தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
மல்கியா

மல்கியா அதிகாரம் 4

1 இதோ அந்த நாள் சூளைபோல் எரிந்துகொண்டு வரும்; அப்போது ஆணவங்கொண்டவர், கொடியவர் அனைவரும் அதில் போடப்பட்ட வைக்கோலாவர். அப்படி வருகின்ற அந்த நாள், அவர்களுடைய வேரோ கிளையோ இல்லாதபடி அவர்களை முற்றிலும் சுட்டெரித்துவிடும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். 2 ஆனால் நமது திருப்பெயருக்கு அஞ்சி நடக்கும் உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்; தன் இறக்கைகளில் நலத்தைத் தாங்கி வருவான். நீங்களும் தொழுவத்திலிருந்து துள்ளியோடும் கன்றைப்போலத் துள்ளியோடுவீர்கள். 3 நாம் செயலாற்றப்போகும் அந்த நாளில், கொடியவர்களை நீங்கள் கால்களால் மிதித்துத் தள்ளுவீர்கள்; அவர்கள் உங்கள் உள்ளங்காலடிகளில் சாம்பல் போலக் கிடப்பார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். 4 ஓரேப் மலையில் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் நம் ஊழியனாகிய மோயீசன் வாயிலாய்க் கட்டளையிட்ட திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் முறைமைகளையும் நினைவுகூருங்கள் 5 இதோ, பெரியதும் நடுக்கத்துக்குரியதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாசை உங்களிடம் அனுப்புவோம். 6 நாம் வந்து உலகத்தைச் சாபனையால் தண்டிக்காதபடி, தந்தையரின் உள்ளங்களை அவர்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் உள்ளங்களை அவர்கள் தந்தையரிடமும் அவர் திருப்பிவிடுவார்."
1 இதோ அந்த நாள் சூளைபோல் எரிந்துகொண்டு வரும்; அப்போது ஆணவங்கொண்டவர், கொடியவர் அனைவரும் அதில் போடப்பட்ட வைக்கோலாவர். அப்படி வருகின்ற அந்த நாள், அவர்களுடைய வேரோ கிளையோ இல்லாதபடி அவர்களை முற்றிலும் சுட்டெரித்துவிடும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். .::. 2 ஆனால் நமது திருப்பெயருக்கு அஞ்சி நடக்கும் உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்; தன் இறக்கைகளில் நலத்தைத் தாங்கி வருவான். நீங்களும் தொழுவத்திலிருந்து துள்ளியோடும் கன்றைப்போலத் துள்ளியோடுவீர்கள். .::. 3 நாம் செயலாற்றப்போகும் அந்த நாளில், கொடியவர்களை நீங்கள் கால்களால் மிதித்துத் தள்ளுவீர்கள்; அவர்கள் உங்கள் உள்ளங்காலடிகளில் சாம்பல் போலக் கிடப்பார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். .::. 4 ஓரேப் மலையில் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் நம் ஊழியனாகிய மோயீசன் வாயிலாய்க் கட்டளையிட்ட திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் முறைமைகளையும் நினைவுகூருங்கள் .::. 5 இதோ, பெரியதும் நடுக்கத்துக்குரியதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாசை உங்களிடம் அனுப்புவோம். .::. 6 நாம் வந்து உலகத்தைச் சாபனையால் தண்டிக்காதபடி, தந்தையரின் உள்ளங்களை அவர்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் உள்ளங்களை அவர்கள் தந்தையரிடமும் அவர் திருப்பிவிடுவார்."
  • மல்கியா அதிகாரம் 1  
  • மல்கியா அதிகாரம் 2  
  • மல்கியா அதிகாரம் 3  
  • மல்கியா அதிகாரம் 4  
×

Alert

×

Tamil Letters Keypad References