தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
லேவியராகமம்

லேவியராகமம் அதிகாரம் 19

1 ஆண்டவர் மோயீசனை நோக்கி: 2 இஸ்ராயேல் மக்கள் எல்லாச் சபையாருக்கும் நீ சொல்ல வேண்டியதாவது: நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்; நாம் பரிசுத்தராய் இருப்பதால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். 3 உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் தந்தைக்கும் தாய்க்கும் அஞ்சக்கடவான். நமது ஓய்வு நாட்களை அனுசரித்து வாருங்கள். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். 4 விக்கிரகங்களை நாடவும் வேண்டாம். வார்ப்பினால் செய்யப்பட்ட தெய்வங்களை உங்களுக்கெனச் செய்து கொள்ளவும் வேண்டாம். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். 5 ஆண்டவர் ( உங்கள் மீது ) இரக்கம் கொள்ளும்படி நீங்கள் சமாதானப் பலியை அவருக்குச் செலுத்தினால், 6 அது பலியிடப்பட்ட அந்நாளிலேயே அல்லது அடுத்த நாளிலே அதை உண்பீர்கள். மூன்றாம் நாளில் எஞ்சியிருப்பதை நெருப்பில் எரிக்கக் கடவீர்கள். 7 இரண்டு நாளுக்குப் பின் அதை உண்பவன் அவமரியாதையுள்ளவனும், தெய்வ துரோகியுமாவான். 8 ஆண்டவருக்குப் பரிசுத்தமானதை மாசு படுத்தினானாகையால் அவன் தன் தீச் செயலைச் சுமந்து, தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான். 9 உன் நிலத்திலுள்ள பயிரை அறுக்கும் போது நீ பூமி மட்டத்தோடே அறுக்க வேண்டாம்; சிதறிக் கிடக்கிற கதிர்களையும் பொறுக்க வேண்டாம். 10 அவ்வண்ணமே உன் திராட்சைத் தோட்டத்தில் விழுந்து கிடக்கிற பழக்குலைகளையோ பழங்களையோ பொறுக்கவேண்டாம். அவற்றை எளியவர்களுக்கும் அந்நியருக்கும் விட்டுவிடு. நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். 11 களவு செய்யாதீர்கள். பொய் சொல்லாதீர்கள் எவனும் தன் பிறனை வஞ்சிக்கலாகாது. 12 நமது பெயரைச் சொல்லிப் பொய்யாணையிடாதே; உன் கடவுளின் பெயரை அவமரியாதை செய்யாதே நாம் ஆண்டவர். 13 உன் பிறன் மீது அபாண்டம் சொல்லாமலும், அவனை வலுவந்தத்தால் வருத்தாமலும் இருப்பாயாக. உன் கூலியாளின் வேலைக்குக் கொடுக்க வேண்டிய கூலியை வியற்காலைவரை உன்னிடம் வைத்திராதே. 14 செவிடனைத் திட்டாமலும், குருடன் முன் இடறுகள் வைக்காமலும், உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவாயாக. ஏனென்றால், நாமே ஆண்டவர். 15 அநீதி செய்யாதே. வழக்கிலே நீதிக்கு மாறாய்த் தீர்ப்பிடாதே. ஒருவன் ஏழையென்று கண்டு, அவனை அற்பமாய் எண்ணாதே. ஒருவன் பணக்காரனென்று பார்த்து முகத்தாட்சனியம் காட்டாதே. முறையோடு உன் பிறனுக்கு நீதி வழங்கு. 16 நீ மக்களுக்குள்ளே குற்றம் சாட்டிக் கோள் சொல்லித் திரியாதே. உன் பிறனுடைய இரத்தப் பழிக்கு உள்ளாகாதே நாம் ஆண்டவர். 17 உன் சகோதரனை உன் இதயத்தில் பகைக்காதே. ஆனால், அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தையாகாதபடிக்கு வெளிப்படையாய் அவனுக்கு அறிவுரை சொல். 18 பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் மக்கள் உனக்கு அநீதி செய்தாலும், மனத்தில் பொறாமை கொள்ளாதே. உனக்கு அன்பு செய்வது போல் உன் அயலானுக்கும் அன்பு செய். நாம் ஆண்டவர். 19 நமது சட்டங்களைக் கைக்கொள். உன் மிருகங்களை வேற்றின மிருகத்தோடு பொலிய விடாதே. உன் வயலில் வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே. இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே. 