தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லூக்கா

பதிவுகள்

லூக்கா அதிகாரம் 20

1 ஒருநாள் அவர் கோயிலில் மக்களுக்குப் போதித்து நற்செய்தியை அறிவிக்கும்போது, தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பர்களோடு அங்கு வர நேர்ந்தது. 2 "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர்? அல்லது உமக்கு இந்த அதிகாரம் கொடுத்தவர் யார் என்று எங்களுக்குச் சொல்லும்" என அவரைக் கேட்டனர். 3 அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். 4 அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா? மனிதரிடமிருந்து வந்ததா?" என்று கேட்டார். 5 அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதாவது: "' வானகத்திலிருந்து வந்தது' என்போமாயின், 'ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார். 6 'மனிதரிடமிருந்து வந்தது' ¢எனபோமாயின், மக்கள் அனைவரும் நம்மைக் கல்லால் எறிந்து கொல்வர். ஏனெனில், அருளப்பரை இறைவாக்கினர் என்று நம்பியிருக்கின்றனர்," 7 எனவே, அவருக்கு மறுமொழியாக, "எங்கிருந்து வந்ததெனத் தெரியாது" என்றார்கள். 8 அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார். 9 பின்னும் அவர் இவ்வுவமையை மக்களுக்குச் சொல்லத் தொடங்கினார்: "ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிட்டு நீண்டகாலம் வெளியூர் சென்றிருந்தான். 10 பருவகாலத்தில் தோட்டத்துப் பலனைக் குடியானவர்கள் தனக்குக் கொடுக்கும்படி, ஊழியன் ஒருவனை அனுப்பினான். குடியானவரோ அவனை அடித்து வெறுங்கையாய் அனுப்பிவிட்டனர். 11 மீண்டும் ஓர் ஊழியனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து இழிவுபடுத்தி வெறுங்கையாய் அனுப்பினார்கள். 12 மூன்றாம் முறையாக ஒருவனை அனுப்பினான். அவனையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினார்கள். 13 திராட்சைத் தோட்டத்துக்குரியவன், 'இனி என்ன செய்வது? என் அன்பார்ந்த மகனை அனுப்புவேன். அவனையாவது அவர்கள் மதிக்கக்கூடும்' என்றான். 14 குடியானவர்கள் அவனைக் கண்டதும், 'இவனே சொத்துக்குரியவன். சொத்து நம்முடையதாகும்படி இவனைக் கொன்றுபோடுவோம்' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு, 15 அவனைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றார்கள். "அப்படியானால், தோட்டத்துக்குரியவன் அவர்களை என்ன செய்வான்? 16 அவன் வந்து, அக்குடியானவர்களை ஒழித்து, தோட்டத்தை வேறு ஆட்களுக்கு விடுவான்." இதைக் கேட்ட அவர்கள், "ஐயோ, வேண்டாமே! ', என்றனர். 17 அவர் அவர்களை நோக்கி, "கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது! ' என்று எழுதியிருக்கிறதே, அதன் பொருள் என்ன? 18 அக்கல்லின் மேல் விழுபவன் எவனும் நொறுங்கிப்போவான். அது எவன்மேல் விழுமோ, அவன் தவிடுபொடியாவான்." என்றார். 19 தங்களைக் குறித்தே இவ்வுவமையை அவர் கூறினார் என்று உணர்ந்து, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அப்போதே அவரைப் பிடிக்க வழிதேடினர். ஆனால் பொது மக்களுக்கு அஞ்சினர். 20 ஆகையால் அவர்கள் சமயம்பார்த்து வேவுகாரர்களை அனுப்பினார்கள். இவர்கள் ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு அவரைக் கையளிக்கும்படி, நேர்மையானவர்களைப்போல நடித்து, அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கப் பார்த்தனர். 21 " போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் சரியே. முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும். 22 செசாருக்கு நாங்கள் வரிகொடுப்பது முறையா, இல்லையா?" என்று அவரைக் கேட்டனர். 23 அவர் அவர்களுடைய சூழ்ச்சியைக் கண்டுகொண்டு, 24 "ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். அதிலுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்றார். "செசாருடையவை" என்றனர். 25 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "அப்படியானால், செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று சொன்னார். 26 மக்கள் முன்னிலையில் அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க முடியாமல், அவருடைய மறுமொழியைக் கேட்டு வியந்து பேசாதிருந்தனர். 27 பின்னர், உயிர்த்தெழுதல் இல்லை என்று கூறும் சதுசேயருள் சிலர் அவரை அணுகி, 28 "போதகரே, மனைவியுள்ள ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார். 29 இவ்வாறிருக்க, சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறின்றி இறந்தான். 30 இரண்டாம், மூன்றாம் சகோதரரும் அவளை மணந்தனர். 31 இவ்வறே எழுவரும் பிள்ளையின்றி இறந்தனர். 32 இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள். 33 உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்? எழுவரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தனரே! " என்றனர். 