தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
வெளிபடுத்தல்

வெளிபடுத்தல் அதிகாரம் 20

1 பின் வானதூதர் ஒருவர் விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். பாதாளத்தின் திறவு கோலும் பெரியதொரு சங்கிலியும் அவர் கையில் இருந்தன. 2 ஆதியில் தோன்றிய பாம்பாகிய பறவைநாகத்தை அவர் பிடித்தார். அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அப்பாம்பைப் பிடித்து, ஆயிரம் ஆண்டளவு கட்டிவைத்தார். 3 பின் அதைப் பாதாளத்தில் எறிந்து, குழியை அடைத்து, அதற்கு முத்திரையிட்டு, ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை அது நாடுகளை வஞ்சிக்காமல் தடுத்தார். அதன்பின் சற்று நேரம் அது அவிழ்த்து விடப்படும் 4 பின்பு, நான் அரியணைகளைக் கண்டேன். அவற்றின்மீது சிலர் வீற்றிருந்தனர். தீர்ப்பிடும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இயேசுவுக்குச் சான்று பகர்ந்து கடவுளது வார்த்தையை அறிவித்ததற்காகத் தலை வெட்டுண்டவர்களின் ஆண்மாக்களையும் கண்டேன். அவர்கள் அவ்விலங்கையோ அதன் சிலையையோ தொழவில்லை. அதனுடைய அடையாளத்தை நெற்றியிலோ கையிலோ பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மீண்டும் உயிர்பெற்று, கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டு ஆட்சிபுரிந்தார்கள். 5 இதுவே முதல் உயிர்த்தெழுதல். அவ்வாயிரம் ஆண்டுகள் முடியும்வரை எஞ்சியோர் உயிர்பெற்று வரவில்லை. 6 இந்த முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவோன் பேறுபெற்றவன். பரிசுத்தன்! இரண்டாவது சாவு அவர்கள்மேல் அதிகாரம் செலுத்தாது. அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிசெய்யும் குருக்களாக இருப்பார்கள்; அவரோடு ஆயிரம் ஆண்டுகள் அரசு புரிவார்கள். 7 அவ்வாயிரம் ஆண்டுகள் முடிந்தபின், சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவான். 8 அவன் மண்ணகத்தின் நான்கு திசைகளிலும் உள்ள கோகு, மாகோகு என்னும் நாடுகளை வஞ்சித்து, போருக்கென அவர்களை ஒன்றுசோர்க்கச் செல்வான். அவர்களது எண்ணிக்கை கடல் மணல்போல் இருக்கும். 9 மண்ணுலகெங்கும் அவர்கள் பரவிச்சென்றர்கள். இறைமக்களின் பாசறையையும் இறைவனின் அன்புக்குகந்த நகரத்தையும் வளைத்துக் கொண்டார்கள். ஆனால் வானத்திலிருந்து நெருப்பு விழுந்து அவர்களை விழுங்கிவிட்டது. 10 பின் அவர்களை வஞ்சித்த அலகை கந்தக நெருப்புக் கடலில் எறியப்பட்டது. அக்கடலில்தான் விலங்கும், போலித் தீர்க்கதரிசியும் உள்ளனர். அவர்கள் இரவும் பகலும் என்றென்றும் வேதனைக்குள்ளாவார்கள். 11 பின் வெண்மையான பெரியதோர் அரியணையையும் அதில் வீற்றிருப்பவரையும் கண்டேன். அவருடைய முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயின. 12 இறந்திருந்த சிறியோர், பெரியோர் அனைவரும் அரியணை முன் நிற்கக் கண்டேன். அப்போது ஏட்டுச் சுருள்கள் பிரிக்கப்பட்டன. வேறொரு சுருளும் பிரிக்கப்பட்டது. அது வாழ்வு நூல் இறந்தவர்களின் செயல்கள் அச்சுருள்களில் குறித்திருந்தன. அச்செயல்களுக்கேற்ப அவர்களுக்குத் தீர்ப்புக் கூறப்பட்டது. 13 கடல் தன்னகத்திருந்த இறந்தோரை வெளியேற்றியது. சாவும் பாதாளமும் தம்முள் அடைத்திருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் அனைவரும் செயல்களுக்கேற்ற தீர்ப்பைப் பெற்றனர். 14 சாவும் பாதாளமும் நெருப்புக் கடலில் எறியப்பட்டன. இந்நெருப்புக் கடலே இரண்டாவது சாவு 15 வாழ்வு நூலில் பெயர் எழுதப்பட்டிராத எவனும் இந்நெருப்புக் கடலில் எறியப்பட்டான்.
1 பின் வானதூதர் ஒருவர் விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். பாதாளத்தின் திறவு கோலும் பெரியதொரு சங்கிலியும் அவர் கையில் இருந்தன. .::. 2 ஆதியில் தோன்றிய பாம்பாகிய பறவைநாகத்தை அவர் பிடித்தார். அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படும் அப்பாம்பைப் பிடித்து, ஆயிரம் ஆண்டளவு கட்டிவைத்தார். .::. 3 பின் அதைப் பாதாளத்தில் எறிந்து, குழியை அடைத்து, அதற்கு முத்திரையிட்டு, ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை அது நாடுகளை வஞ்சிக்காமல் தடுத்தார். அதன்பின் சற்று நேரம் அது அவிழ்த்து விடப்படும் .::. 