தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
1 சாமுவேல்

1 சாமுவேல் அதிகாரம் 29

1 பிலிஸ்தியர் படைகள் எல்லாம் அபேக்கில் கூடின. ஆனால் இஸ்ராயேலர் ஜெஸ்ராயேலில் இருந்த நீரூற்றின் அருகில் பாசறை அமைத்தனர். 2 பிலிஸ்திய ஆளுநர்கள் ஆயிரக்கணக்கான தங்கள் படை வீரர்களுடன் நடந்து போவார்கள். தாவீதும் அவனுடைய ஆட்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் இருந்தனர். 3 பிலிஸ்தியத் தலைவர்கள் ஆக்கீசை நோக்கி, "இந்த எபிரேயர்களுக்கு என்ன வேண்டும்?" என்றனர். ஆக்கீசு பிலிஸ்தியத் தலைவர்களை நோக்கி, "இஸ்ராயேலின் அரசர் சவுலின் ஊழியனாய் இருந்த இந்தத் தாவீது நீண்ட நாட்களாய், பல ஆண்டுகளாய் என்னோடு இருக்கிறான். நீங்கள் அவனை அறியாதிருக்கிறீர்களோ? அவன் என்னிடம் வந்த நாள் முதல் இன்று வரை நான் ஒரு குற்றமும் அவனிடம் கண்டதில்லை" என்றான். 4 பிலிஸ்தியத் தலைவர்கள் மிகவும் கோபமுற்று அவனை நோக்கி, "இந்த தாவீதுக்கு நீர் கொடுத்துள்ள ஊருக்கு அவன் திரும்பிப் போக வேண்டும். நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போர் தொடங்கியவுடன் அவன் நமக்கு எதிரியாகி விடக்கூடுமன்றோ? ஏனெனில் அவன் நம்முடைய தலைகளை வெட்டி வீழ்த்துவதால் அன்றி வேறு எதனால் தன் தலைவனுக்குப் பிரியப்பட நடந்து கொள்ளமுடியும்? 5 'சவுல், ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று சொல்லி இஸ்ராயேலர் ஆடிப்பாடி வாழ்த்தினார்களே! இவன் தானே அந்தத் தாவீது?" என்று சொன்னார்கள். 6 ஆக்கீசு தாவீதை அழைத்து அவனை நோக்கி, "ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மை மிக்கவர்; என் முன்னிலையில் நல்லவராய் இருக்கிறீர். நீர் பாசறையில் என்னோடு போகவர இருக்கிறீர். நீர் என்னிடம் வந்த நாள் முதல் இன்று வரை உம்மில் தீமை ஒன்றையும் நான் கண்டதில்லை. ஆனால் ஆளுநர்களுக்கு உம்மைப் பிடிக்கவில்லை. 7 ஆகையால், பிலிஸ்திய ஆளுநர்கள் உம் எதிரிகளாய்த் திரும்பாதபடி இப்போதே சமாதானமாய்ப் போய்விடும்" என்றான். 8 தாவீது ஆக்கீசை நோக்கி, "ஏன்? நான் செய்த தவறு என்ன? அரசராகிய என் தலைவரின் எதிரிகளோடு போரிடாதபடி, நான் உம்மிடம் வந்த நாள் முதல் இன்று வரை உம் ஊழியனாகிய என்னிடம் என்ன குற்றம் கண்டீர்?" என்றான். 9 ஆக்கீசு தாவீதைப் பார்த்து, "ஆண்டவரின் தூதரைப் போல் நீர் என் பார்வைக்கு நல்லவராய் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். ஆயினும் 'இவன் எங்களோடு போருக்கு வரலாகாது' என்று பிலிஸ்தியத் தலைவர்கள் சொல்லுகிறார்கள். 10 ஆகையால், நீரும் உம்முடன் வந்த உம் தலைவரின் ஊழியர்களும் நாளை அதிகாலையில் எழுந்திருங்கள்; இப்படி இரவில் எழுந்து விடியும் நேரத்தில் புறப்பட்டுப் போங்கள்" என்றான். 11 அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் அதிகாலையில் எழுந்து பிலிஸ்தியர் நாட்டுக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டார்கள். பிலிஸ்தியரோ ஜெஸ்ராயேலுக்குப் போனார்கள்.