34 இயேசு அவர்களிடம், "இவ்வுலகிள் மக்கள் பெண்கொண்டும் கொடுத்தும் வருகின்றனர். 35 மறு உலகையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலையும் அடைவதற்குத் தகுதியுள்ளவராக எண்ணப்படுவோர் அங்கே பெண்கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. 36 ஏனெனில், இனி, அவர்கள் இறக்கமாட்டார்கள். வானதூதருக்கு ஒப்பாயிருப்பார்கள். மேலும் உயிர்த்த மக்களாயிருப்பதால் கடவுளின் மக்களாயும் இருப்பார்கள். 37 இறந்தோர் உயிர்த்தெழுவர் என்பதை, மோயீசனும் முட்செடியைப்பற்றிய பகுதியில் வெளிப்படுத்தினார். அதில் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று குறிப்பிடுகிறார். 38 அப்படியெனில், அவர் வாழ்வோரின் கடவுளேயன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். ஏனெனில், அவருக்கு எல்லாரும் உயிருள்ளவர்களே" என்றார். 39 அதற்கு மறைநூல் அறிஞர் சிலர், "போதகரே, நன்றாய்ச் சொன்னீர்" என்றனர். 40 இதற்குப் பின்னர் அவரை எதுவும் கேட்க அவர்கள் துணியவில்லை. 41 மேலும் அவர் அவர்களிடம், "மெசியாவைத் தாவீதின் மகன் என்று எப்படிக் கூறலாம்? 42 ஏனெனில், 'ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது, 43 நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே சங்கீத ஆகமத்தில் சொல்லுகிறார். 44 ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாகமட்டும் இருப்பது எப்படி?" என்று வினவினார். 45 மக்கள் எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அவர் தம் சீடரிடம், 46 "மறைநூல் அறிஞர்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாட விரும்புகிறார்கள். பொது இடங்களில் வணக்கத்தையும், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், விருந்துகளில் முதல் இடங்களையும் பெற ஆசிக்கிறார்கள். 47 கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்" என்றார்.
1 ஒருநாள் அவர் கோயிலில் மக்களுக்குப் போதித்து நற்செய்தியை அறிவிக்கும்போது, தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பர்களோடு அங்கு வர நேர்ந்தது. .::. 2 "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர்? அல்லது உமக்கு இந்த அதிகாரம் கொடுத்தவர் யார் என்று எங்களுக்குச் சொல்லும்" என அவரைக் கேட்டனர். .::. 3 அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள். .::. 4 அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா? மனிதரிடமிருந்து வந்ததா?" என்று கேட்டார். .::. 5 அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதாவது: "' வானகத்திலிருந்து வந்தது' என்போமாயின், 'ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார். .::. 6 'மனிதரிடமிருந்து வந்தது' ¢எனபோமாயின், மக்கள் அனைவரும் நம்மைக் கல்லால் எறிந்து கொல்வர். ஏனெனில், அருளப்பரை இறைவாக்கினர் என்று நம்பியிருக்கின்றனர்," .::. 7 எனவே, அவருக்கு மறுமொழியாக, "எங்கிருந்து வந்ததெனத் தெரியாது" என்றார்கள். .::. 8 அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார். .::. 9 பின்னும் அவர் இவ்வுவமையை மக்களுக்குச் சொல்லத் தொடங்கினார்: "ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிட்டு நீண்டகாலம் வெளியூர் சென்றிருந்தான். .::. 10 பருவகாலத்தில் தோட்டத்துப் பலனைக் குடியானவர்கள் தனக்குக் கொடுக்கும்படி, ஊழியன் ஒருவனை அனுப்பினான். குடியானவரோ அவனை அடித்து வெறுங்கையாய் அனுப்பிவிட்டனர். .::. 11 மீண்டும் ஓர் ஊழியனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து இழிவுபடுத்தி வெறுங்கையாய் அனுப்பினார்கள். .::. 12 மூன்றாம் முறையாக ஒருவனை அனுப்பினான். அவனையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினார்கள். .::. 13 திராட்சைத் தோட்டத்துக்குரியவன், 'இனி என்ன செய்வது? என் அன்பார்ந்த மகனை அனுப்புவேன். அவனையாவது அவர்கள் மதிக்கக்கூடும்' என்றான். .::. 14 குடியானவர்கள் அவனைக் கண்டதும், 'இவனே சொத்துக்குரியவன். சொத்து நம்முடையதாகும்படி இவனைக் கொன்றுபோடுவோம்' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு, .::. 15 அவனைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றார்கள். "அப்படியானால், தோட்டத்துக்குரியவன் அவர்களை என்ன செய்வான்? .::. 16 அவன் வந்து, அக்குடியானவர்களை ஒழித்து, தோட்டத்தை வேறு ஆட்களுக்கு விடுவான்." இதைக் கேட்ட அவர்கள், "ஐயோ, வேண்டாமே! ', என்றனர். .::. 17 அவர் அவர்களை நோக்கி, "கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது! ' என்று எழுதியிருக்கிறதே, அதன் பொருள் என்ன? .::. 18 அக்கல்லின் மேல் விழுபவன் எவனும் நொறுங்கிப்போவான். அது எவன்மேல் விழுமோ, அவன் தவிடுபொடியாவான்." என்றார். .::. 