20 அடிமைப பெண் ஒருத்தி, ஒருவனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து மீட்கப்படாமலும், விடுதலை அடையாமலும் இருக்கையிலே, அவளோடு ஒருவன் படுத்தானென்றால் அவர்கள் இருவரும் கொலை செய்யப்படாமல் அடிக்கப்படவேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் விடுதலை பெற்றவள் அல்ல. 21 ஆனால், அவன் தன் குற்றத்துக்காகச் சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவருக்கு ஓர் ஆட்டுக்கிடாயைக் கொண்டு வருவான். 22 குரு அவனுக்காகவும் அவன் பாவத்திற்காகவும் இறைவன் திருமுன் வேண்டுவார். அப்பொழுது ஆண்டவர் அவன் மேல் இரக்கம் கொள்வார். 23 அவன் பாவமும் மன்னிக்கப்படும். நீங்கள் உங்கள் நாட்டில் புகுந்து, கனி தரும் மரங்களை நட்ட பின், அவைகளின் மிஞ்சின கிளைகளைக் கழிக்க வேண்டியதிருக்கும். அம் மரங்களின் கனிகள் உங்களுக்குத் தீட்டுள்ளவைகளாதலால், அவற்றை உண்ண வேண்டாம். 24 நான்காம் ஆண்டில் அவற்றின் கனிகளெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாக அருச்சிக்கப்பட்டு ஒதுக்கப்படும், 25 பிறகு ஐந்தாம் ஆண்டில் நீங்கள் அவற்றின் கனிகளைப் பறித்து உண்ணலாம். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். 26 யாதொன்றையும் இரத்தத்தோடு உண்ண வேண்டாம். சகுனம் பார்க்கவும் வேண்டாம்; கனவுகளுக்குப் பொருள் தேடவும் வேண்டாம். 27 உங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டவும் தாடியைச் சிரைக்கவும் வேண்டாம். 28 இழவை முன்னிட்டு உங்கள் சதையை வெட்டாமலும், உடலிலே எவ்விதமான சித்திரத்தையேனும் அடையாளத்தையேனும் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக. நாம் ஆண்டவர். 29 நாடு அசுத்தமாகாதபடிக்கும், பாவக் கொடுமையால் நிறைந்து போகாதபடிக்கும் நீ உன் புதல்வியை வேசித்தனத்திற்கு உட்படுத்தாதே. 30 நமது ஓய்வு நாட்களை அனுசரித்து வாருங்கள். கடவுளின் மூலத்தானத்தைக் குறித்துப் பயபக்தியாய் இருக்க வேண்டும். நாம் ஆண்டவர். 31 நீங்கள் தீட்டுப்படாதபடிக்கும் பில்லிசூனியக்காரரை நாடவும் குறி சொல்லும் சகுனக்காரரிடம் யாதொன்றைக் கேட்கவும் வேண்டாம். 32 நரை கொண்டவன் வரக்கண்டால் நீ எழுந்திரு. முதிர் வயதுள்ளவனை மதித்து நட. உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சியிரு. நாம் ஆண்டவர். 33 யாரேனும் ஓர் அந்நியன் உங்கள் ஊரில் உங்களோடு குடியிருந்தால், நீங்கள் அவனைப் பழிக்க வேண்டாம். 34 அப்படிப்பட்டவனைக் குடிமகன்போல் எண்ணி, நீங்கள் உங்களுக்கு அன்பு செய்வது போல் அவனுக்கும் அன்பு செய்ய வேண்டும். நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியராய் இருந்தீர்களன்றோ ? நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். 35 நீதித் தீர்ப்பிலும், நிறுத்தலிலும், அளத்தலிலும் அநியாயம் செய்யாதீர்கள். 36 முத்திரைத் துலாக்கோலும், முத்திரை எடைக்கல்லும், முத்திரை மரக்காலும், முத்திரைப் படியும் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்ட உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே. 37 நம்முடைய எல்லாக் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக் கொண்டு, அவற்றின்படி நடவுங்கள். நாம் ஆண்டவர் ( என்றார் ).
