் குடிகளின் மூதாதையர் வீட்டுத் தலைவராய் இருந்தனர். அவர்கள் காத்தின் குடிகளைத் துரத்தியடித்தனர்.
14. அகியோ, சாசாக்கு, எரேமோத்து,
15. செபதியா, அராது, ஏதேர்,
16. மிக்கேல், இஸ்பா, யோகா என்போர் பெரியாவின் புதல்வர்.[PE]
17. {எருசலேமில் வாழ்ந்த பென்யமினியர்} [PS] செபதியா, மெசுல்லாம், இசுக்கி, எபேர், [* விப . ]
18. இஸ்மராய், இஸ்லியா, யோபாபு என்போர் எல்பாகாலின் புதல்வர். [* விப . ] [PE]
19. [PS] யாக்கிம், சிக்ரி, சப்தி, [* விப . ]
20. எலியேனாய், சில்தாய், எலியேல், [* விப . ]
21. அதாயா, பெராயா, சிம்ராது என்போர் சிமயியின் புதல்வர்.[PE]
22. [PS] இஸ்பான், ஏபேர், எலியேல்,
23. அப்தோன், சிக்ரி, ஆனான்,
24. அனனியா, ஏலாம், அன்தோதியா,
25. இப்தியா, பெனுவேல் என்போர் சாசாக்கின் புதல்வர்.[PE]
26. [PS] சம்சராய், செகரியா, அத்தலியா,
27. யகரேசியா, எலியா, சிக்ரி என்போர் எரொகாமின் புதல்வர்.
28. இவர்கள் தங்கள் தலைமுறைகளில் மூதாதையர் வீட்டுத் தலைவர்களுள் முதல்வராய் இருந்தனர். இவர்கள் எருசலேமில் வாழ்ந்தார்கள்.[PE]
29. {கிபயோன் மற்றும் எருசலேமில் வாழ்ந்த பென்யமினியர்} [PS] கிபயோனில் வாழ்ந்த கிபயோனியரின் மூதாதை எயியேல். அவரின் மனைவி பெயர் மாக்கா.
30. அவரின் தலைமகன் அப்தோன்; மற்றவர்கள்; சூர், கீசு, பாகால், நாதாபு,
31. கெதோர், அகியோ, செகேர்,
32. மிக்லோத்து; இவருக்குச் சிமயா பிறந்தார். அவர்களின் வழிமரபினர் தங்கள் உறவின் முறையாருடன் எருசலேமில் வாழ்ந்தார்கள்.[PE]
33. {அரசர் சவுலின் குடும்பத்தினர்} [PS] நேருக்குக் கீசு பிறந்தார். கீசுக்குச் சவுல் பிறந்தார் சவுலுக்கு யோனத்தான், மல்கிசூவா, அபினதாபு, எஸ்பாகால் ஆகியோர் பிறந்தனர்.
34. யோனத்தானின் மகன் மெரிபுபாகால், மெரிபுபாகாலுக்கு மீக்கா பிறந்தார்.[PE]
35. [PS] மீக்காவின் புதல்வர்: பித்தோன், மெலேக்கு, தாரேயா, ஆகாசு.
36. ஆகாசுக்கு யோயாதா பிறந்தார்; யோயாதாவுக்குப் பிறந்தோர்; ஆலமேத்து, அஸ்மாவேத்து, சிம்ரி. சிம்ரிக்கு மோட்சா பிறந்தார்.
37. மோட்சாவுக்குப் பினியா பிறந்தார். அவர் மகன் இராப்பா; அவர் மகன் எலயாசர்; அவர் மகன் ஆட்சேல்.[PE]
38. [PS] ஆட்சேலுக்கு ஆறு புதல்வர் இருந்தனர். அவர்களின் பெயர்களாவன; அஸ்ரிக்காம், பொக்கரு, இஸ்மயேல், செயரியா, ஒபதியா, ஆனான். இவர்கள் அனைவரும் ஆட்சேலின் புதல்வர்கள்.
39. அவர் சகோதரரான ஏசேக்கின் புதல்வர்: தலைமகன் ஊலாம், இரண்டாமவர் எயூசு, மூன்றாமவன் எலிப்பலேற்று.
40. ஊலாமின் புதல்வர்கள் ஆற்றல்மிகு வீரர்களாயும், வில்வல்லோர்களாயும் இருந்தனர். அவர்களுக்குப் பல பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாய் மொத்தம் நூற்று ஐம்பது பேர் இருந்தனர். இவர்கள் யாவரும் பென்யமின் புதல்வர்கள்.[PE]