1. பிலிஸ்தியர் படைகள் எல்லாம் அபேக்கில் கூடின. ஆனால் இஸ்ராயேலர் ஜெஸ்ராயேலில் இருந்த நீரூற்றின் அருகில் பாசறை அமைத்தனர். 2. பிலிஸ்திய ஆளுநர்கள் ஆயிரக்கணக்கான தங்கள் படை வீரர்களுடன் நடந்து போவார்கள். தாவீதும் அவனுடைய ஆட்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் இருந்தனர். 3. பிலிஸ்தியத் தலைவர்கள் ஆக்கீசை நோக்கி, "இந்த எபிரேயர்களுக்கு என்ன வேண்டும்?" என்றனர். ஆக்கீசு பிலிஸ்தியத் தலைவர்களை நோக்கி, "இஸ்ராயேலின் அரசர் சவுலின் ஊழியனாய் இருந்த இந்தத் தாவீது நீண்ட நாட்களாய், பல ஆண்டுகளாய் என்னோடு இருக்கிறான். நீங்கள் அவனை அறியாதிருக்கிறீர்களோ? அவன் என்னிடம் வந்த நாள் முதல் இன்று வரை நான் ஒரு குற்றமும் அவனிடம் கண்டதில்லை" என்றான். 4. பிலிஸ்தியத் தலைவர்கள் மிகவும் கோபமுற்று அவனை நோக்கி, "இந்த தாவீதுக்கு நீர் கொடுத்துள்ள ஊருக்கு அவன் திரும்பிப் போக வேண்டும். நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போர் தொடங்கியவுடன் அவன் நமக்கு எதிரியாகி விடக்கூடுமன்றோ? ஏனெனில் அவன் நம்முடைய தலைகளை வெட்டி வீழ்த்துவதால் அன்றி வேறு எதனால் தன் தலைவனுக்குப் பிரியப்பட நடந்து கொள்ளமுடியும்? 5. 'சவுல், ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று சொல்லி இஸ்ராயேலர் ஆடிப்பாடி வாழ்த்தினார்களே! இவன் தானே அந்தத் தாவீது?" என்று சொன்னார்கள். 6. ஆக்கீசு தாவீதை அழைத்து அவனை நோக்கி, "ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மை மிக்கவர்; என் முன்னிலையில் நல்லவராய் இருக்கிறீர். நீர் பாசறையில் என்னோடு போகவர இருக்கிறீர். நீர் என்னிடம் வந்த நாள் முதல் இன்று வரை உம்மில் தீமை ஒன்றையும் நான் கண்டதில்லை. ஆனால் ஆளுநர்களுக்கு உம்மைப் பிடிக்கவில்லை. 7. ஆகையால், பிலிஸ்திய ஆளுநர்கள் உம் எதிரிகளாய்த் திரும்பாதபடி இப்போதே சமாதானமாய்ப் போய்விடும்" என்றான். 8. தாவீது ஆக்கீசை நோக்கி, "ஏன்? நான் செய்த தவறு என்ன? அரசராகிய என் தலைவரின் எதிரிகளோடு போரிடாதபடி, நான் உம்மிடம் வந்த நாள் முதல் இன்று வரை உம் ஊழியனாகிய என்னிடம் என்ன குற்றம் கண்டீர்?" என்றான். 9. ஆக்கீசு தாவீதைப் பார்த்து, "ஆண்டவரின் தூதரைப் போல் நீர் என் பார்வைக்கு நல்லவராய் இருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். ஆயினும் 'இவன் எங்களோடு போருக்கு வரலாகாது' என்று பிலிஸ்தியத் தலைவர்கள் சொல்லுகிறார்கள். 10. ஆகையால், நீரும் உம்முடன் வந்த உம் தலைவரின் ஊழியர்களும் நாளை அதிகாலையில் எழுந்திருங்கள்; இப்படி இரவில் எழுந்து விடியும் நேரத்தில் புறப்பட்டுப் போங்கள்" என்றான். 11. அப்படியே தாவீதும் அவனுடைய மனிதர்களும் அதிகாலையில் எழுந்து பிலிஸ்தியர் நாட்டுக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டார்கள். பிலிஸ்தியரோ ஜெஸ்ராயேலுக்குப் போனார்கள்.
  • 1 சாமுவேல் அதிகாரம் 1  
  • 1 சாமுவேல் அதிகாரம் 2  
  • 1 சாமுவேல் அதிகாரம் 3  
  • 1 சாமுவேல் அதிகாரம் 4  
  • 1 சாமுவேல் அதிகாரம் 5  
  • 1 சாமுவேல் அதிகாரம் 6  
  • 1 சாமுவேல் அதிகாரம் 7  
  • 1 சாமுவேல் அதிகாரம் 8  
  • 1 சாமுவேல் அதிகாரம் 9  
  • 1 சாமுவேல் அதிகாரம் 10  
  • 1 சாமுவேல் அதிகாரம் 11  
  • 1 சாமுவேல் அதிகாரம் 12  
  • 1 சாமுவேல் அதிகாரம் 13  
  • 1 சாமுவேல் அதிகாரம் 14  
  • 1 சாமுவேல் அதிகாரம் 15  
  • 1 சாமுவேல் அதிகாரம் 16  
  • 1 சாமுவேல் அதிகாரம் 17  
  • 1 சாமுவேல் அதிகாரம் 18  
  • 1 சாமுவேல் அதிகாரம் 19  
  • 1 சாமுவேல் அதிகாரம் 20  
  • 1 சாமுவேல் அதிகாரம் 21  
  • 1 சாமுவேல் அதிகாரம் 22  
  • 1 சாமுவேல் அதிகாரம் 23  
  • 1 சாமுவேல் அதிகாரம் 24  
  • 1 சாமுவேல் அதிகாரம் 25  
  • 1 சாமுவேல் அதிகாரம் 26  
  • 1 சாமுவேல் அதிகாரம் 27  
  • 1 சாமுவேல் அதிகாரம் 28  
  • 1 சாமுவேல் அதிகாரம் 29  
  • 1 சாமுவேல் அதிகாரம் 30  
  • 1 சாமுவேல் அதிகாரம் 31  
×

Alert

×

Tamil Letters Keypad References