1 இசாக்காருக்கு தோலா, பூவா, யாசுப், சிமெரோன் என்ற நான்கு புதல்வர்கள் இருந்தனர்.2 ஓசி, ரப்பாயியா, எரியேல், ஏமாயி, எப்சேம், சாமுவேல் என்ற தோலாவின் புதல்வர்கள் தங்கள் குடும்பங்களின் தலைவர்களாய் விளங்கினார்கள். தாவீதின் காலத்திலே தோலாவின் குலத்தில் இருபத்திரண்டாயிரத்து அறுநூறு ஆற்றல் மிக்க வீரர் இருந்தனர்.3 ஓசியின் மகன் பெயர் இசுராயியா. இவருக்கு மிக்காயேல், ஒபாதியா, யொவேல், ஏசியா என்ற ஐவர் பிறந்தனர். இவர்கள் எல்லாரும் மக்கள் தலைவர்களாய் இருந்தார்கள்.4 இவர்களோடு இவர்களின் குடும்பங்களிலும் மக்களிலும் போர் செய்யப் பயிற்சி பெற்றிருந்த வலிமை மிக்க வீரர் முப்பத்து ஆறாயிரம் பேர் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்குப் பல மனைவியரும் மக்களும் இருந்தனர்.5 தவிர, இசாக்காரின் குடும்பம் முழுவதிலும் அவர்களுடைய சகோதரரில் போர் செய்யத் தக்க ஆற்றல் மிக்கவர் எண்பத்தேழாயிரம் பேர் இருந்தனர்.6 பென்யமீன் புதல்வர் பேலா, பேக்கோர், யாதியேல் என்ற மூவர்.7 பேலாவின் புதல்வரான எஸ்போன், ஓசி, ஓசியேல், எரிமோத், உராயி ஆகிய ஐவரும் குடும்பத்தலைவர்களும், போர் செய்யத்தக்க ஆற்றல் மிக்கவருமாவர். அவர்கள் மொத்தம் இருபத்திரண்டாயிரத்து முப்பத்து நான்குபேர்.8 பேக்கோரின் புதல்வர் சமீரா, யோவாசு, எலியெசார், எலியோனாயி, அம்ரி, எரிமோத், அபியா, அனத்தோத், அல்மாத் எனப்படுவர். இவர்கள் எல்லாரும் பேக்கோரின் புதல்வர்.9 குடும்பத்தலைவர்களும், ஆற்றல் வாய்ந்த போர் வீரர்களுமாய் இருந்த இவர்களின் தொகை இருபதினாயிரத்து இருநூறு.10 யாதியேலின் மகன் பெயர் பாலான். பாலானின் புதல்வரோ ஏகூஸ், பென்யமீன், ஆயோத், கனானா, சேதான், தார்சீஸ், அகிசகார் எனப்படுவர்.11 யாதியேலின் மக்களான இவர்கள் எல்லாரும் தத்தம் குடும்பங்களின் தலைவர்களும் ஆற்றல் மிக்கவருமாவர். இவர்களுள் போருக்குச் செல்ல வல்லவர்கள் பதினேழாயிரத்து இருநூறு பேர்.12 செப்பாமும் அப்பாமும் ஈருவின் புதல்வர். ஆகேரின் மகன் பெயர் ஆசிம்.13 நெப்தலியின் புதல்வர்கள் யாசியேல், கூனி, ஏசெர், செல்லும் ஆகியோர். இவர்கள் பாலாவின் வயிற்றில் பிறந்தவர்கள்.14 மனாசேயின் மக்கள்: எஸ்ரியேல்; இவரை மனாசேயினுடைய வைப்பாட்டியான அரமேயப் பெண் பெற்றெடுத்தாள், கலாதின் தந்தை மக்கீரையும் அவள் பெற்றாள்.15 மக்கீரோ தம் புதல்வர் ஆப்பீமுக்கும் சாப்பானுக்கும் பெண் கொண்டார். அவருக்கு மாக்கா என்ற சகோதரி இருந்தாள். மனாசேயின் இரண்டாவது புதல்வன் பெயர் சல்பாத். சல்பாத்துக்கும் புதல்வியர் பிறந்தனர்.16 மக்கீரின் மனைவி மாக்கா ஒரு மகனைப் பெற்று அவனுக்குப் பாரேஸ் என்று பெயரிட்டாள். இவருடைய சகோதரரின் பெயர் சாரேஸ்; இவருடைய புதல்வர் ஊலாம், ரேக்கேன் ஆகியோர்.17 ஊலாமுடைய மகன் பாதான். இவர்கள் மனாசேயின் மகனான மக்கீருக்குப் பிறந்த கலாதின் மக்கள்.18 அவருடைய சகோதரியான அம்மேலெகேத் ஈஷ்கோதையும் அபியேசேரையும் மொகோலாவையும் பெற்றாள்.19 செமிதாவின் புதல்வர் ஆகீன், சேக்கேம், லேகி, அனியாம் என்பவராம்.20 