தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
மத்தேயு

மத்தேயு அதிகாரம் 3

1 அக்காலத்திலே, ஸ்நாபக அருளப்பர் யூதேயாவின் பாலைவனத்தில் தோன்றி, 2 மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்து வந்தார். 3 இவரைப்பற்றியே, ' ஆண்டவரது வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள், எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது ' என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளார். 4 இந்த அருளப்பர் உடுத்தியது, ஒட்டக மயிராடை; இடையில் கட்டியது, வார்க்கச்சை; உண்டது, வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும். 5 யெருசலேமிலும் யூதேயா முழுவதிலும், யோர்தானை அடுத்த நாடெங்கும் வாழ்ந்தோர் அவரிடம் போய், 6 தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றுவந்தனர். 7 பரிசேயர், சதுசேயருள் பலர் நம்மிடம் ஞானஸ்நானம் பெற வருவதைக் கண்டு, அவர்களைப் பார்த்து, "விரியன்பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள, உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவன் யார் ? 8 எனவே, மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள். 9 ' ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை ' என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம். இக் கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன். 10 ஏற்கனவே அடி மரத்தில் கோடரி வைத்தாயிற்று. நற்கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, தீயில் போடப்படும். 11 நீங்கள் மனந்திரும்பியதைக் காட்ட உங்களுக்கு நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருபவரோ என்னைவிட வல்லவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12 அவர், சுளகைக் கையில் கொண்டு, தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார்" என்றார். 13 பின்னர், இயேசு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். 14 அருளப்பரோ, "நானே உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க, நீரா என்னிடம் வருவது ?" என்று சொல்லி அவரைத் தடுக்கப்பார்த்தார். 15 அதற்கு இயேசு, "இப்போதைக்கு விட்டுவிடும். ஏனெனில், இவ்வாறு நாம் நியமங்களெல்லாம் நிறைவேற்றுவது தகுதியே" என்று பதில் உரைக்க, அவரைத் தடைசெய்யாமல் விட்டுவிட்டார். 16 ஞானஸ்நானம் பெற்றவுடன் இயேசு தண்ணீரை விட்டு வெளியேறினார். அப்போது வானம் திறக்க, கடவுளின் ஆவியானவர் புறாவைப்போலத் தம்மீது இறங்கிவருவதைக் கண்டார். 17 அப்போது வானிலிருந்து, "இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று ஒரு குரலொலி கேட்டது.
1 அக்காலத்திலே, ஸ்நாபக அருளப்பர் யூதேயாவின் பாலைவனத்தில் தோன்றி, .::. 2 மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்து வந்தார். .::. 3 இவரைப்பற்றியே, ' ஆண்டவரது வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள், எனப் பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது ' என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறியுள்ளார். .::. 4 இந்த அருளப்பர் உடுத்தியது, ஒட்டக மயிராடை; இடையில் கட்டியது, வார்க்கச்சை; உண்டது, வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும். .::. 5 யெருசலேமிலும் யூதேயா முழுவதிலும், யோர்தானை அடுத்த நாடெங்கும் வாழ்ந்தோர் அவரிடம் போய், .::. 6 தங்கள் பாவங்களை வெளியிட்டு, யோர்தான் ஆற்றில் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றுவந்தனர். .::. 7 பரிசேயர், சதுசேயருள் பலர் நம்மிடம் ஞானஸ்நானம் பெற வருவதைக் கண்டு, அவர்களைப் பார்த்து, "விரியன்பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள, உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவன் யார் ? .::. 8 எனவே, மனந்திரும்பியவர்க்கேற்ற செயலைச் செய்து காட்டுங்கள். .::. 9 ' ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை ' என்று சொல்லிக்கொள்ளத் துணியவேண்டாம். இக் கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன். .::. 10 ஏற்கனவே அடி மரத்தில் கோடரி வைத்தாயிற்று. நற்கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, தீயில் போடப்படும். .::. 11 நீங்கள் மனந்திரும்பியதைக் காட்ட உங்களுக்கு நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். எனக்குப்பின் வருபவரோ என்னைவிட வல்லவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்ல நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். .::. 12 அவர், சுளகைக் கையில் கொண்டு, தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார்" என்றார். .::. 13 பின்னர், இயேசு அருளப்பரிடம் ஞானஸ்நானம் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். .::. 14 அருளப்பரோ, "நானே உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டியிருக்க, நீரா என்னிடம் வருவது ?" என்று சொல்லி அவரைத் தடுக்கப்பார்த்தார். .::. 15 அதற்கு இயேசு, "இப்போதைக்கு விட்டுவிடும். ஏனெனில், இவ்வாறு நாம் நியமங்களெல்லாம் நிறைவேற்றுவது தகுதியே" என்று பதில் உரைக்க, அவரைத் தடைசெய்யாமல் விட்டுவிட்டார். .::. 16 ஞானஸ்நானம் பெற்றவுடன் இயேசு தண்ணீரை விட்டு வெளியேறினார். அப்போது வானம் திறக்க, கடவுளின் ஆவியானவர் புறாவைப்போலத் தம்மீது இறங்கிவருவதைக் கண்டார். .::. 17 அப்போது வானிலிருந்து, "இவரே என் அன்பார்ந்த மகன், இவரிடம் நான் பூரிப்படைகிறேன்" என்று ஒரு குரலொலி கேட்டது.
  • மத்தேயு அதிகாரம் 1  
  • மத்தேயு அதிகாரம் 2  
  • மத்தேயு அதிகாரம் 3  
  • மத்தேயு அதிகாரம் 4  
  • மத்தேயு அதிகாரம் 5  
  • மத்தேயு அதிகாரம் 6  
  • மத்தேயு அதிகாரம் 7  
  • மத்தேயு அதிகாரம் 8  
  • மத்தேயு அதிகாரம் 9  
  • மத்தேயு அதிகாரம் 10  
  • மத்தேயு அதிகாரம் 11  
  • மத்தேயு அதிகாரம் 12  
  • மத்தேயு அதிகாரம் 13  
  • மத்தேயு அதிகாரம் 14  
  • மத்தேயு அதிகாரம் 15  
  • மத்தேயு அதிகாரம் 16  
  • மத்தேயு அதிகாரம் 17  
  • மத்தேயு அதிகாரம் 18  
  • மத்தேயு அதிகாரம் 19  
  • மத்தேயு அதிகாரம் 20  
  • மத்தேயு அதிகாரம் 21  
  • மத்தேயு அதிகாரம் 22  
  • மத்தேயு அதிகாரம் 23  
  • மத்தேயு அதிகாரம் 24  
  • மத்தேயு அதிகாரம் 25  
  • மத்தேயு அதிகாரம் 26  
  • மத்தேயு அதிகாரம் 27  
  • மத்தேயு அதிகாரம் 28  
×

Alert

×

Tamil Letters Keypad References