1. [PS] [QS][SS] நான் மானிடரின் மொழிகளிலும்[SE][SS] வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்[SE][SS] அன்பு எனக்கில்லையேல்[SE][SS] ஒலிக்கும் வெண்கலமும்[SE][SS] ஓசையிடும் தாளமும் போலாவேன்.[SE][QE]
2. [QS][SS] இறைவாக்கு உரைக்கும் ஆற்றல்[SE][SS] எனக்கு இருப்பினும், மறைபொருள்கள்[SE][SS] அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், [BR] அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,[SE][SS] மலைகளை இடம்பெயரச்[SE][SS] செய்யும் அளவுக்கு நிறைந்த[SE][SS] நம்பிக்கை கொண்டிருப்பினும்[SE][SS] என்னிடம் அன்பு இல்லையேல்[SE][SS] நான் ஒன்றுமில்லை. [* மத் 17:20; 21:21; மாற் 11:23. ] [SE][QE]
3. [QS][SS] என் உடைமையை எல்லாம்[SE][SS] நான் வாரி வழங்கினாலும்[SE][SS] என் உடலையே[SE][SS] சுட்டெரிப்பதற்கென* ஒப்புவித்தாலும்[SE][SS] என்னிடம் அன்பு இல்லையேல்[SE][SS] எனக்குப் பயன் ஒன்றுமில்லை. [* ‘பெருமையடைவதற்கென’ எனப் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகின்றது.[QE]. ] [SE][QE]
4. [QS][SS] அன்பு பொறுமையுள்ளது;[SE][SS] நன்மை செய்யும்;[SE][SS] பொறாமைப்படாது;[SE][SS] தற்புகழ்ச்சி கொள்ளாது;[SE][SS] இறுமாப்பு அடையாது.[SE][QE]
5. [QS][SS] அன்பு இழிவானதைச் செய்யாது;[SE][SS] தன்னலம் நாடாது;[SE][SS] எரிச்சலுக்கு இடம் கொடாது;[SE][SS] தீங்கு நினையாது.[SE][QE]
6. [QS][SS] அன்பு தீவினையில் மகிழ்வுறாது;[SE][SS] மாறாக உண்மையில் அது மகிழும்.[SE][QE]
7. [QS][SS] அன்பு அனைத்தையும்[SE][SS] பொறுத்துக் கொள்ளும்;[SE][SS] அனைத்தையும் நம்பும்;[SE][SS] அனைத்தையும்[SE][SS] எதிர்நோக்கி இருக்கும்;[SE][SS] அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.[SE][QE]
8. [QS][SS] இறைவாக்கு உரைக்கும் கொடை[SE][SS] ஒழிந்துபோம்;[SE][SS] பரவசப்பேச்சு பேசும் கொடையும்[SE][SS] ஓய்ந்துபோம்;[SE][SS] அறிவும் அழிந்துபோம்.[SE][SS] ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது.[SE][QE]
9. [QS][SS] ஏனெனில், நமது அறிவு[SE][SS] அரைகுறையானது;[SE][SS] நாம் அரைகுறையாகவே[SE][SS] இறைவாக்கும் உரைக்கிறோம்.[SE][QE]
10. [QS][SS] நிறைவானது வரும் போது[SE][SS] அரைகுறையானது ஒழிந்துபோம்.[SE][QE]
11. [QS][SS] நான் குழந்தையாய் இருந்தபோது[SE][SS] குழந்தையைப்போலப் பேசினேன்;[SE][SS] குழந்தையின் மனநிலையைப்[SE][SS] பெற்றிருந்தேன்;[SE][SS] குழந்தையைப்போல எண்ணினேன்.[SE][SS] நான் பெரியவனானபோது[SE][SS] குழந்தைக்குரியவற்றை[SE][SS] அறவே விட்டுவிட்டேன்.[SE][QE]
12. [QS][SS] ஏனெனில், இப்போது நாம்[SE][SS] கண்ணாடியில் காண்பதுபோல்[SE][SS] மங்கலாய்க் காண்கிறோம்;[SE][SS] ஆனால் அப்போது[SE][SS] நாம் நேரில் காண்போம்.[SE][SS] இப்போது நான்[SE][SS] அரைகுறையாய் அறிகிறேன்;[SE][SS] அப்போது கடவுள்[SE][SS] என்னை அறிந்துள்ளதுபோல்[SE][SS] முழுமையாய் அறிவேன். [* 1 யோவா 3:2. ] [SE][QE]
13. [QS][SS] ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு,[SE][SS] அன்பு ஆகிய மூன்றுமே[SE][SS] நிலையாய் உள்ளன.[SE][SS] இவற்றுள் அன்பே தலைசிறந்தது.[SE][PE]