எப்பிராயீமின் மகன் பெயர் சுத்தலா; இவருடைய மகன் பெயர் பாரேத்; இவருடைய மகன் பெயர் தகாத்; இவருடைய மகன் பெயர் எலதா; இவருடைய மகன் பெயர் தகாத்; இவருடைய மகன் பெயர் சாபாத்;21 இவருடைய மகன் பெயர் சுத்தலா; இவருடைய புதல்வர் ஏசேர், எலாத் என்பவர்கள். ஆனால் இவர்களது உடைமையைக் கைப்பற்ற வேண்டி, கேத் நாட்டைச் சேர்ந்த மனிதர் வந்து அவர்களைக் கொலை செய்தனர்.22 எனவே இவர்களின் தந்தை எப்பிராயீம் இவர்களைக் குறித்துப் பலநாள் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய சகோதரர் அவரைத் தேற்ற வந்தனர்.23 பிறகு அவர் தம் மனைவியுடன் மணவுறவு கொண்டார். அவளும் கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். தம் வீட்டுக்குத் துன்பம் நேர்ந்த காலத்தில் அப்பிள்ளை பிறந்தமையால், அவனுக்குப் பேரியா என்ற பெயர் வைத்தார்.24 அவருடைய மகள் பெயர் சாரா; இவள் கீழ் பெத்தரோனையும் மேல்பெத்தரோனையும் ஒசெஞ்சாராவையும் கட்டி எழுப்பினாள்.25 மேலும் அவருக்கு ராபா, ரெசேப், தாலே என்ற மக்களும் பிறந்தனர். தாலே தாவானைப் பெற்றார்; இவர் லாதனைப் பெற்றார்;26 இவர் அமியுதைப் பெற்றார்; இவர் எலிசாமைப் பெற்றார்;27 இவரிடமிருந்து நூன் பிறந்தார்; நூனின் மகன் பெயர் யோசுவா.28 பேத்தேலும் அதன் சிற்றூர்களும், கிழக்கே நோரானும், மேற்கே காசேரும் அதன் சிற்றூர்களும், சிக்கேமும் அதன் சிற்றூர்களும், ஆசாவும் அதன் சிற்றூர்களுமே அவர்களுடைய உடைமைகளும் குடியிருப்புமாய் இருந்தன.29 மேலும், மனாசேயின் புதல்வரை அடுத்து இருந்த பெத்சானும் அதன் சிற்றூர்களும், தானாக்கும் அதன் சிற்றூர்களும், மகெதோவும் அதன் சிற்றூர்களும், தோரும் அதன் சிற்றூர்களும் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்தன. அந்த இடங்களில் இஸ்ராயேலின் புதல்வன் யோசேப்பின் மக்கள் வாழ்ந்து வந்தனர்.30 ஆசேரின் மக்கள்: எம்னா, ஏசுவா, எசுவி, பாரியா என்பவர்களும், அவர்களின் சகோதரி சாராள் என்பவளுமாம்.31 பாரியாவின் புதல்வரோ: ஏபேர், மெல்கியேல் ஆகியோர். மெல்கியேல் பர்சாயித் என்பவரின் தந்தை.32 எபேரோ எப்லாத், சோமேர், ஒத்தாம் என்பவர்களையும், இவர்களின் சகோதரி சுவாளையும் பெற்றார்.33 எப்லாத்தின் புதல்வர் பெயர் பொசேக், காமால், ஆசோத் ஆகும்.34 சோமேரின் புதல்வரோ ஆகி, ரொவாகா, ஆபா, ஆராம் என்பவர்கள்.35 அவருடைய சகோதரரான ஏலேமின் புதல்வர்: சூப்பா, எம்னா, செல்லேஸ், ஆமால் ஆகியோர்.36 சூப்பாவின் புதல்வர் பெயர் சுவே, அர்னப்பெர், சுவால், பேரி, யம்ரா,37 போசோர், ஏத், சம்மா, சலூசா, ஏத்ரான், பேரா என்பனவாம்.38 ஒத்தேருடைய புதல்வர் எப்போனே, வசுவா, ஆரா ஆகியோர்.39 ஆரேயெ, ஆனியேல், ரேசியா ஆகியோர் ஒல்லாவுடைய புதல்வர்கள்.40 ஆசேரின் குலத்திலே தோன்றிய இவர்கள் அனைவரும் தத்தம் குடும்பங்களுக்குத் தலைவராய் இருந்தனர். மேலும் படைத்தலைவர்களுக்கெல்லாம் தலைவர்களாகவும் விளங்கி வந்தார்கள். அவர்களிலே போர் செய்யத்தக்க வயதுடையவர்களின் எண்ணிக்கை இருபத்து ஆறாயிரம்.