தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எபேசியர்

எபேசியர் அதிகாரம் 6

1 பிள்ளைகளே, ஆண்டவருக்குள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; இதுவே முறை. 2 "தாய் தந்தையைப் போற்று" என்பதே வாக்குறுதியோடு கூடிய கட்டளைகளுள் முதலாவது. 3 "அப்போது மண்ணுலகில் நீ நலம்பெறுவாய், நீடூழி வாழ்வாய்" என்பது அவ்வாக்குறுதி. 4 தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்குச் சினமூட்டாதீர்கள் அவர்களைக் கண்டித்துத் திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும். 5 அடிமைகளே கிறிஸ்துவுக்கே கீழ்ப்படிவது போல், இவ்வுலகத்தில் உங்கள் தலைவராய் இருப்போருக்கு, அச்ச நடுக்கத்தோடும் நேர்மையான உள்ளத்தோடும் கீழ்ப்படிந்திருங்கள். 6 மனிதர்களுக்கு உகந்தவராகலாம் என்று, கண்முன் மட்டும் உழைப்பவர்களாய் இராமல், கிறிஸ்துவின் ஊழியர்களென, கடவுளுடைய திருவுளத்தை நெஞ்சாரா நிறைவேற்றுங்கள். 7 மனிதருக்குச் செய்வது போலன்றி, கடவுளுக்கே செய்வதுபோல், உற்சாகத்தோடு ஊழியம் செய்யுங்கள். 8 அடிமையாயினும் உரிமையுள்ளவனாயினும் நன்மை செய்யும் ஒவ்வொருவனும் ஆண்டவரிடமிருந்து கைம்மாறு பெறுவான்; இது உங்களுக்குத் தெரியுமன்றோ? 9 தலைவர்களே, நீங்களும் அடிமைகள் மட்டில் அவ்வாறே நடந்துகொள்ளுங்கள், அவர்களை மிரட்டுவதை விட்டு விடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தலைவர் வாகனத்தில் இருக்கிறார் என்பதும், அவர் முகத்தாட்சண்யம் பார்ப்பதில்லை என்பதும் நீங்கள் அறியாததன்று. 10 இறுதியாக, ஆண்டவரில் அவர் தரும் வலிமைமிக்க ஆற்றலால் உறுதி பெறுங்கள். 11 அலகையின் வஞ்சகத் தந்திரங்களை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை அணிந்து கொள்ளுங்கள். 12 ஏனென்றால், நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்கவோர், இருளில் மூழ்கிய இவ்வுலகின்மீது ஆதிக்கம் செலுத்துவோர். வான்வெளியில் திரியும் தீய ஆவிகள் ஆகிய இவர்களோடு போராடுகிறோம். 13 எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றியடைந்து நிலை நிற்க வலிமை பெறும்படி, கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். 14 ஆகையால் உண்மையை உங்கள் இடைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு நீதியை உங்கள் மார்புக் கவசமாக அணிந்து நில்லுங்கள். 15 சமாதான நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை உங்கள் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். 16 எந்நிலையிலும் விசுவாசமாகிய கேடயத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இதைக்கெண்டு நீங்கள் தீயவனின் தீக்கணைகளை அவிக்க முடியும். 17 மீட்பையே தலைச்சீராவாகத் தாங்கி,கடவுளின் சொல்லைத் தேவ ஆவி தரும் போர்வாளாக ஏந்திக்கொள்ளுங்கள். 18 செபிப்பதிலும் மன்றாடுவதிலும் நிலையாய் இருங்கள். தேவ ஆவியால் ஏவப்பட்ட எவ்வேளையிலும் செபியுங்கள். இதன்பொருட்டு, சோர்வுறாமல் விழிப்பாய் இருங்கள். 19 இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் நான் பேசும்போது நற்செய்தியின் மறை பொருளைத் துணிவுடன் வெளிப்படுத்தவதற்கு இறைவன் வார்த்தையை எனக்கு அளிக்கும் படி எனக்காகவும் மன்றாடுங்கள். 20 இந்த நற்செய்திக்காகவே நான் சிறைப்பட்ட தூதுவனாக இருக்கிறேன். பேச வேண்டிய முறையில், நான் அதைத் துணிவோடு எடுத்துரைக்க எனக்காக வேண்டுங்கள். 21 என் நிலைமை எப்படி இருக்கிறது என்னும் செய்திகளையெல்லாம் நீங்கள் அறிய விரும்புவீர்கள். எல்லாவற்றையும் அன்புள்ள சகோதரர் தீக்கிக்கு உங்களுக்கு அறிவிப்பார். அவர் ஆண்டவருக்குள் நம்பிக்கைக்குரிய பணியாளர். 22 எங்களைப்பற்றி உங்களுக்கு அறிவித்து உங்களைத் தேற்றுவதற்கென்றே அவரை உங்களிடம் அனுப்பினேன் 23 பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் சமாதானமும் சகோதரர்களுக்கு உண்டாகுக! 24 அழியா வாழ்வில் பங்கு பெற்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அன்பு செலுத்தும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக!