4 பின்பு, நான் அரியணைகளைக் கண்டேன். அவற்றின்மீது சிலர் வீற்றிருந்தனர். தீர்ப்பிடும் அதிகாரம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இயேசுவுக்குச் சான்று பகர்ந்து கடவுளது வார்த்தையை அறிவித்ததற்காகத் தலை வெட்டுண்டவர்களின் ஆண்மாக்களையும் கண்டேன். அவர்கள் அவ்விலங்கையோ அதன் சிலையையோ தொழவில்லை. அதனுடைய அடையாளத்தை நெற்றியிலோ கையிலோ பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் மீண்டும் உயிர்பெற்று, கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டு ஆட்சிபுரிந்தார்கள். .::. 5 இதுவே முதல் உயிர்த்தெழுதல். அவ்வாயிரம் ஆண்டுகள் முடியும்வரை எஞ்சியோர் உயிர்பெற்று வரவில்லை. .::. 6 இந்த முதல் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுவோன் பேறுபெற்றவன். பரிசுத்தன்! இரண்டாவது சாவு அவர்கள்மேல் அதிகாரம் செலுத்தாது. அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிசெய்யும் குருக்களாக இருப்பார்கள்; அவரோடு ஆயிரம் ஆண்டுகள் அரசு புரிவார்கள். .::. 7 அவ்வாயிரம் ஆண்டுகள் முடிந்தபின், சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவான். .::. 8 அவன் மண்ணகத்தின் நான்கு திசைகளிலும் உள்ள கோகு, மாகோகு என்னும் நாடுகளை வஞ்சித்து, போருக்கென அவர்களை ஒன்றுசோர்க்கச் செல்வான். அவர்களது எண்ணிக்கை கடல் மணல்போல் இருக்கும். .::. 9 மண்ணுலகெங்கும் அவர்கள் பரவிச்சென்றர்கள். இறைமக்களின் பாசறையையும் இறைவனின் அன்புக்குகந்த நகரத்தையும் வளைத்துக் கொண்டார்கள். ஆனால் வானத்திலிருந்து நெருப்பு விழுந்து அவர்களை விழுங்கிவிட்டது. .::. 10 பின் அவர்களை வஞ்சித்த அலகை கந்தக நெருப்புக் கடலில் எறியப்பட்டது. அக்கடலில்தான் விலங்கும், போலித் தீர்க்கதரிசியும் உள்ளனர். அவர்கள் இரவும் பகலும் என்றென்றும் வேதனைக்குள்ளாவார்கள். .::. 11 பின் வெண்மையான பெரியதோர் அரியணையையும் அதில் வீற்றிருப்பவரையும் கண்டேன். அவருடைய முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயின. .::. 12 இறந்திருந்த சிறியோர், பெரியோர் அனைவரும் அரியணை முன் நிற்கக் கண்டேன். அப்போது ஏட்டுச் சுருள்கள் பிரிக்கப்பட்டன. வேறொரு சுருளும் பிரிக்கப்பட்டது. அது வாழ்வு நூல் இறந்தவர்களின் செயல்கள் அச்சுருள்களில் குறித்திருந்தன. அச்செயல்களுக்கேற்ப அவர்களுக்குத் தீர்ப்புக் கூறப்பட்டது. .::. 13 கடல் தன்னகத்திருந்த இறந்தோரை வெளியேற்றியது. சாவும் பாதாளமும் தம்முள் அடைத்திருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் அனைவரும் செயல்களுக்கேற்ற தீர்ப்பைப் பெற்றனர். .::. 14 சாவும் பாதாளமும் நெருப்புக் கடலில் எறியப்பட்டன. இந்நெருப்புக் கடலே இரண்டாவது சாவு .::. 15 வாழ்வு நூலில் பெயர் எழுதப்பட்டிராத எவனும் இந்நெருப்புக் கடலில் எறியப்பட்டான்.
  • வெளிபடுத்தல் அதிகாரம் 1  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 2  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 3  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 4  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 5  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 6  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 7  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 8  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 9  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 10  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 11  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 12  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 13  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 14  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 15  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 16  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 17  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 18  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 19  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 20  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 21  
  • வெளிபடுத்தல் அதிகாரம் 22  
×

Alert

×

Tamil Letters Keypad References