1 ஆண்டவர் மோயீசனை நோக்கி: .::. 2 இஸ்ராயேல் மக்கள் எல்லாச் சபையாருக்கும் நீ சொல்ல வேண்டியதாவது: நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்; நாம் பரிசுத்தராய் இருப்பதால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். .::. 3 உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் தந்தைக்கும் தாய்க்கும் அஞ்சக்கடவான். நமது ஓய்வு நாட்களை அனுசரித்து வாருங்கள். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். .::. 4 விக்கிரகங்களை நாடவும் வேண்டாம். வார்ப்பினால் செய்யப்பட்ட தெய்வங்களை உங்களுக்கெனச் செய்து கொள்ளவும் வேண்டாம். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். .::. 5 ஆண்டவர் ( உங்கள் மீது ) இரக்கம் கொள்ளும்படி நீங்கள் சமாதானப் பலியை அவருக்குச் செலுத்தினால், .::. 6 அது பலியிடப்பட்ட அந்நாளிலேயே அல்லது அடுத்த நாளிலே அதை உண்பீர்கள். மூன்றாம் நாளில் எஞ்சியிருப்பதை நெருப்பில் எரிக்கக் கடவீர்கள். .::. 7 இரண்டு நாளுக்குப் பின் அதை உண்பவன் அவமரியாதையுள்ளவனும், தெய்வ துரோகியுமாவான். .::. 8 ஆண்டவருக்குப் பரிசுத்தமானதை மாசு படுத்தினானாகையால் அவன் தன் தீச் செயலைச் சுமந்து, தன் இனத்திலிருந்து விலக்குண்டு போகக்கடவான். .::. 9 உன் நிலத்திலுள்ள பயிரை அறுக்கும் போது நீ பூமி மட்டத்தோடே அறுக்க வேண்டாம்; சிதறிக் கிடக்கிற கதிர்களையும் பொறுக்க வேண்டாம். .::. 10 அவ்வண்ணமே உன் திராட்சைத் தோட்டத்தில் விழுந்து கிடக்கிற பழக்குலைகளையோ பழங்களையோ பொறுக்கவேண்டாம். அவற்றை எளியவர்களுக்கும் அந்நியருக்கும் விட்டுவிடு. நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். .::. 11 களவு செய்யாதீர்கள். பொய் சொல்லாதீர்கள் எவனும் தன் பிறனை வஞ்சிக்கலாகாது. .::. 12 நமது பெயரைச் சொல்லிப் பொய்யாணையிடாதே; உன் கடவுளின் பெயரை அவமரியாதை செய்யாதே நாம் ஆண்டவர். .::. 13 உன் பிறன் மீது அபாண்டம் சொல்லாமலும், அவனை வலுவந்தத்தால் வருத்தாமலும் இருப்பாயாக. உன் கூலியாளின் வேலைக்குக் கொடுக்க வேண்டிய கூலியை வியற்காலைவரை உன்னிடம் வைத்திராதே. .::. 14 செவிடனைத் திட்டாமலும், குருடன் முன் இடறுகள் வைக்காமலும், உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவாயாக. ஏனென்றால், நாமே ஆண்டவர். .::. 15 அநீதி செய்யாதே. வழக்கிலே நீதிக்கு மாறாய்த் தீர்ப்பிடாதே. ஒருவன் ஏழையென்று கண்டு, அவனை அற்பமாய் எண்ணாதே. ஒருவன் பணக்காரனென்று பார்த்து முகத்தாட்சனியம் காட்டாதே. முறையோடு உன் பிறனுக்கு நீதி வழங்கு. .::. 16 நீ மக்களுக்குள்ளே குற்றம் சாட்டிக் கோள் சொல்லித் திரியாதே. உன் பிறனுடைய இரத்தப் பழிக்கு உள்ளாகாதே நாம் ஆண்டவர். .::. 17 உன் சகோதரனை உன் இதயத்தில் பகைக்காதே. ஆனால், அவனுடைய பாவத்திற்கு நீ உடந்தையாகாதபடிக்கு வெளிப்படையாய் அவனுக்கு அறிவுரை சொல். .::. 18 பழிக்குப் பழி வாங்கத் தேடாதே. உன் மக்கள் உனக்கு அநீதி செய்தாலும், மனத்தில் பொறாமை கொள்ளாதே. உனக்கு அன்பு செய்வது போல் உன் அயலானுக்கும் அன்பு செய். நாம் ஆண்டவர். .::. 19 நமது சட்டங்களைக் கைக்கொள். உன் மிருகங்களை வேற்றின மிருகத்தோடு பொலிய விடாதே. உன் வயலில் வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே. இரு விதமான நூல்களால் நெய்யப்பட்ட ஆடையை அணியாதே. .::. 20 அடிமைப பெண் ஒருத்தி, ஒருவனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து மீட்கப்படாமலும், விடுதலை அடையாமலும் இருக்கையிலே, அவளோடு ஒருவன் படுத்தானென்றால் அவர்கள் இருவரும் கொலை செய்யப்படாமல் அடிக்கப்படவேண்டும். ஏனென்றால், அந்தப் பெண் விடுதலை பெற்றவள் அல்ல. .::. 21 ஆனால், அவன் தன் குற்றத்துக்காகச் சாட்சியக் கூடார வாயிலிலே ஆண்டவருக்கு ஓர் ஆட்டுக்கிடாயைக் கொண்டு வருவான். .::. 