19 தங்களைக் குறித்தே இவ்வுவமையை அவர் கூறினார் என்று உணர்ந்து, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அப்போதே அவரைப் பிடிக்க வழிதேடினர். ஆனால் பொது மக்களுக்கு அஞ்சினர். .::. 20 ஆகையால் அவர்கள் சமயம்பார்த்து வேவுகாரர்களை அனுப்பினார்கள். இவர்கள் ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு அவரைக் கையளிக்கும்படி, நேர்மையானவர்களைப்போல நடித்து, அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கப் பார்த்தனர். .::. 21 " போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் சரியே. முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும். .::. 22 செசாருக்கு நாங்கள் வரிகொடுப்பது முறையா, இல்லையா?" என்று அவரைக் கேட்டனர். .::. 23 அவர் அவர்களுடைய சூழ்ச்சியைக் கண்டுகொண்டு, .::. 24 "ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். அதிலுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்றார். "செசாருடையவை" என்றனர். .::. 25 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "அப்படியானால், செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று சொன்னார். .::. 26 மக்கள் முன்னிலையில் அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க முடியாமல், அவருடைய மறுமொழியைக் கேட்டு வியந்து பேசாதிருந்தனர். .::. 27 பின்னர், உயிர்த்தெழுதல் இல்லை என்று கூறும் சதுசேயருள் சிலர் அவரை அணுகி, .::. 28 "போதகரே, மனைவியுள்ள ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார். .::. 29 இவ்வாறிருக்க, சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறின்றி இறந்தான். .::. 30 இரண்டாம், மூன்றாம் சகோதரரும் அவளை மணந்தனர். .::. 31 இவ்வறே எழுவரும் பிள்ளையின்றி இறந்தனர். .::. 32 இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள். .::. 33 உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்? எழுவரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தனரே! " என்றனர். .::. 34 இயேசு அவர்களிடம், "இவ்வுலகிள் மக்கள் பெண்கொண்டும் கொடுத்தும் வருகின்றனர். .::. 35 மறு உலகையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலையும் அடைவதற்குத் தகுதியுள்ளவராக எண்ணப்படுவோர் அங்கே பெண்கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. .::. 36 ஏனெனில், இனி, அவர்கள் இறக்கமாட்டார்கள். வானதூதருக்கு ஒப்பாயிருப்பார்கள். மேலும் உயிர்த்த மக்களாயிருப்பதால் கடவுளின் மக்களாயும் இருப்பார்கள். .::. 37 இறந்தோர் உயிர்த்தெழுவர் என்பதை, மோயீசனும் முட்செடியைப்பற்றிய பகுதியில் வெளிப்படுத்தினார். அதில் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று குறிப்பிடுகிறார். .::. 38 அப்படியெனில், அவர் வாழ்வோரின் கடவுளேயன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். ஏனெனில், அவருக்கு எல்லாரும் உயிருள்ளவர்களே" என்றார். .::. 39 அதற்கு மறைநூல் அறிஞர் சிலர், "போதகரே, நன்றாய்ச் சொன்னீர்" என்றனர். .::. 40 இதற்குப் பின்னர் அவரை எதுவும் கேட்க அவர்கள் துணியவில்லை. .::. 41 மேலும் அவர் அவர்களிடம், "மெசியாவைத் தாவீதின் மகன் என்று எப்படிக் கூறலாம்? .::. 42 ஏனெனில், 'ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது, .::. 43 நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே சங்கீத ஆகமத்தில் சொல்லுகிறார். .::. 44 ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாகமட்டும் இருப்பது எப்படி?" என்று வினவினார். .::. 45 மக்கள் எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அவர் தம் சீடரிடம், .::. 46 "மறைநூல் அறிஞர்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாட விரும்புகிறார்கள். பொது இடங்களில் வணக்கத்தையும், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், விருந்துகளில் முதல் இடங்களையும் பெற ஆசிக்கிறார்கள். .::. 47 கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்" என்றார்.
  • லூக்கா அதிகாரம் 1  
  • லூக்கா அதிகாரம் 2  
  • லூக்கா அதிகாரம் 3  
  • லூக்கா அதிகாரம் 4  
  • லூக்கா அதிகாரம் 5  
  • லூக்கா அதிகாரம் 6  
  • லூக்கா அதிகாரம் 7  
  • லூக்கா அதிகாரம் 8  
  • லூக்கா அதிகாரம் 9  
  • லூக்கா அதிகாரம் 10  
  • லூக்கா அதிகாரம் 11  
  • லூக்கா அதிகாரம் 12  
  • லூக்கா அதிகாரம் 13  
  • லூக்கா அதிகாரம் 14  
  • லூக்கா அதிகாரம் 15  
  • லூக்கா அதிகாரம் 16  
  • லூக்கா அதிகாரம் 17  
  • லூக்கா அதிகாரம் 18  
  • லூக்கா அதிகாரம் 19  
  • லூக்கா அதிகாரம் 20  
  • லூக்கா அதிகாரம் 21  
  • லூக்கா அதிகாரம் 22  
  • லூக்கா அதிகாரம் 23  
  • லூக்கா அதிகாரம் 24  
×

Alert

×

Tamil Letters Keypad References