1. பிள்ளைகளே, ஆண்டவருக்குள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; இதுவே முறை. 2. "தாய் தந்தையைப் போற்று" என்பதே வாக்குறுதியோடு கூடிய கட்டளைகளுள் முதலாவது. 3. "அப்போது மண்ணுலகில் நீ நலம்பெறுவாய், நீடூழி வாழ்வாய்" என்பது அவ்வாக்குறுதி. 4. தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்குச் சினமூட்டாதீர்கள் அவர்களைக் கண்டித்துத் திருத்தி, ஆண்டவருக்கேற்ற முறையில் அறிவு புகட்டி வளர்த்தல் வேண்டும். 5. அடிமைகளே கிறிஸ்துவுக்கே கீழ்ப்படிவது போல், இவ்வுலகத்தில் உங்கள் தலைவராய் இருப்போருக்கு, அச்ச நடுக்கத்தோடும் நேர்மையான உள்ளத்தோடும் கீழ்ப்படிந்திருங்கள். 6. மனிதர்களுக்கு உகந்தவராகலாம் என்று, கண்முன் மட்டும் உழைப்பவர்களாய் இராமல், கிறிஸ்துவின் ஊழியர்களென, கடவுளுடைய திருவுளத்தை நெஞ்சாரா நிறைவேற்றுங்கள். 7. மனிதருக்குச் செய்வது போலன்றி, கடவுளுக்கே செய்வதுபோல், உற்சாகத்தோடு ஊழியம் செய்யுங்கள். 8. அடிமையாயினும் உரிமையுள்ளவனாயினும் நன்மை செய்யும் ஒவ்வொருவனும் ஆண்டவரிடமிருந்து கைம்மாறு பெறுவான்; இது உங்களுக்குத் தெரியுமன்றோ? 9. தலைவர்களே, நீங்களும் அடிமைகள் மட்டில் அவ்வாறே நடந்துகொள்ளுங்கள், அவர்களை மிரட்டுவதை விட்டு விடுங்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் ஒரு தலைவர் வாகனத்தில் இருக்கிறார் என்பதும், அவர் முகத்தாட்சண்யம் பார்ப்பதில்லை என்பதும் நீங்கள் அறியாததன்று. 10. இறுதியாக, ஆண்டவரில் அவர் தரும் வலிமைமிக்க ஆற்றலால் உறுதி பெறுங்கள். 11. அலகையின் வஞ்சகத் தந்திரங்களை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை அணிந்து கொள்ளுங்கள். 12. ஏனென்றால், நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்கவோர், இருளில் மூழ்கிய இவ்வுலகின்மீது ஆதிக்கம் செலுத்துவோர். வான்வெளியில் திரியும் தீய ஆவிகள் ஆகிய இவர்களோடு போராடுகிறோம். 13. எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று, அனைத்தின் மீதும் வெற்றியடைந்து நிலை நிற்க வலிமை பெறும்படி, கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். 14. ஆகையால் உண்மையை உங்கள் இடைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு நீதியை உங்கள் மார்புக் கவசமாக அணிந்து நில்லுங்கள். 15. சமாதான நற்செய்தியை அறிவிக்கும் ஆர்வத்தை உங்கள் மிதியடிகளாகப் போட்டுக் கொள்ளுங்கள். 16. எந்நிலையிலும் விசுவாசமாகிய கேடயத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இதைக்கெண்டு நீங்கள் தீயவனின் தீக்கணைகளை அவிக்க முடியும். 17. மீட்பையே தலைச்சீராவாகத் தாங்கி,கடவுளின் சொல்லைத் தேவ ஆவி தரும் போர்வாளாக ஏந்திக்கொள்ளுங்கள். 18. செபிப்பதிலும் மன்றாடுவதிலும் நிலையாய் இருங்கள். தேவ ஆவியால் ஏவப்பட்ட எவ்வேளையிலும் செபியுங்கள். இதன்பொருட்டு, சோர்வுறாமல் விழிப்பாய் இருங்கள். 19. இறைமக்கள் அனைவருக்காகவும் மன்றாடுங்கள் நான் பேசும்போது நற்செய்தியின் மறை பொருளைத் துணிவுடன் வெளிப்படுத்தவதற்கு இறைவன் வார்த்தையை எனக்கு அளிக்கும் படி எனக்காகவும் மன்றாடுங்கள். 20. இந்த நற்செய்திக்காகவே நான் சிறைப்பட்ட தூதுவனாக இருக்கிறேன். பேச வேண்டிய முறையில், நான் அதைத் துணிவோடு எடுத்துரைக்க எனக்காக வேண்டுங்கள். 21. என் நிலைமை எப்படி இருக்கிறது என்னும் செய்திகளையெல்லாம் நீங்கள் அறிய விரும்புவீர்கள். எல்லாவற்றையும் அன்புள்ள சகோதரர் தீக்கிக்கு உங்களுக்கு அறிவிப்பார். அவர் ஆண்டவருக்குள் நம்பிக்கைக்குரிய பணியாளர். 22. எங்களைப்பற்றி உங்களுக்கு அறிவித்து உங்களைத் தேற்றுவதற்கென்றே அவரை உங்களிடம் அனுப்பினேன் 23. பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் சமாதானமும் சகோதரர்களுக்கு உண்டாகுக! 24. அழியா வாழ்வில் பங்கு பெற்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது அன்பு செலுத்தும் அனைவரோடும் இறை அருள் இருப்பதாக!
  • எபேசியர் அதிகாரம் 1  
  • எபேசியர் அதிகாரம் 2  
  • எபேசியர் அதிகாரம் 3  
  • எபேசியர் அதிகாரம் 4  
  • எபேசியர் அதிகாரம் 5  
  • எபேசியர் அதிகாரம் 6  
×

Alert

×

Tamil Letters Keypad References