22 குரு அவனுக்காகவும் அவன் பாவத்திற்காகவும் இறைவன் திருமுன் வேண்டுவார். அப்பொழுது ஆண்டவர் அவன் மேல் இரக்கம் கொள்வார். .::. 23 அவன் பாவமும் மன்னிக்கப்படும். நீங்கள் உங்கள் நாட்டில் புகுந்து, கனி தரும் மரங்களை நட்ட பின், அவைகளின் மிஞ்சின கிளைகளைக் கழிக்க வேண்டியதிருக்கும். அம் மரங்களின் கனிகள் உங்களுக்குத் தீட்டுள்ளவைகளாதலால், அவற்றை உண்ண வேண்டாம். .::. 24 நான்காம் ஆண்டில் அவற்றின் கனிகளெல்லாம் ஆண்டவருக்குக் காணிக்கையாக அருச்சிக்கப்பட்டு ஒதுக்கப்படும், .::. 25 பிறகு ஐந்தாம் ஆண்டில் நீங்கள் அவற்றின் கனிகளைப் பறித்து உண்ணலாம். நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். .::. 26 யாதொன்றையும் இரத்தத்தோடு உண்ண வேண்டாம். சகுனம் பார்க்கவும் வேண்டாம்; கனவுகளுக்குப் பொருள் தேடவும் வேண்டாம். .::. 27 உங்கள் தலைமயிரை வட்டமாய் வெட்டவும் தாடியைச் சிரைக்கவும் வேண்டாம். .::. 28 இழவை முன்னிட்டு உங்கள் சதையை வெட்டாமலும், உடலிலே எவ்விதமான சித்திரத்தையேனும் அடையாளத்தையேனும் குத்திக் கொள்ளாமலும் இருப்பீர்களாக. நாம் ஆண்டவர். .::. 29 நாடு அசுத்தமாகாதபடிக்கும், பாவக் கொடுமையால் நிறைந்து போகாதபடிக்கும் நீ உன் புதல்வியை வேசித்தனத்திற்கு உட்படுத்தாதே. .::. 30 நமது ஓய்வு நாட்களை அனுசரித்து வாருங்கள். கடவுளின் மூலத்தானத்தைக் குறித்துப் பயபக்தியாய் இருக்க வேண்டும். நாம் ஆண்டவர். .::. 31 நீங்கள் தீட்டுப்படாதபடிக்கும் பில்லிசூனியக்காரரை நாடவும் குறி சொல்லும் சகுனக்காரரிடம் யாதொன்றைக் கேட்கவும் வேண்டாம். .::. 32 நரை கொண்டவன் வரக்கண்டால் நீ எழுந்திரு. முதிர் வயதுள்ளவனை மதித்து நட. உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சியிரு. நாம் ஆண்டவர். .::. 33 யாரேனும் ஓர் அந்நியன் உங்கள் ஊரில் உங்களோடு குடியிருந்தால், நீங்கள் அவனைப் பழிக்க வேண்டாம். .::. 34 அப்படிப்பட்டவனைக் குடிமகன்போல் எண்ணி, நீங்கள் உங்களுக்கு அன்பு செய்வது போல் அவனுக்கும் அன்பு செய்ய வேண்டும். நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியராய் இருந்தீர்களன்றோ ? நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவர். .::. 35 நீதித் தீர்ப்பிலும், நிறுத்தலிலும், அளத்தலிலும் அநியாயம் செய்யாதீர்கள். .::. 36 முத்திரைத் துலாக்கோலும், முத்திரை எடைக்கல்லும், முத்திரை மரக்காலும், முத்திரைப் படியும் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்ட உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமே. .::. 37 நம்முடைய எல்லாக் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைக் கொண்டு, அவற்றின்படி நடவுங்கள். நாம் ஆண்டவர் ( என்றார் ).
  • லேவியராகமம் அதிகாரம் 1  
  • லேவியராகமம் அதிகாரம் 2  
  • லேவியராகமம் அதிகாரம் 3  
  • லேவியராகமம் அதிகாரம் 4  
  • லேவியராகமம் அதிகாரம் 5  
  • லேவியராகமம் அதிகாரம் 6  
  • லேவியராகமம் அதிகாரம் 7  
  • லேவியராகமம் அதிகாரம் 8  
  • லேவியராகமம் அதிகாரம் 9  
  • லேவியராகமம் அதிகாரம் 10  
  • லேவியராகமம் அதிகாரம் 11  
  • லேவியராகமம் அதிகாரம் 12  
  • லேவியராகமம் அதிகாரம் 13  
  • லேவியராகமம் அதிகாரம் 14  
  • லேவியராகமம் அதிகாரம் 15  
  • லேவியராகமம் அதிகாரம் 16  
  • லேவியராகமம் அதிகாரம் 17  
  • லேவியராகமம் அதிகாரம் 18  
  • லேவியராகமம் அதிகாரம் 19  
  • லேவியராகமம் அதிகாரம் 20  
  • லேவியராகமம் அதிகாரம் 21  
  • லேவியராகமம் அதிகாரம் 22  
  • லேவியராகமம் அதிகாரம் 23  
  • லேவியராகமம் அதிகாரம் 24  
  • லேவியராகமம் அதிகாரம் 25  
  • லேவியராகமம் அதிகாரம் 26  
  • லேவியராகமம் அதிகாரம் 27  
×

Alert

×

Tamil Letters Keypad References