1. [PS] தாவீது வயது முதிர்ந்து கிழவரான போது, தம் மகன் சாலமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினார். [* 1 அர 1:1-40. ] [PE]
2. {லேவியரின் அலுவல்} [PS] அவர் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களையும், குருக்களையும் லேவிரையும் ஒன்றுகூட்டினார்.
3. லேவியருள் முப்பதும் அதற்கு மேற்பட்ட வயதினரும் எண்ணப்பட்டனர். அவர்கள் மொத்தம் முப்பத்து எட்டாயிரம் ஆண்கள்.
4. அவர்களுள் இருபத்து நாலாயிரம் பேரை ஆண்டவரின் இல்லப் பணிகளுக்குப் பொறுப்பாளராகவும், ஆறாயிரம் பேரை அலுவலர், நீதிபதிகளாகவும்,
5. நாலாயிரம் பேரை வாயில்காப்போராகவும், நாலாயிரம் பேரை ஆண்டவரைப் புகழ்வதற்காகத் தாம் செய்து வைத்திருந்த இசைக்கருவிகளுடன் புகழ் பாடுவோராகவும் நியமித்தார்.
6. தாவீது அவர்களை லேவிய மக்களான கேர்சோன், கோகாத்து, மெராரி என்னும் குடும்பங்களின்படி பிரித்தார்:[PE]
7. [PS] கேர்சோனியரில் இலாதானும் சிமயியும்;
8. இலாதானின் புதல்வர்: தலைவரான எகியேல், சேத்தாம், யோவேல் ஆகிய மூவர்;
9. சிமயின் புதல்வர்: செலமோத்து, அசியேல், ஆரான், ஆகிய மூவர். இவர்கள் இலாதானின் மூதாதையரில் தலைவர்கள்.
10. சிமயின் புதல்வர்: யாகாத்து, சீனா, எயூசு, பெரியா இந்த நால்வர் சிமயியின் புதல்வர்.
11. இவர்களுள் யாகாத்து மூத்தவர், சீசா இரண்டாம் மகன், எயூசுக்கும் பெரியாவுக்கும் புதல்வர் பலர் இல்லாததால், ஒரே மூதாதையரின் குடும்பத்தினராய்க் கணக்கிடப்பட்டனர்.[PE]
12. [PS] கோகாத்தின் புதல்வர்: அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர்.
13. அம்ராமின் புதல்வர்: ஆரோன், மோசே. ஆரோனும் அவர் புதல்வரும் திருத்தூயகத்தை என்றும் புனிதமாய்க் காக்கவும், என்றென்றும் ஆண்டவருக்கு முன்பாகத் தூபங்காட்டவும், அவர்தம் திருமுன் பணிசெய்யவும், அவர் பெயரால் ஆசி வழங்கவும், அர்ப்பணிக்கப்பட்டனர்.
14. கடவுளின் அடியவரான மோசேயின் புதல்வரும் லேவி குலத்தாரோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.
15. மோசேயின் புதல்வர்: கெர்சோம், எலியேசர்,
16. கெர்சோமின் புதல்வருள் செபுயேல் தலைவராய் இருந்தார்.
17. எலியேசர் புதல்வருள் இரகபியா தலைவராய் இருந்தார். எலியேசருக்கு வேறு புதல்வர் இல்லை. ஆனால், இரகபியாவுக்குப் புதல்வர் பலர் இருந்தனர்.[PE]
18. [PS] இட்சகார் புதல்வருள் செலோமித்து தலைவராய் இருந்தார்.
19. எப்ரோன் புதல்வர்: தலைவரான எரிய்யா, இரண்டாமவர் அமரியா, மூன்றாமவர் யாகசியேல், நான்காமவர் எக்கமயாம்.
20. உசியேல் புதல்வர்: தலைவரான மீக்கா, இரண்டாமவர் இசியா.[PE]
21. [PS] மெராரியின் புதல்வர்: மக்லி, மூசி, மக்லியின் புதல்வர்: எலயாசர், கீஸ்.
22. எலயாசர் இறந்தபோது அவருக்குப் புதல்வியரேயன்றிப் புதல்வர் எவரும் இல்லை. அவர் சகோதரராகிய கீசின் புதல்வர் அவர்களை மணந்து கொண்டனர்.
23. மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர். [* விப 28:1. ] [PE]
24. [PS] தங்கள் மூதாதையரின் குலங்களின்படியே, மூதாதையர் குடும்பத் தலைவர்களாய் இருந்த லேவியரின் புதல்வர் இவர்களே. இவர்கள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள். தனித்தனியே நபர்களின் பெயர்களின் எண் வரிசைப்படியே பதிவு செய்யப்பட்டு ஆண்டவரின் திருக்கோவிலின் பணியோடு தொடர்புகொண்ட வேலைகளைச் செய்யவேண்டியவர்கள்.
25. ஏனெனில், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்து, எருசலேமில் என்றும் குடியிருக்கிறார்.
26. அதுவுமன்றி, லேவியர் திருக்கூடாரத்தையும் வழிபாட்டுக்கான அனைத்துக் கலங்களையும் இனிச் சுமக்க வேண்டுவதில்லை” என்று தாவீது கூறினார். [* இச 10:8. ] [PE]
27. [PS] தாவீதின் இறுதிச் சொற்களின்படி லேவியருள் இருபதும் அதற்கு மேற்பட்ட வயதினர் யாவரும் பதிவு செய்யப்பட்டனர்.
28. அவர்கள், ஆண்டவரின் இல்லப்பணியில் ஆரோனின் புதல்வரின்கீழ் வேலை செய்யவும், முற்றங்களையும் உள்ளறைகளையும் புனிதக் கலங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தவும், கோவிலில் எவ்வகைப் பணியையும் செய்யவும் வேண்டும்; [* எண் 3:5-9.. ]
29. திருமுன்னிலை அப்பங்கள், உணவுப்பலிக்கான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பம், சட்டிகளில் சுட்ட, பொரித்த அடைகள் ஆகியவற்றைத் தயாரித்து, அவற்றின் எடையையும் அளவையும் கணக்கிடுதல் வேண்டும். [* எண் 3:5-9.. ]
30. ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்; [* எண் 3:5-9.. ]
31. அத்தோடு ஓய்வு நாள்களிலும் அமாவாசை நாள்களிலும் மற்றைய விழாக்களிலும் ஆண்டவருக்கு எரிபலி செலுத்தும்போது எண்ணிக்கைப்படியும் பிரிவுகளின்படியும் ஆண்டவர் முன் எப்போதும் நிற்கவேண்டும். [* எண் 3:5-9.. ]
32. ஆண்டவர் தங்கும் சந்திப்புக் கூடாரத்தையும், திருத்தலத்தையும் கண்காணிக்கவும், ஆரோனின் வழிமரபில் வந்த அவர்கள் சகோதரரான குருக்களுக்கு ஆண்டவரின் இல்லப் பணியில் உதவி செய்யவும் வேண்டும். [* எண் 3:5-9.. ] [PE]